தலைப்புகள்
- அஞ்சலி (1)
- அனுபவம் (34)
- எண்ணக்கீற்றுகள் (14)
- என் பிள்ளைகளின் உலகம் (26)
- கட்டுரை (15)
- கவிதை (67)
- திரை விமர்சனம் (3)
- நன்றி அறிவித்தல் (1)
- நிகழ்வுகள் (1)
- நினைவுகள் (3)
புதன், 3 அக்டோபர், 2018
பிக் பாஸ்-2 (என்னை கவர்ந்த ரியல் வின்னர் )
சீரியல்களின் மூலம் மனதையும் , நேரத்தையும் இழக்கக்கூடாது என முடிவெடுத்து தீவிரமாக இருந்த என் மனஓட்டத்தை, பிக் பாஸ் காண்பதில் கொஞ்சம் தளர்த்த ஆரம்பித்தேன்.. காரணம் , எண்ண ஓட்டங்கள் பற்றிய என் சுய ஆய்வுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்ற காரணம்தான்..
நம் எதிரில் உள்ள மனிதர்களின் எண்ண ஓட்டத்தை நம்மால் கணிக்க முடியாது.. அவர்கள் புறம் பேசுவதின் மூலம் அது வெளிப்படுவதையும் நம்மால் பார்க்க முடியாது . ஆனால் பிக் பாஸ்-ல் அதை அறிந்து கொள்வதும் ஒருவருக்கொருவர் மற்றவரை பற்றி மாறும் எண்ண ஓட்டம் மற்றும் வார்த்தைகள் பின் எவ்வாறு அவர்களின் சூழ்நிலைக்குள் புகுந்து பிரதிபலிக்கிறது என்பதையும் கண்கூடாக (உன்னிப்பாக கவனித்தால்) காண முடியும்..
ஆரம்பத்தில் கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் சென்றாலும் சில போட்டியாளர்களின் மனதை சில செய்கைகள் , பேச்சுகள் மூலமே அறிய முடிந்தது.. எல்லோரும் நடிக்கிறார்கள் என்ற பேச்சு அப்போதுதான் வெளியே பலமாக இருந்தது.. ஆனால் சிலர் தங்கள் உண்மை முகத்தை வெளியில் மறைக்க முயன்றாலும் சில நேரங்களில் அவர்களை அறியாமல் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது..
மஹதி: எந்த குறையும் குணத்தில் சொல்ல முடியாது .. ஆனாலும் நடிப்பு போல மற்றவர்களுக்கு தோன்றியதாலோ என்னவோ மக்களால் முதலில் வெளியேற்றப்பட்டார் ..
அனந்த் வைத்தியநாதன் : இசை ஆசான் என்பதாலோ என்னவோ சிறு ஆணவம் என்று கூற இயலாத மிடுக்கு .. சிறு சிறு பேச்சுகள் மற்றும் வயதின் (திறமைக்கும் வெற்றிக்கும் வயது தடையல்ல, ஆனால் இள வயது பட்டாளம் முன் கொஞ்சம் அந்நியமாகத்தான் உணரப்படுவார் )மூலம் பிக் பாஸ் வெற்றியாளர்-க்கு தான் தகுதியில்லை என அவர் உணர்த்தியிருந்ததால் அவரின் வெளியேற்றம் பெரிதளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை..
NSK ரம்யா : எல்லோருடனும் நட்பு பாராட்டும் குணம் , நேரிடையாக பேசும் குணம்.. ஆனால் அந்த வார வெளியேற்றத்தில் மற்றவர்கள் யாரையும் வெளியேற்ற மக்களுக்கு மனம் இல்லாமல் போக , சந்தர்ப்ப சூழ்நிலையால் வெளியேற்றப்பட்டவர்...
நித்யா : பாலாஜியின் மனைவி என்ற அடையாளத்துடன் மக்களுக்கு அறியப்பட்டாலும் தன் நேர்மறையான குணத்தால் தனித்து காணப்பட்டார்.. ஆனால் பிக் பாஸ் வீட்டில் வெங்காய பிரச்சனை வந்தபோது தான் சொல்வதில் மட்டுமே பிடியாக இருந்தும், மற்றவர்களை பேச விடாமலும் செய்து தன் இன்னொரு பிடிவாத குணத்தை காட்டினார்.. ஆனால் அது அப்போது வெளிப்பட்ட மற்ற நல்ல சில குணங்களால் மறைந்தும் இருந்தது.. அதனால் அவரின் வெளியேற்றம் ஒட்டு போட்ட மக்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது..
