குழந்தைகளை ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படுத்துவது என்பது எளிதல்ல.. ஒன்று, அந்த வரைமுறை அவர்களுக்கு புரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்குள் கட்டுப்பட அவர்கள் மனம் சம்மதிக்க வேண்டும்..
மகன் பள்ளியில் , ஆரோக்கிய/ஆரோக்கியமற்ற உணவுகள் தலைப்பில் நடந்த மாறுவேடப்போட்டிக்கு வாழைப்பழம் வேடம் எடுக்க (பல கடைகளில் தேடி அலைந்து கடைசியாக அந்த உடைதான் கிடைத்தது) தீர்மானித்து , அதற்கு சிறிய ஆங்கில குறிப்பை கொடுத்து பயிற்சி செய்ய வைத்து , அதற்கு நன்றாக உடல் மொழி , வார்த்தைகளை ஏற்ற இறக்கத்தோடு சொல்லும் பாணி என அனைத்தையும் கற்றுக் கொடுத்தேன்..
ஆரம்பத்தில் வாக்கியங்களை சொல்லுவதில் மட்டும் கவனம் கொடுத்தவனிடம் .,டிவி-விளம்பரங்களில் வரும் குழந்தைகள் வெறும் வார்த்தைகளில் மட்டும் கவனம் செலுத்தி ஒரே போல் முகத்தை வைத்து பேசினால் நன்றாகவா இருக்கும் என சொல்லிக் காண்பித்து புரிய வைத்தேன்.
சிறிது நேரத்தில் புரிந்து கொண்டவன், நானே அசந்து போகும்படி அதை செய்து காண்பித்தான்.. அந்த உடையை போட்டுப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டவன் விருப்பத்தின் பேரில் அதை போட்டும் அவன் சொல்லியதை ஆசையாக படம் பிடித்தும் வைத்தேன்.. பின் அவன் அப்பாவிடமும் , வீட்டுக்கு வந்த விருந்தாளிகளிடமும் என தானே முன்வந்து எல்லாவற்றையும் அழகாக செய்து காண்பித்தான்..
கடந்த வருடம் விளையாட்டு போட்டிகளில் அவன் வாங்கிய பரிசுகளை அவனிடத்தில் காண்பித்து " இன்னைக்கு ஸ்கூல் -ல சரியா செஞ்சேன்னா இன்னும் ஒரு மெடல் இதுல சேரும்" என வீட்டில் இருந்து கிளம்பும்போதே அவனிடம் சொல்லி இருந்தேன்..
மாறுவேடப்போட்டி நடக்கும் நாளில் அவனையும் அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் பள்ளிக்கு சென்றோம்.. காரில் போய்க் கொண்டிருக்கும்போதும் அட்டகாசமாக செய்து காண்பித்தான்..
போட்டிகள் ஆரம்பித்ததும் சில குழந்தைகள் அதிக குறிப்புகளைக் கூட அழகாகவும், சில குழந்தைகள் பாதியில் மறந்து புறப்பட்ட அழுகையுடனேயும் கீழிறங்கி வந்தனர்.. ஆனால் எல்லா குழந்தைகளும் சொல்ல வந்தவற்றை எக்ஸ்பெஷனோ, ஆக்ஷனோ இல்லாமல்தான் செய்தனர்.. ஆனால் இவன் ஒவ்வொரு வார்த்தைகளையும் அந்த வார்த்தைகளுக்கேற்றவாறு கை அசைத்தும் , தலை அசைத்தும் சிரித்தவாறும் சொல்லி பழகி இருந்ததால் கொஞ்சம் நபிக்கையும் எதிர்பார்ப்பும் கூடி இருந்தன..
பயப்பட்டு , வார்த்தைகளை விட்டு விடுவானோ என நான் நினைத்ததை , வரிசையில் நின்றிருந்தவாறு என்னை பார்த்து சிரித்து கட்டை விரலை உயர்த்திக்காட்டி உடனே போக்க வைத்திருந்தான்.. அவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும்போதே அவன் ஆசிரியை அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தோம்..
