ஏனோ இதுவரை அல்லாத சொல்லவியலாத மனவருத்தம் நேற்றைய தேர்தல் முடிவுக்கு பின் இருந்தது.. முக்கியமாக சில தலைவர்களின் தோல்வி.. அதுவும் திருமாவின் குறைந்த வாக்கு எண்ணிக்கையிலான தோல்வி மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.. பின்னர் வந்த அவரின் அறிக்கை அவர் மேல் இன்னும் நம்பிக்கை ஊட்டியது..
அந்த தலைவர்களின் மேல் மற்றவர்களுக்கு சொல்ல எந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் மாற்றத்திற்கான அடித்தளமாக எனக்கு பட்டன.. ஏற்கனவே பல முறை ஆண்டும், பல கெட்ட பெயர்கள் சூழ்ந்தும் இருக்கிற கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதியை நம்பும் மக்கள் இதுவரை ஆளாத ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்க முன்வரவில்லையே என்ற ஆதங்கம் அதிகமிருந்தது..
பின் இலவசங்களுக்கும் பணத்துக்கும் மக்கள் அடிமைப்பட்டு கிடக்கும்போது என்ன செய்ய இயலும் என்ற எண்ணம் வந்துவிட்டது..
நேற்று நெருங்கிய தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது , நாங்கள் 3 பேரும் நாம் தமிழருக்குத்தான் ஒட்டு போட்டோம், ஆனால் திரும்ப அதிமுக வந்தது எங்களைப் போல பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது, ஆனால் என்ன செய்ய , நமக்கு யார் ஆண்டாலும் ஒரே மாதிரிதானே வாழ்க்கை , தனிப்பட்ட முறையில் நாம் பாதிக்கப்படவில்லையே, அதனால் வருத்தம் வேண்டாம் என கூறினார்..
யோசித்துப்பார்க்கையில் என்னைபோல போல மாற்றத்தை விரும்பும் பலரும் விலைவாசி உள்ளிட்ட பொது பிரச்சனையில் மக்களோடு மக்களாக பாதிக்கபடுவோமே தவிர எந்த ஆட்சி வந்தாலும் தனிப்பட்டவகையில் எங்களுக்கு எந்த பாதிப்புமில்லைதான்.. ஆனால் ஈழப்படுகொலை நடந்த சமயத்தில் இருந்த ஆட்சி சுயநலத்திற்காக நடந்து கொண்ட விதமும் , மதுவிலக்குக்குக்காக போராடிய சசிபெருமாளின் மரணமும் மற்றும் பல மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகளும் மனதில் இருக்கின்றனவே..
மதுவால் உங்களுக்கு தனிப்பட்ட பாதிப்பு இல்லையென்றால், அதனால் மட்டும் எவ்வளவு பேர் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என உங்களை சுற்றி பார்க்கவில்லையென்றால் கூட ஒருமுறை மெனக்கெட்டு அருகிலிருக்கும் ஆல்கஹால் De -addiction சென்டர் சென்று பார்த்து வாருங்கள்.. இளைய சமுதாயம் சத்தமில்லாமல் அழிந்து கொண்டிருப்பதை உணர்வீர்கள்..
ஆழ யோசித்திப்பார்க்கும்போது ஒன்று புரிந்தது.. இணையத்தில் பரவும்,விவாதிக்கப்படும் பல உண்மை அரசியலை வாசிப்பது ஒட்டு போடும் மக்களில் எவ்வளவு பேர்? உண்மையில் மக்களில் பலர் இணையம் உபயோகிப்பதில்லை.. நம் வீடுகளிலேயே அதற்கு சாட்சிகள் இருப்பர்.. மீதம் உள்ளவர்களில் செய்திகளின் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்பவர்கள் எத்தனை பேர்? குறிப்பாகப் பெண்கள்... பெண்கள் பலரும் சீரியலைத் தவிர நாட்டு நடப்புகளை அறிய என்ன பார்க்கின்றனர்? எவ்வளவு பெண்களுக்கு கல்லூரிப் பருவத்தினருக்கு நாட்டு நடப்பை பற்றி தெரியும்?