ஆனால் வெளியில் சென்ற பிறகு தன் உண்மை சுயரூபத்தை பதிவின் மூலமும், திரும்ப பிக் பாஸ்-ன் வீட்டுக்குள் சென்றபோது பேசிய பேச்சுகளின் மூலமும், குறிப்பாக இறுதி நாளில் மும்தாஜ்-ன் அண்ணன் கேள்விக்கு பதில் சொல்லிய விதத்தினாலும் , மும்தாஜ் பற்றி பாலாஜி சொல்லிய பிறகு காட்டிய முகபாவத்திலும் காட்டி விட்டார்.. அவரின் மதிப்பு மற்ற எல்லோரையும் விட மிகவும் கீழிறங்கி விட்டது.. பாலாஜியை நினைத்து பரிதாபம் கொள்ளும் நிலையும் வந்து விட்டது..
வைஷ்ணவி :, ஆரம்பத்திலேயே புறம் பேசுவதில் தன்னை வெளிப்படுத்தியதாலோ என்னவோ அதன் பின் மனதில் ஒட்டவில்லை..
பொன்னம்பலம் : சிலருக்கு அறிவுரைகள் கூறி நல்ல நிலையில் இருந்தாலும் ,ஓரிரு செயல்கள் எரிச்சலடைய வைத்தன.. இவ்வளவு வெளியேற்றத்தையும் தாண்டி வருகிறாரே , மக்கள் ஆதரிக்கிறார்களா என்று ஆச்சரியமும் எழுந்தது...
டேனி : ஆரம்பத்தில் பிடித்த போட்டியாளர்.. ஆனால் போக போக ஒவ்வொரு நாமினேஷனிலும் கூட்டு சாதி செய்தது, சில இடங்களில் பின்னணி வேலை செய்தது என முகம் சுளிக்க வைத்தார்.. எலிமினேட் ஆகி செல்லும்போது பேசிய பேச்சுகளும் அப்படியே..
சென்ராயன் : சில திறமைகளில் முன்னேறி ஜெயித்தார்..அவர் உண்மையிலேயே வெள்ளந்தி குணம் உள்ளவரா இல்லை அப்படி நடித்தாரா என்ற சந்தேகம் அவர் பொய் கூறி ஸ்மோக்கிங் ரூம்-க்கு சென்றபோது தோன்றியது.. ஆனாலும் வெள்ளந்தி குணம் உள்ளவர் என்றே நம்பலாம் .. ஆனால் பிக் பாஸ் வெற்றியாருக்கான தகுதி இல்லை என்று பிக் பாஸே வெளியில் அனுப்பி விட்டாரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவர் வெளியேற்றம்..
ஷாரிக் : ஆரம்பத்தில் வீட்டில் இருந்த இடம் தெரியாமல் இருந்தாலும் வீட்டின் தலைவரானபோது தன் நேர்மையான குணத்தால் இறுதி வரை வருவார் என கணிக்கப்பட்டார்.. ஆனால் யார் மீதோ உள்ள கோபம் அவர் வெளியேற காரணமாகி விட்டது..
மஹத் : இவர் நேர்மையானவர்.. கோபம் , மன்னிப்பு, பாராட்டு என அனைத்தையும் மனதில் வைக்காது உடனே வெளிப்படுத்தி விடுவார் .. தன்னை சார்ந்தவர் மீது முழு நம்பிக்கை.. அதனால் சரி எது , தவறு எது என யோசிக்காமல் செய்த விஷயங்களே இவர் வெளியேற காரணம்.. இறுதி வரை வருவார் என இவரும் எதிர்பார்க்கப்பட்டிருந்தார்..
