ஞாயிறு, 10 ஜனவரி, 2016

எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (12)


  1. நம்மிடம் தவறு இல்லை எனும் பட்சத்தில் மற்றவர்களின் பேச்சுக்கும், நினைப்புக்கும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது என்பது, செய்யாத தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை....
  2. நினைவுத் தூண்டிலில் எவை சிக்கினாலும் இரை ஆவதென்னவோ நேரம் மட்டுமே....
  3. சிலரின் சூழ்ச்சிகளின் போதோ, சிலரால் பணமோ அல்லது நம்பிக்கையோ ஏமாற்றப்படும் போதோ "எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்ற நினைப்புதான் எளிதில் அதில் இருந்து மீண்டு வர உதவுகிறது....
  4. வாழ்நாளின் ஓட்டத்தில் எங்கு இருந்தாலும், சிலரின் நட்புறவை மட்டும் காலம் முழுக்க பேணிக்காக்க வேண்டும் என்று யாருடைய நட்பையெல்லாம் நினைக்கிறோமோ, அந்த நட்புறவுகளில்தான், இணைப்பில் இருக்கையிலேயே ஒரு விரிசலை ஏற்படுத்தி,அந்த நினைப்பிற்கு ஏற்கமுடியாத முற்றுப்புள்ளியை வைத்து விடுகிறது காலம்...
  5. திருமணத்திற்கு முன்பு இருந்த குணாதிசயங்கள் திருமணத்திற்கு பின்பு தொடர்வதும் மாறுவதும் அவரவர் வாழ்க்கைத் துணையை பொருத்தே இருக்கிறது....
  6. காரணமே இல்லாம சிலர் பிரிஞ்சுட்டாங்க அல்லது பைசா பெறாத(வெற்று) காரணத்துக்கு சிலர் பிரிஞ்சுட்டாங்கன்னு சொல்றதே தப்பு... பைசா பெறாத காரணத்துக்கு பின்னாடி கூட "பிடிக்கல"ன்ற ஆகச்சிறந்த காரணம் இருந்தே தீரும்...
  7. பொய்களையும் ரசித்து சிரிக்க முடியுமென்றால் அது , விபரமறியா பிள்ளைகள் முதல் முறையாக சொல்லும் கற்பனை கலந்த பொய்களாக மட்டுமே இருக்கும்..
  8. நிகழ்வுகள் மின்மினிகளாய் மிளிர
    அதன் வெளிச்சத்தில்
    உறங்க மறுக்கிறது மனம்...
  9. நம்பிக்கையின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது என் வாழ்க்கை ...
  10. பெரும்பாலானோர் செய்யும் நல்லவைகளும் கெட்டவைகளும் தான் எவரிடமிருந்து , என்ன பெற்றோமோ அதன் பிரதிபலிப்பே .. ஆதலால் கொடுப்பவைகள் சிறப்பானதாக இருக்க வேண்டும்..

2 கருத்துகள்:

Sekar சொன்னது…

2. சில சமயம் மன நிம்மதியும் இரையாகும்

எண்ணங்களின் ஓசை சொன்னது…

ஆமாங்க

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.