எனக்குத் தெரிந்த வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் இந்த ஆட்சி அமைந்ததற்கு தன் வருத்தமான,கோபமான,ஆதங்கத்தை தன் பதிவில் வெளியிட்டு இருந்தார்.. ஆனால் உண்மையில் சொந்த நாட்டில் இருக்கும் மனைவியும் தான் விரும்பாத கட்சிக்குதான் ஆதரவு அளிக்கிறார் என்று அவருக்கு தெரியவில்லை..
பல ஆண்களும் இப்படிதான் இருக்கின்றனர்.. நாட்டு நடப்பை தன் வீட்டு பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பான வழியை அவர்களுக்கு திறந்து கொடுப்பதில்லை.. நாளேடுகளை படிக்க சொல்லி ஊக்கப்படுத்துவதோ, தான் அறிந்த நாட்டு நடப்புகளைப் பற்றி அவர்களிடம் விவாதிப்பதோ இல்லை.. ஒட்டு போடும் நாளில் மட்டும் அவர்களுக்கு இந்த கட்சிக்கு ஒட்டு போடு என்று சொல்வதோடு தன் கடமை முடிவுறுவதாக நினைக்கின்றனர்.. அப்படி சொல்லும்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் பகுதியில் ஓட்டுக்காக அளிக்கப்பட்ட பணமும், இலவசங்களும் கொடுக்கும் வசதிதான் பெரிதாகத் தெரியுமே தவிர எல்லாம் அறிந்த தன் வீட்டு ஆண்கள் சொல்லும் சொல்லல்ல.. மேலும் குருட்டுத்தனமாக இவருக்கு மாற்று இவர்தான் என கணிக்கின்றனர்..
இன்னொரு முக்கிய குறை,பல செய்திகளை பல காரணங்களால் மறைத்து வரும் ஊடகங்கள்.. எடுத்துக்காட்டுக்கு சாதிக் பாட்சா கொலையை பற்றி கொலையாளி அளித்த வாக்குமூலத்தை எவ்வளவு ஊடகங்கள் வெளியிட்டன.. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதுவும் செய்தவர்களுக்கு எதிரான ஆட்சி உள்ள மாநிலத்திலேயே.. உற்றுப்பார்த்தால் ஒருவருக்கொருவர் மற்றவரை காப்பாற்றித்தான் வருகின்றனர்.. ஏனெனில் இருவரின் மேலுமே குற்றம் உண்டு..இது போல இன்னும் பல பெரிய இடத்து விஷயங்கள்..
இதே ஒரு சாதாரண மக்களில் ஒருவன் ஒரு கொலையிலோ கொள்ளையிலோ ஈடுபட்டிருந்தால் செய்திகளின் முதன்மை செய்தியாக ஆக்க கண் மூக்கு காது என வைத்து அமோகமாக வியாபாரம் செய்திருப்பர்.. தெரியாமல் சிக்கிகொண்ட பேரறிவாளனின் உண்மை நிலை வெளிப்படையாகத் தெரிந்தும் எவ்வளவு ஊடகங்கள் அதை வெளிச்சமிட்டன? காசும், பதவியும் இருப்பவனுக்குத்தான் அரசாங்கமும், ஊடகமுமே தவிர சாதாரண மக்களுக்காக இல்லை..
அதனால் நாட்டு நடப்பை அறியாத மக்களை குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை..
ஆகையால் நல்ல ஆட்சிக்கான மாற்றத்தை நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்புபவர்கள் இனியாவது நாட்டு நடப்புகளை தன் குடும்ப உறுப்பினர்கள் அறிந்து கொள்ள பாதுகாப்பான வழியை திறந்து கொடுங்கள்.. நல்ல மாற்றத்துக்கான சாவி அதில்தான் ஒளிந்து இருக்கிறது.. அதை கொண்டுதான் திறக்க முடியும் நம் தமிழகத்துக்கான நிரந்தர விடியலை..

- 20-5-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.