உத்தரபிரதேசத்தில் தன் வாழ்வாதாரத்துக்காக சாலையோரம் இருந்து தட்டச்சு செய்து கொடுத்து வந்த ஒரு வயதானவரின் தட்டச்சு இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து ஒரு காவலர் உடைத்தது இணையத்தில் பலத்த எதிர்ப்பையும், அம்முதியவரின் மீது பரிதாபமும் ஏற்பட வைத்தது.. காவலரின் செயலை அறிந்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உடனடியாக வாங்கி கொடுக்க உத்தரவு பிறப்பித்து வாங்கியும் கொடுக்கப்பட்டது..
வாங்கிய கடனுக்கு தவணை கட்டாததால் விவசாயியை தாக்கி டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகளைக் கண்டித்தும் கிளம்பிய எதிர்ப்பு, அதற்கு பின்னான நாட்களில் வேறு இடத்தில் தவணை செலுத்ததால் டிராக்டரை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகளை மக்களே சிறை பிடிக்கும் அளவுக்கும் சென்றது.. சில நடிகர்களின் உதவியால் அவரின் டிராக்டரும் மீட்கப்பட்டது..
இவர்களின் மீது நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றாலும் அவர்களின் மீது குற்றம் சொல்ல எதிர்த்தரப்புக்கு ஒரு காரணமும் இருந்தது.. ஆனாலும் பார்வைக்கு தெரிந்த இது போன்ற தாக்குதல்களில் உடனியாகப் பரிதாபப்பட்டு எதிர்க்கும் நமக்கு, பார்வைக்கு தெரிந்தும் தெரியாமலும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக குற்றமே செய்யாமல் மன ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இரு முதியவர்களைப் பற்றி அச்செய்தி வரும்போது பரிதாபப்பட்டு (மேற்சொன்ன சம்பவங்களில் எழுந்த எதிர்ப்பில் பாதி கூட இதற்கு இருக்காது என்பது வேறு விஷயம்) வேறு செய்தி வந்தவுடம் இதை மறக்கவும் வைக்கப்படுகிறோம் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களாலும் ...
சக மனிதர்களோ ,வேறு உயிரினங்களோ தங்கள் உடலின் தாக்குதலை எதிர்கொள்வதை பார்க்கும்போது மட்டும்தான் எல்லோருக்கும் கண்ணீரும் பரிதாபமும் வருமோ என்ற சந்தேகம் இவர்களைப் பற்றி பார்க்கவோ, படிக்கவோ நேரும்போதெல்லாம் என்னுள் எழுவதுண்டு..
கடந்த சில மாதங்களாக பேரறிவாளன் பற்றிய செய்திகளைப் பார்த்தாலோ , தொலைக்காட்சியில் கேட்க நேர்ந்தாலோ மேற்கொண்டு படிக்காமலும், பார்க்காமலும் ஒரு வருத்தத்தோடு கடந்து விடுவேன்.. ஏனெனில்அவரை சுற்றி அரசியல்வாதிகளாலும் மற்றும் சிலராலும் பின்னிவைக்கப்பட்டு இருக்கும் சதிகார வலை பின்னலில் இருந்து அவரை எடுப்பது போல் கை நீள்வதும் பின் எடுக்காமல் விடுவதுமென வேடிக்கை காட்டி பிழைக்கும் அரசியல்வாதிகளின் செயல் உண்டாக்கும் வெறுப்பை தாண்டியும் பேரறிவாளன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் நிலை என்னை சில மணித்துளிகள் வேதனையில் போட்டு வாட்டி எடுக்கும்.. இன்னொன்று இதை படித்து வேதனை மட்டுமே படக்கூடிய நிலையில்தானே நாம் இருக்கிறோம் என்ற தவிப்பும்...
இன்று பேரறிவாளின் தாய் அற்புதம்மாளைப் பற்றி ஒரு பதிவை எதேச்சையாகப் படிக்க நேர்ந்தது.. திரும்ப அந்த பாரம் நெஞ்சில் அடைந்திருக்கிறது.. இது எழுதியும் தீராத பாரம்..
குற்றமே செய்யாதபோதும் ,அதை அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியே பல வருடங்களுக்குப் பின் ஒப்புக்கொண்டபோதும் அவரின் விடுதலை என்பது அரசியல்வாதிகளை பிழைக்க வைக்கும் ஒரு வார்த்தையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.. தெரியாமல் பாட்டரி(Battery ) வாங்கிக் கொடுத்தது என்றாலும் அது தவறுதான் என கூறினால்,25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்ததை கணக்கில் கொண்டாவது தீர்வு எடுக்கலாமே என்று நமக்கு இருக்கும் பரிதவிப்பு அரசியல்வாதிகளுக்கு வரவேயில்லை..
இந்த நேரத்தில் சஞ்சய் தத் வேறு நினைவில் வந்து நீதியை நினைக்க வைத்து எரிச்சலை கிளப்பி விட்டுப் போகிறார்.. மட்டுமல்ல, ஒவ்வொருமுறையும் சரப்ஜித் சிங்கின் நினைவு கூட வந்து வாட்டுகிறது..
25 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திற்கு , ஒரு மனிதனுக்கு கிடைத்திருக்க வேண்டிய சந்தோஷம் , மனதிருப்தி , நெகிழ்ச்சி, ஆனந்தக்கண்ணீர், குடும்ப வாழ்வு, குழந்தைகள் எல்லாவற்றையும் பறித்து விட்டு போராட்டத்தையும் , வேதனையையும் , கண்ணீரையும் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் ஆள்பவர்களை கொண்ட நாட்டில் நாமும்தான் வேறு என்ன செய்ய இயலும், சிறிது நேரத்தில் இதை மறந்து வேறு சொந்த வேலையிலோ, பொது செய்தியிலோ மனதை செலுத்துவதைத்தவிர...
பேரறிவாளனுக்கும், அவரின் பெற்றோருக்கும் ஒவ்வொருமுறையும் விடுதலை என ஆசை காட்டி எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகத்தை செய்து கொண்டு வருகின்றனர்.. இப்போது கூட இத்தேர்தலுக்கு முன்னர் மகன் விடுதலை செய்யப்படுவார் என்று அந்தத்தாய் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்து விட்டதே....இருந்தும் இன்னும் கூட நம்பிக்கையை மனதிலும் கண்ணீரை விழியிலும் ஏந்தி அந்தத்தாய் போராடிக்கொண்டே இருக்கிறார்.. அந்தத்தாயின் இத்தனை வருட கண்ணீர் போராட்டத்திற்காகவாவது பேரறிவாளனின் விடுதலை சாத்தியப்படவேண்டும் என்று ஆசை..
பரிதாபப்பட்டாலும் கோபப்பட்டாலும் கடவுளிடம் வேண்டுவதைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ள பலரில் ஒருத்தியாக ஒரு தாயின் போராட்டம் அந்த தாய் எதிர்பார்க்கும் நல்ல முடிவுடன் முடிய பிரார்த்திக்கிறேன்..