பாலாஜி : ஆரம்பத்தில் அவர் நகைச்சுவை மக்களை குஷிப்படுத்தினாலும் , புறம் கூறுதலும், கெட்ட வார்த்தைகள் பேசுவதிலும் மனதில் பின்தங்கியே இருந்தார்.. யாருக்கும் தெரியாமல் உணவு கொடுத்த சென்றாயன் பற்றியும் , உண்மையாய் ஆறுதல் கூறிய மும்தாஜ் பற்றியும் அவர் பேசிய பேச்சே அவர் குணத்துக்கு சாட்சி .. ஆனாலும் தன் மனைவி மகளுடன் சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்ததாலோ என்னவோ போட்டியாளர்களும் அதிகம் நாமினேட் செய்யாமல் காப்பாற்றி வந்தனர்..
பின்னாளில் கோபத்தை குறைத்தும், சில போட்டியாளர்கள் மீது அக்கறை உள்ள அன்பு காட்டினாலும் கடைசி வரை புறம் பேசும் குணத்தை விட முடியவில்லை..
யாஷிகா : நல்ல போட்டியாளர் .. தன் தோழி ஐஸ்வயாவின் நட்புக்கு மரியாதை கொடுப்பவர்.. சில இடங்களில் அவரின் நேர்மையான பேச்சும் , தெளிவான சிந்தனையும் அவரது வயதை பொறுத்து பார்க்கையில் பிரமிக்க வைத்தது.. ஆரம்பத்தில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும் என மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நபர்.. ஆனால் யாரை வெளியேற்றலாம் என்ற கூட்டு சதியில் ஈடுபட்ட மிக முக்கிய நபர், ஆரம்பத்தில் நட்பு பட்டாளம் இணைந்து செய்த சில செயல்கள் என சில என் மனதில் ஓட்டவில்லையே தவிர , அதை மட்டும் தவிர்த்து பார்த்தால் வெற்றியாளருக்கான அனைத்து தகுதிகளும் இருந்தது..
ஜனனி : இலகுவான மனம் .. , எல்லோருடனும் நட்பை எளிதாக கவரும் குணம் ..ஆரம்பத்தில் சில சின்ன விஷயங்களில் அங்கும் இங்கும் சொல்லியதே குற்றமாக தெரிகிறதே தவிர, சில போட்டியாளர்களை விட்டு விட்டு இவரை மட்டும் குறை கூறும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானவர் அல்ல ..
நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒருவருக்கு வைக்கும் பட்டப்பெயர் ஒருவர் வாழ்வில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இங்கு அறியலாம் . டேனி இவருக்கு வைத்த பட்டப்பெயர் இவரை இறுதி பரிசளிப்பு நாளில் நகைச்சுவை என்ற பெயரில் பரிகாசம் பண்ணியதை பார்த்த யாரும் மறக்க மாட்டார்கள் .. ஜனனியும் மறக்க மாட்டார்..
விஜயலக்ஷ்மி : 60 நாட்களாக உள்ளே நடப்பதை பார்த்துவிட்டு உள்ளே வந்தவர்.. வந்தஆரம்ப நாட்களில் அமைதியாத்தான் இருந்தார்.. எப்போது அவரின் கணவர் வந்து ," நீ இன்னும் அதிகம் செயல்பட வேண்டும்" என சொன்னாரோ அதிலிருந்து அவரின் வேகம் தெறித்தது.. ஆனால் அவரின் ஒரு குறி ஏன் மும்தாஜ் என தெரியவில்லை.. இறுதி நாளில் கூட நித்யா மும்தாஜ் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் தானும் சொல்ல கை உயர்த்தினார் .. ஆனால் இறுதிப்போட்டியாளர்களில் தானும் ஒருவராக இருப்பதால் , தான் சொல்வது தன் வெற்றியை பாதிக்கும் என நினைத்தாரோ என்னவோ , உயர்த்திய கையை அப்பட்டியே இறக்கிக் கொண்டார் :) .. டாஸ்க்-களில் முழு வேகத்துடன் இருந்தார்.. மக்கள் மனதை வெல்ல டாஸ்க் மட்டும் போதாதே..நேர்மையானவர் என பெயரெடுக்க சில செய்கைகளால் அவரால் முடியவில்லை..
