இன்று வெளிவந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெ.வும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் அவர் இப்போது உயிரோடு இல்லையென்பதால் , சசிகலா அன்ட் கோ.,-விடம் இருந்து தப்பித்தோம் என்ற நினைப்பிலும் தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.. அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டம் இருந்தாலும் ஒரு சுனாமி-யில் இருந்து தப்பித்த ஆசுவாசம் இருக்கிறது..
உண்மையில் மக்களுக்கு அவர் மீதுள்ள கோபம் எல்லாம் 91 -96 ஆண்டு கால அராஜகம் பற்றியல்ல.. ஜெ-வின் மரணம் குறித்த மர்மத்துக்கும் , அதன் பின்னான அவரின் செய்கைகளை பற்றியும்தான்.. 91 -96 ஆண்டு கால அராஜகம் குறித்து மக்களுக்கு நினைவும் இல்லை. புதிய புதிய நடப்புகளுக்கு அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்வார்கள்..
இதோ இப்போது கூட சசிகலாவை எதிர்த்து யார் ஓபிஎஸ் பக்கம் வந்தாலும் நம் மக்கள் அவர்களை நல்லவர்களாக நினைத்துக்கொள்கின்றனர்.. இப்போது அவர்கள் சொல்லிக்கொள்கிற காரணங்கள்தான் இரு மாதங்களாக நாம் சொல்லிக்கொண்டிருந்தோமே, அப்போது அமைதி காத்தார்களே என நாம் யோசித்துப்பார்க்கவில்லை.. நம் மனது அப்படி..
அது போல எப்படியெல்லாம் அரசியலில் சசிகலா காய் நகர்த்தியிருந்தால் (நீதிமன்றத்தில் வழக்கு இல்லாதிருந்தால் முதல்வராகக் கூட ஆகி இருக்கலாம் ) குறைந்தது அதிமுக தொண்டர்களின் பரிதாபமாவது அவருக்கு கிடைத்திருக்கும் என பார்ப்போம்..
ஜெ. மறைவுக்கு பின்பிருந்து ..(அப்போதுதானே தன்னை பிரதானப்படுத்தி வெளியே வருகிறார்)
1 . ஜெ. வுக்கு அருகில் கவலை படிந்த முகத்தோடு அப்பல்லோவில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கலாம்.. (செப்டம்பரில் ஜெ. மரணமடைந்திருக்காத பட்சத்தில்)
2 . ஜெ-வின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் போது தன் சொந்தங்கள் எவரையும் உள்ளே விடாமல் தனியே ஆதரவில்லாதது போல் தொடர்ந்து கண்ணீர் நாடகத்தையும் நிகழ்த்தியிருந்தால் மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கும்..
3 . ஜெ-வின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் போது காண வந்த ஜெ. அண்ணன் மகள் தீபாவை மக்கள் பார்க்கும்படி முதுகில் தட்டிக் கொடுத்து ஆதரவளித்து, அங்கே இருக்க விட்டிருந்தாள் , இப்போது தீபா பேரவைக்கே அவசியம் ஏற்பட்டிருக்காது.. அடுத்தநாள் இருந்து மறைமுகமாக முதலில் அனுமதிக்காதவாறே விலக்கி வைத்திருக்கலாம்..
4 . ஜெ. மறைந்த ஓரிரு நாட்களிலேயே போஸ்டர்களிலும் பிளெக்ஸ்-களிலும் தன் முகத்தையும், சின்னம்மா பிரகடத்தனத்தையும் வெளிப்படுத்துவதை தாமதப்படுத்தி இருக்கலாம்..
5 . ஜெ. மறைந்த ஒரு வாரத்திற்குள்ளேயே , ஜெ.வுடன் தான் வாழ்ந்த வீட்டில் , அக்காவின் நினைவுடனேயே வாழ மனம் விரும்பினாலும் , சட்டப்படி அதற்கு வழியில்லை என்பது போல கண்ணீர் சிந்தி பேட்டி கொடுத்து வெளியேறி இருக்கலாம்.. குறைந்த நாட்களிலேயே அம்மாவின் உண்மை தொண்டர்களே சசிகலாவை உள்ளே உட்கார வைத்திருப்பார்கள்..
6 . ஜெ. மறைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பதவிக்கு அலைவதில் முனைப்பு காட்டுவதை நிறுத்தி , தான் என்னவெல்லாம் செய்தால் தன் மீது மக்கள் இரக்கப்படுவார்கள் என யோசிப்பதில் முனைப்பு காட்டி இருக்கலாம்..
7 . பொது செயலாளர் பதவியில் உட்கார்ந்த பிறகாவது, ஜெ.வின் வீட்டில் ஜெ.அமர்ந்த இருக்கையில் அமர்ந்து போஸ் கொடுக்காமலும், ஜெ.வின் வண்டியில் ஜெ. இருக்கையில் அமராமல் பின்னால் அமர்ந்தும் ஜெ.வின் அலங்காரங்களை கைக்கொண்டிருக்காமல் இருந்திருந்தாலும் கூட கொஞ்சம் எதிர்ப்பை தனித்து இருக்கலாம்..
8 . கொஞ்ச நாட்கள் மேற்கூறியவாறே தொடர்ந்து இருந்து முதல்வர் ஓபிஎஸ்-க்கு கெட்ட பெயர்கள் பல வரவைத்து, மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துக் கொடுத்த பிறகு , தன் எடுபிடிகள் மூலம் தன்னை முதல்வராக்க விரும்புவதாக சொல்ல வைத்திருக்கலாம்..
9 . மக்கள் நிச்சயம் முதல்வராக்க ஆதரவு தந்திருப்பார்கள்.. ஜெ.விடம் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தை தானே நினைவு படுத்தி, இரு நாட்கள் மறுப்பது போல் மறுத்து வந்திருந்தால் போதும்.. இளகிய மனம் கொண்ட முட்டாள் மக்கள் மூன்றாம் நாள் வலுக்கட்டாயமாக முதலமைச்சர் இருக்கையில் உட்கார வைத்திருப்பர்..
10 . முதல்வர் இருக்கையில் அமர்ந்ததும் , தன் சொந்தங்களுடன் இப்போது செய்து கொண்டிருக்கும் அனைத்து அமர்க்களங்களையும் செய்து , தமிழ்நாட்டை துண்டாடி இருந்தாலும் , யார் கேள்வி கேட்க முடியும்.. கேள்வி எழுப்பவர்கள் எப்படி நடமாட முடியும்? ஆட்சிக்கு வந்த பின் மக்களாவது , சட்டமாவது ...?
-14-2-2017

மேற்சொன்னபடி நடந்து இருந்தால் வழக்கு தடுத்திருக்காவிட்டால் முதல்வர் பதவி , வழக்கில் குற்றவாளியென்றால் அதிமுக தொண்டர்களின் பரிதாபம் என ஈட்டி இருக்கலாம்.. ஆனால் சாணக்கியத்தனம் போதவில்லையே...
33 வருடம் மறைவில் அரசியல் கற்றவர் (நடத்தியவர் ) குறைந்த பட்ச மதிப்பெண் கூட எடுத்து தேர்வாகவில்லை என்பது வருத்தமே ....... அல்ல :D
-14-2-2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.