- ' இப்படி செய்திருக்கலாம்'' என்ற அனுதாபத்தை விட '' இப்படி செய்யலாம்'' என்ற கருத்தே வரவேற்கப்படுகிறது...
- வைராக்கியம் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே சாதனைகள் பிறக்கும்.....
- ஒரு பிரச்சனை உங்களிடம் கொண்டு வரப்படும் "தீர்வு என்னிடமே உள்ளது" என குதிக்காதீர்கள்.. பெரும்பாலான பிரச்சனைகள் தீர்வை தேடி அல்ல, ஆறுத்தைத் தேடியே பகிரப்படுகின்றன..
- ஒருவர் அடையும் தோல்வி மட்டுமல்ல , வெற்றி கூட பல முகங்களை வெளிச்சம் காட்டும் ஒளிக்கருவிதான்...
தலைப்புகள்
- அஞ்சலி (1)
- அனுபவம் (34)
- எண்ணக்கீற்றுகள் (14)
- என் பிள்ளைகளின் உலகம் (26)
- கட்டுரை (15)
- கவிதை (67)
- திரை விமர்சனம் (3)
- நன்றி அறிவித்தல் (1)
- நிகழ்வுகள் (1)
- நினைவுகள் (3)
திங்கள், 10 செப்டம்பர், 2018
எண்ணக்கீற்றுகள் (14)
கண்ணாடி
வெந்நீர் குளியல் முடித்ததும்
நீராவியால் சூழ்ந்திருக்கும்
கண்ணாடியை
சில வார்த்தைகளை நிரப்பி
மீட்டெடுப்பது அவள் வழக்கம் .....
சில நாட்கள்
அவள் விரல்களுக்கு
பழகிப்போன
அகன்ற கண்கள் கொண்ட
பெண் முகம்
ஓவியமாய் மிளிரும்...
சில நாட்கள்
கடவுளின் பெயரால்
கண்ணாடி தன்னிலை
படுத்தப்பட்டிருக்கும் .....
சில நாட்கள்
எங்களிருவரின் பெயர்களுக்கு
நடுவில் இதயக்குறி
கண் சிமிட்டும்.....
சில நாட்களோ
எங்கள் குடும்பத்தின்
அத்தனை பெயர்களும்
இணைந்து நீராவியை
விலக்கி விட்டிருக்கும் ....
ஏதேதோ சிந்தனைகளும்
அவசரமும்
அவள் விரல்களை
கட்டிப் போட்டிருப்பதை
ஏதும் எழுதப்படாத
வெற்று கண்ணாடி
நாட்கள் உணர்த்தும்......
இத்தனை இருந்தும்
உணர்ச்சிகளை குளியல்
மனதிலிருந்தும்
கழுவி விடுவதாலோ என்னவோ
குளியலுக்கு முந்தைய
உணர்வுப் பிழம்பான
வார்த்தைகளை மட்டும்
ஒருநாளும் தன்மேல்
ஞாயிறு, 9 செப்டம்பர், 2018
காதல்
காதல் துளிர்ப்பதற்க்கும்
துளிர்த்தது வளர்வதற்க்கும்
நிறைய மெனக்கெடல்கள்
தேவையில்லை....
நீ எனக்கு பிரதானம்
என உணர்த்தும்
சிறு சிறு செய்கைகள்
போதும்.....
அந்த சிறு சிறு
அன்பு பாராட்டலால்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
காதல்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