ஐஸ்வர்யா : ஆரம்பத்தில் அழகாலும் பேச்சாலும் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் .. பின் கூட்டு சதியில் ஒரு ஆள் , மற்றவர் சொல்வதை புரிந்து கொள்ளும் முன் எதிர் வினையாற்றல் , கோபம் என பலரின் எதிர்ப்பை பெற்றவர்.. நட்புக்காக எதுவும் செய்யவில்லை என தோன்றினாலும், இறுதி வரை தன் பேச்சில் தன் நட்பை காப்பாற்றியவர்.. கடைசி இரு வெளியேற்றத்தை எப்படி தாண்டினார் என்பது பிக் பாஸ்-க்கே வெளிச்சம்.. அவரின் கனவுப்படி இறுதிப்போட்டி மேடை வரை வந்து விட்டார்..
ரித்விகா : ஆரம்பத்தில் தன் இருப்பை காண்பிக்காமல் இருந்தவர்.. அதன் பின் மற்றவர்களுடன் நட்பை ஏற்படுத்தினாலும் பிரச்சனைகளின்போது ஒதுங்கி இருந்தவர் .. அதாவது ஒரு பாதுகாப்புக்குள் தன்னை வைத்திருந்தவர்..யாரை பற்றியும் குறை கூறாமல் , புறம் பேசாமல் பெரும்பாலும் இருந்தார்..மஹத் பற்றிய அவரின் கணிப்பும், மகத்துக்கு அவர் வழங்கிய அறிவுரையும் அவரின் கணிக்கும் திறனுக்கு சரியான எடுத்துக்காட்டு. .. டாஸ்க்-களின் போதும் நன்றாக என்றில்லாமல் இருந்தாலும் நிறைவாகவே செய்தார் ..
மும்தாஜ் கலர் டை அடிக்க மறுத்த மறுதினம் ,ஐஸ்வர்யாவும், மும்தாஜும் ஆங்கிலத்தில் பேசியதற்காக நீச்சல் குளத்தில் குதிக்க அலாரம் அடித்தது.. உடனே ஐஸ்வர்யா , வெளியில் வந்து சைகை மூலம் ரித்விகாவை கூப்பிட, ரித்விகாவும் சைகை மூலம் வர முடியாது என மறுத்திருந்தார் .. மும்தாஜ் , ரித்விகாவுக்காக டாஸ்க் செய்யவில்லை என்பதால் அவர் வர மறுக்கிறார் என ஐஸ்வர்யா சரியாக புரிந்து அதை அங்கு வெளிப்படுத்தியும் இருப்பார்..
இதை உணர்ந்த ரித்விகா, "ஐஸ்வர்யா கூப்பிட்டாங்க, ஆனா எதுக்குன்னு எனக்கு எப்படி தெரியும்" என்றிருப்பார்.. அலாரம் அடித்தால் எதற்கு என பார்க்கும் நமக்கே தெரியும்போது அங்கு இருந்த ரித்விகாவுக்கு தெரியாதா ? "ஐஸ்வர்யா . வார்த்தை மூலம் ரிக்வஸ்ட் பண்ணி கூப்பிடல, அதனால் வரல" என சொல்லி இருந்தால் கூட முழுதும் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பாரோ என்னவோ ? ஆனால் தான் நாமினேஷன் ஆக காரணமாக இருந்த மும்தாஜ்-காக ஏன் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என ஆரம்பத்தில் எழுந்த அவரின் சிறு ஆத்திரம் அப்படி செய்ய விடாமல் செய்துவிட்டது..
பல நிறைகள் இருந்தாலும் ஒரு குறைதானே (அதுவும் குணத்தில் ) பெரிதாக தெரியும் .. இங்கும் அப்படிதான்..
மும்தாஜ் : ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமானவராக தெரிந்தார்.. வெளியிலும் அப்படியே பேச்சு இருந்தது.. ஆனால் அவரின் குணம் அறிய அறிய பிடித்து போய் விட்டது .. அதன் பின் அவருக்கு வீட்டில் சில டாஸ்க்-களின் மூலம் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் , வேறு சில விஷயங்களும் பெரும்பாலான மக்களால் கமல்ஹாசனால் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு கேட்கப்படாமலே போனது,, அப்போதும் அவர் பொறுமையாகவே இருந்தார்..
அவரின் அன்பு ஆரம்பத்தில் எனக்கும் நடிப்போ என தோன்றியது.. ஆனால் அதற்கு முன் அவர் பேட்டியளித்த, கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை பார்த்த பின் அவரின் குணாதிசயம் அதுதான் என புரிந்தது..