அவன் மைக் முன்பு வருவதற்கு முன்பே படபடப்புடன் மொபைலில் வீடியோ ஆன் செய்து காத்திருந்தேன்.. மைக்-ன் முன் அவன் வந்து பேச ஆரம்பித்ததும் தூக்கி வாரிப்போட்டது போல் ஆனது.. இரு கைகளையும் முன்புறம் கட்டி விட்டது போல் கீழ் நோக்கி தொங்க விட்டுக்கொண்டு மனப்பாடம் செய்ததை ஒப்புவிப்பவன் போல் கூட்டத்தை பார்த்து பேசிக்கொண்டிருந்தான்..
இப்படி பேசிட்டு இருக்கானே என்ற அதிர்ச்சியில் , அடுத்த வாக்கியத்துக்கு சொல்லிக்கொடுத்தது போல் செய்வான் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போக பேசி முடிக்கும் முன்பாக மொபைலை கீழிறக்கி, திரும்பி என் கணவரை பார்த்தேன்.. அவர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.. என்னை சமாதானப்படுத்திடும் நோக்கில் தலையை அசைத்தார்..
பேசி முடித்ததும் என்னை பார்த்து சிரித்தவாறு வந்தவனிடம் முகம் கொடுக்காமல் திரும்பிக்கொண்டேன்.. பின்பு அருகில் வந்து அமர்ந்தவனிடம் "வீட்டில எப்படி பேசின , இங்க எப்படி பேசின" என கோபிக்க , உடனே "போம்மா" எனக் கோபமாக எழுந்து பின் வரிசையில் இருந்த அவன் அப்பாவுடன் போய் அமர்ந்து கொண்டான்..
எனக்கோ மனதே ஆறவில்லை .. "ஒருவேளை அவனிடம் பேசிக்கொண்டிருந்த அவன் ஆசிரியை பேசினால் மட்டும் போதுமென சொல்லி இருப்பாரோ" என்ற சந்தேகத்துடன் பதில் சொல்லாமல் போன அவனின் துடுக்கும் கோபத்தை அதிகப்படுத்தியது..
"சின்ன பையன்தானே , அவனுக்கு என்ன தெரியும், இருந்தும் நீ பண்றதெல்லாம் ஓவர் " என கடிந்து கொண்டவரிடம் , அவன் வீட்ல சரியா பண்ணலேன்னா கூட எனக்கு இவ்வளவு வருத்தம் இருந்து இருக்காது, வீட்ல அவ்வளவு நல்லா பண்ணிட்டு , ஸ்கூல்-ல போய் இப்படி சொதப்பிட்டானே, எதுவும் மறக்காம சொன்னான் , அதை அழகா நான் சொல்லிக்கொடுத்தது போல சொல்லி இருந்தா, பிரைஸ் கிடைக்காட்டிக் கூட மனசுக்கு ஒரு திருப்தி கிடைச்சு இருக்குமே " என ஆதங்கத்தில் புலம்பித்தீர்த்து விட்டேன்..
பின் அவனிடம் "ஏன் நீ வீட்ல பேசினது போல அங்க பேசல" எனக் கேட்க என் பிரெண்ட்ஸ் யாருமே எக்ஸ்பெஷனோ, ஆக்ஷனோ செய்யல , அதனால்தான் நானும் செய்யல " என்று கூலாக சொல்லி விட்டு வேறு செயலுக்கு கடந்து போனான்..
போட்டி என்ற ஒன்று அவனுக்கு புரியவே இல்லை என புரிந்தது.. குழந்தைகளுக்கு புரியாத ஒன்றுக்குள் இழுத்து விட்டு அவர்களை செம்மை படுத்துவதும் இயலாத ஒன்று என்று புரிந்தது....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.