ஒரு வாரம் முன்பு சென்னை 28 -II பார்த்துவிட்டு வந்தோம்.. எப்போதும் போல "படம் பிடிச்சுருக்காப்பா" என்ற கேள்விக்கு கணவரிடம் இருந்து "ரொம்ப பிடிச்சு இருக்கு" என பதில் வந்தது..
பின் வீட்டுக்கு வந்தும் கூட அந்த சினிமாவை பற்றி யோசித்ததாலோ என்னவோ "எனக்கு அந்த படம் ரொம்ப பிடிச்சு இருக்கு , கல்யாணம் ஆகி உங்ககிட்ட நாங்க படற கஷ்டத்தை நேர்ல பார்க்கற மாதிரி இருக்குதில்லயா , அது கூட காரணமா இருக்கலாம் " என அவர் சொல்லி முடித்ததும் , "எப்போது ஊருக்கு போனாலும் வீட்டில் இருக்கும் நேரத்தை விட நண்பர்களிடம் உட்கார்ந்து கதை அடித்து நேரம் செலவிடுவதற்கு அவர் செல்லும்போது , மறுப்பு கூறாது வழி அனுப்பி, வழி மேல் விழி வைத்தும் , இங்கும் கூட "நண்பர்களுடன் டின்னர், ஒரு சின்ன பார்ட்டி , சோ நான் போய்ட்டு வர லேட் ஆகும் , சாவி நான் கொண்டு போறேன் , நீ தூங்கு" என சொல்லும்போதெல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் இரவு 2 , 3 மணி வரை வராத உறக்கத்தை மற்றவர்களின் முகநூல் எழுத்துக்களை வாசித்தவாறே வராமலே செய்து , அவர் கதவு திறந்ததும் "என்னப்பா, இவ்வளவு லேட்டா" என பதில் தேவையில்லாத கேள்வியை வெறுமனே எழுப்பி தூங்க போகும் மனைவிக்கு நேர்ந்த துர்ப்பெயரை நினைத்து கொஞ்சம் கலங்கித்தான் போனேன்...
பொதுவாகவே ஆண்களுக்குத்தான் நட்பை உருவாக்கிக் கொள்வதிலும் , பேணிக்காப்பதிலும் எந்த நடைமுறை சிக்கல்களும் அதிகம் இருப்பதில்லை.. ஆரம்ப கால பல பள்ளி நட்புகள் கூட இறுதி காலம் வரை பயணிக்கும் அளவுக்கு வரம் வாய்த்தவர்கள்.. இன்னொன்று நண்பர்களுக்குள் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை பிரச்சனையாகப் பார்க்காத உள்ளம் ஆண்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறதோ என தோன்றும்படி பல நட்புகளை அவர்களுக்குள் பார்த்திருக்கிறேன்..
ஆனால் பெண்கள் விஷயத்தில், முதல் விஷயமாக அவர்கள் மனம் ஒத்த பெண் நட்புகள் வாய்ப்பது அபூர்வம்.. அப்படியே வாய்த்தலும் அந்த நட்பு சூழ்நிலை பிரச்சனைகளுக்கு முன்பாகவே மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் முடிவும் பெறாமல் இருப்பது அபூர்வம்..
அப்படியும் நீடிக்கும் பெண்களின் நட்பு என்பது காலத்திற்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது.. பள்ளி, கல்லூரி, சுற்றுப்புறம் என்று பழகிய நட்புகளுக்கெல்லாம் திருமணம் என்ற ஒன்று இடைஞ்சலாகி வழி அனுப்பி வைத்திருக்கும்.. பின் எந்த ஊரில் எல்லாம் வசிக்கிறார்களோ அந்த பகுதிகளில் தோன்றிய நட்புறவு அடுத்த ஊர்களுக்கு போகும்போது கொஞ்சம் நிறம் மங்கிப் போயிருக்கும்.. ஆண்களுக்கும் இது ஒத்து போகும் என்றாலும் , அதை சந்திப்பு என்ற நிகழ்வின் மூலம் பேணிக்காப்பதில் அவர்களுக்கு எல்லா உரிமையும் இந்த சமூகத்தாலும் குடும்பத்தாலும் அளிக்கப்படுகிறது..
ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல , ஒரு நத்தை தன் கூட்டை சுமந்து திரிவதை போல , அவளும் தன் குடும்ப நினைவுகள், பிள்ளைகள் என சுமந்து கொண்டேதான் செல்ல வேண்டும்.. பிள்ளைகள் வளர்ந்தவர்களென்றால் கொஞ்சம் சாத்தியப்படும் என்றாலும் தோழியை பார்க்க செல்கிறோம் என்றால் , குடும்பம்,குழந்தைன்னு வந்தாச்சு , இனியும் என்ன பிரெண்ட்ஸ் , அவ உன்னை பார்க்க வர்றாளா, இல்லையே , எல்லோரும் அவங்கவங்க வாழ்க்கையை பார்க்கறாங்க" என்பது போல வார்த்தைகள் வந்து தடுத்து வைக்கும்.. எதிர்தரப்பிலும் இதே போல் நிலைமை வேறுவிதமாக இருக்கும்..
நண்பர்கள் என்றில்லாமல் சில உறவினர்களை சந்திப்பதிலும் பெண்களுக்கு இதே நிலைதான்.. இதற்கு எல்லாம் வடிகால் , உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள்தான்.. அதனால்தான் பெண்கள் அதில் கலந்து கொள்ள அவ்வளவு ஆர்வம் காட்டுவார்கள்..
ஆனாலும் அதில் எவ்வளவு பேரால் கலந்து கொள்ள முடிகிறது..
உள்ளூர் என்றாலே கலந்து கொள்ள தடையாக சில சூழ்நிலைகள் இருக்கும்போது வெளியூர் என்றால் கேட்கவே வேண்டாம்.. ஆண்களை போல குடும்ப சிந்தனைகளையும், குழந்தைகளையும் வீட்டில் விட்டு விட்டு செல்வது இப்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான பெண்களுக்கு சாத்தியம் இல்லாத ஒன்று..
இப்படி பெண்களுக்குத்தான் திருமணத்திற்கு பின்பு நட்புகளை பேணுதல் என்பது கடினம்.. அது ஆண்களுக்குத்தான் கடினம் என்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது , பெண்களும் ரசிக்கும்படி எடுக்கப்பட்டிருப்பதால் மட்டுமே எனக்கும் பிடித்திருந்தது...
பெண்களின் நட்புறவை மையப்படுத்தி "சிநேகிதியே" படம் வந்திருந்தாலும் திருமணத்திற்கு முன்பான நட்புதான் அதில் இருந்தது. பெண்களின் நட்புகளை சிறப்பித்து , அதில் இடை நுழையும் பிரச்சனைகளையும் ரசிக்கும்படி காட்சி அமைத்து ஒரு திரைப்படம் வெளிவர வேண்டும் என்ற ஆசையும் என்னுள் எழுகிறது..
அப்படியே பெண்களுக்கு நட்பு பேணிக்காப்பதில் மேற்சொன்ன சிக்கல்களும் விலகும் நாள் வந்தால் இன்னும் மகிழ்ச்சி..
குறிப்பாக திருமணத்துக்கு பின் ஆண்களின் உண்மை நிலை இதுதான் எனக்கூறும் ஆண்கள் பெண்களின் நிலையையும் தங்களின் நிலையோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுதல் பெண்களுக்கு உவப்பாக இருக்கும்..
இரு நாட்களுக்கு முன் எங்கள் 5 வயது மகனும் சொன்னான், "எனக்கு சென்னை 28 ரொம்ப பிடிச்சு இருக்கு" என்று.. அப்பாவும் மகனும் இரண்டாவது முறையும் கண் கொட்டாமல் அத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. நானும் பெண்ணும் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தோம்..