பலர் அவரை பற்றி சொல்லும் ஒரு குற்றச்சாட்டு , அவர் டாஸ்க் செய்ய மாட்டார் என்பது .. என்னை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் பெரும்பாலானவற்றை அவர் நிறைவாக செய்திருக்கிறார்.. மறுத்த சில டாஸ்க்-கள் , மற்றவர்களோடு ஒப்பிடும்போது அவருக்கு மட்டும் கடினமாக கொடுக்கப்பட்டது.. (இஞ்சி, எலக்ட்ரிக் ஹேர் டை ).. சில டாஸ்க்க்ளின் தண்டனைகள் மறுத்தது , தண்டனை கொடுத்தவர்களின் பாரபட்ச நடவடிக்கையால்(கொடுத்தவர்கள் அறிந்தும், அறியாமலும்)..
டாஸ்க் செய்வதும் , செய்யாததும் தன் நிலை பொறுத்தது.. தனக்கு மட்டும் பாதிப்பு எனும் போதுதான் அதை(பாரபட்சமான டாஸ்க்-ஐ ) அவர் நிராகரித்திருப்பாரே (கலர் ஹேர் டை டாஸ்க் தவிர , அதில் ரித்விகா நாமினேட் செய்யப்பட்டதும், தன்னால்தான் அவர் நாமினேட் செய்யப்பட்டார், அதனால் தானும் நாமினேட் ஆக தயார் என கூறி முதலில் பெயர் கொடுத்தவர் ) ஒழிய, தன் அணி பாதிக்கப்படும் என்றால் டாஸ்க்கை (எதிரணி சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டபோதும்) நிறுத்தாமல்தான் முடித்திருக்கிறார்..
உடல் நலமில்லாமல் வந்தார் என சொல்லப்படுவதற்கு, அது தெரிந்துதான் பிக் பாஸ்- நிகழ்ச்சியிலிருந்தே அழைத்து அனைத்து மருத்துவ வசதிகளும் கொடுத்திருக்கிறார்கள்..
பாலாஜியின் மேல் குப்பை காட்டியபோது ஏன், தாமதமாக வந்து அழுது நடிக்க வேண்டும் என உள்ளிருப்பவர்களே பின்னாளில் கிண்டல் செய்து நடித்து காட்டினார்கள்.. இப்படி நடித்தவர்கள் அப்போது, உடனே போய் தட்டி விட்டார்கள் போல .. " பிக் பாஸ் சொல்லி இருக்கார் . அதான் அப்படி செய்றாங்க "என மஹத் தடுத்ததாகவும், (அது திரையில் எடிட் செய்யப்பட்டது எனவும் )அதுவும் நிஜமாகவே அவர் கொட்ட மாட்டார் , கொட்டுவது போல் கொண்டு மட்டுமே செல்வார் என நினைத்ததாகவும் இப்போது அதற்கான விளக்கத்தையும் மும்தாஜ் கொடுத்திருக்கிறார்..
அங்கு ஒவ்வொருவர் மனவேதனையில் இருக்கும்போதும் மும்தாஜ் ஆறுதல் கொடுப்பவராக இருந்தார்.. ஆனால் அவருக்கு பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல , வெளியில் வந்த பிறகும் அவர் அன்பு காட்டியவர்கள் அவருக்கு உண்மையாக இல்லை.. மக்களில் கூட பல எதிரானவர்கள் எப்படி என ஆச்சரியம் இருக்கிறது..
BB2 இறுதி நாளில் கூட நித்யாவின் கேள்விக்கு நியாயமாக பதில் கூறியதையும் இங்கு குறை கூறி பதிவுகளை பார்த்தேன்..
அவரின் நேர்மையான பேச்சும், மனம் ஒத்துழைக்கவில்லை என்றால் முடியாது என நேரே கூறி ஒதுங்கும் குணமும் கூட பிடித்திருக்கிறது..
இவருடைய வெளியேற்றமும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாகவே இருந்தது ..
பிபி 1 -ல் ஓவியா போல பிபி -2 வில் மும்தாஜ் தான் என் மனம் கவர்ந்தவர் .. ஓவியா அளவுக்கு இவருக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் ஆதரிக்கும் மக்களுக்கு புரியும் ஏன் ஆதரிக்கிறோம் என்று....
- 3-10-2018

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.