புதன், 21 ஜூன், 2017

எண்ணக்கீற்றுகள் (13)

  1. நிஐங்களோடு தர்க்கம் செய்து ஓய்ந்த மனம், பின் அதன் நினைவுகளோடு கூட தர்க்கம் செய்ய முனைவதில்லை.
  2. குழந்தைகளை ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படுத்துவது என்பது எளிதல்ல.. ஒன்று, அந்த வரைமுறை அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்குள் கட்டுப்பட அவர்கள் மனம் சம்மதிக்க வேண்டும்..
  3. நீங்கள் தப்பு செய்ய வேண்டுமா? பணக்காரராகுங்கள்.... என்ன தப்பு செய்தாலும் சட்டம் உங்களுக்கு கீழ்படியும்....
    நீங்கள் நல்லது செய்ய வேண்டுமா? பணக்காரராகுங்கள்.... நீங்கள் செய்த நல்லதை சிலர் நன்றியோடு நியாபகம் வைத்து , அதை வெளியிலும் சொல்வார்கள்..
  4. பெரும்பாலானோர் செய்யும் நல்லவைகளும் கெட்டவைகளும் தான் எவரிடமிருந்து , என்ன பெற்றோமோ அதன் பிரதிபலிப்பே .. ஆதலால் கொடுப்பவைகள் சிறப்பானதாக இருக்க வேண்டும்..
  5. யாராவது ஒருவரிடம் "அவங்க ரொம்ப நல்லவங்க" என ஒரு மூன்றாவது நபரை பற்றி சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த "நல்லவங்க"தம் நல்ல பெயரை நம் மனதுக்குள் கெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தை நம்முள் உருவாக்கி விடுகிறது "அனுபவம்".
  6. ஒரு பிரச்சினைக்கான தீர்வு தேடி பிரார்த்தனையோடு கூடிய நேர்மறை எண்ணம் என ஒரு வழியில் உறுதியாக சென்றும், தீர்வு என்னவோ சோதிடப்படியே கிட்டும் போது நம்பிக்கையோடு சேர்த்து வாழ்க்கையும் சலித்து விடுகிறது.
  7. தமக்கு வரும் பிரச்சனையை கண்டு சிரிப்பதற்கு மனதை பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு பிரச்சனையின் சுமை பாரமாகாது. இந்த மன இயல்பு எளிதில் வழக்கப்படுத்திக் கொள்ளக்கூடியதே..
    ஆனால் நம் பிரச்சனையை கண்டு நாம் அழத்தான் வேண்டுமென கங்கனம் கட்டி/ எதிர்பார்த்துக் கொண்டிருப்போரின் முன்பு சிரித்துக் கொண்டே பிரச்சனைகளை புறம் தள்ளுவதற்குதான் மிகுந்த மனோதிடம் தேவை. இதை எளிதில் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது. பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கோ மேற்கொண்டு வாழ்வில் வரும் பிரச்சனைகள் பிரச்சனைகளாகவே தோன்றாது...
  8. நமக்கு ஒரு பிரச்சினை எனும்போதுதான் ஒதுங்கும் சிலரின் சுயரூபம் தெரிகிறது. அவர்களின் அத்தகைய சுயரூபமே பின்னாளின் நம் சுயநலத்திற்கும் காரணமாகி விடுகிறது.
  9. நடந்த சம்பங்களின் நினைவுகளை மாற்ற முடியாது என்பது என்பது ealau எவ்வளவு  உண்மையோ அவ்வளவு உண்மை நடக்க விரும்புவதை நம் எண்ணப்படி நடக்க வைக்கலாம் என்பதும்..
  10. "இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் " என்ற வார்த்தைகளுக்கு பின் பெரும்பாலும் பிரார்த்தனைகள் இருப்பதில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.