- போராடி "பெற்ற" நீதியை பணம் "எளிதாக" சாகடித்து விடுகிறது....
- புகழ்ச்சிக்கு மயங்காதவன் , தன்னை புகழ்கிறவர்களுக்கு அடிமையாவதில்லை
- ஒருவரை பார்த்தவுடன் "எடை" போடுபவர் வாழ்வில் "தடை" தயங்கி தயங்கிதான் வரும்...
- பெரியவர்களிடம் அவமரியாதையாக பேசும் வார்த்தைகள் பந்தை போன்றது.. அப்படி வீசப்படும் பந்து காலச் சக்கரத்தின் ஓட்டத்தில் உருண்டு நம்மிடமே திரும்ப வரும்..
- முயற்சித்த பலருக்கு முதலில் ஏமாற்றத்தை கொடுத்து விட்டுதான் மாற்றத்தை கொடுத்திருக்கிறது "வெற்றி"
- நம் தாயால் மறுக்கப்பட்ட சில உரிமைகள் , இப்போது நம்மால் நம் பெண் குழந்தைகளுக்கும் மறுக்கப்படுகிறது... அன்று பாரபட்சமாக தெரிந்தது இன்று பாதுகாப்பானதாக தெரிகிறது...
- தாய், தந்தை பார்க்க சாதித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்...
- குறை கூறி ஒப்பிட்டு பேசப்படும் குழந்தைகள், ஒப்பனைக்காக மட்டுமே படிக்கின்றனர்..
- இன்னும் நன்றாக படித்திருக்கலாம் என உண்மையாக ஏங்குவது
மாணவர்கள் அல்ல, மாணவர்களாய் இருந்தவர்களே....!!!!
- சில மனிதர்கள் நமக்கு ஏற்படுத்தும் விபத்து காயங்களையும், வலியையும், கண்ணீரையும் மட்டும் தருவதில்லை, கூடவே அனுபவம் என்ற பாதுகாப்பு கவசத்தையும் கொடுக்கிறது... அதற்கு பிறகு அப்பாதுகாப்பு கவசத்தை அணிந்து செல்பவர்கள் அவ்விபத்திலிருந்து தப்பிக்கிறார்கள்... அணிய மறப்பவர்களும், மறுப்பவர்களும் விபத்தை சந்தித்து கொண்டேதான் இருக்கிறார்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.