- நான் போடும் பெரும்பாலான பதிவுகளின் பின்னால் ஒரு சில நினைவுகளும், சில மனிதர்களும் இருக்கிறார்கள்... ஓய்வு நேரத்தில் நான் எழுதிய ஒவ்வொரு பதிவாக பார்க்கும்போது ஒரு அழகிய ஆல்பத்தை பார்ப்பது போல பழைய நிகழ்வுகளையும் , சம்பந்தப்பட்ட மனிதர்களையும் என் மனதில் நிறுத்தி விட்டு போகிறது... ஆக ஒவ்வொரு பதிவுகளும் எனக்கு ஒரு புகைப்படத்தை போலதான்.....
- தம் அனுபவத்தில் பாடம் கற்பவர்கள் தோற்றுக்கொண்டே இருக்க மாட்டார்கள். மற்றவர்கள் அனுபவத்தில் பாடம் கற்பவர்கள் தோற்கவே மாட்டார்கள்.
- தர்மம் நம் தலையை மட்டுமல்ல நம் தலை முறையையும் காக்கும்
- துரோகியே மரணப் படுக்கையிலோ, மரணித்தோ இருந்தாலும், அவர்கள் செய்த சில உதவிகளும், நல்லவைகளும்தான் தான் முதலில் மனதில் தோன்றி கண்ணீரை வரவழைக்கின்றன
- வாயை குறைச்சா வம்பும் குறையும், உடம்பும் குறையும்..
- யாராவது ஒன்றுக்கு இரண்டு தடவை ஒரே கேள்வியை கேட்டால் எட்டிப்பார்க்கும் கோபம், குழந்தைகள் பல தடவை கேட்டால் வாலை கூட நீட்டுவதில்லை..
- நண்பர்களின் உயர்வில் ஆண்களுக்கு இருக்கும் சந்தோஷம், தோழிகளின் உயர்வில் பெண்களுக்கு இருப்பதில்லை...
- வாழ்க்கைல பல தடவை அவமானப்பட்டு, பல பேரோட வார்த்தைகளால் காயப்படறப்போ, அலட்சியம் என்ற களிம்பை பூசி, தன்னம்பிக்கை என்ற மருந்து எடுத்துக்கிட்டா காலம் என்ற மருத்துவர் கண்டிப்பா அதை குணப்படுத்திடுவார்....
- பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சு கொடுக்கிற வரை பொண்ணுங்களோட ஆரோக்கியத்துல கவனம் எடுத்துக்கிற சில அம்மாக்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்தவுடன் மருமகன்கள் ஆரோக்கியத்தை பத்தி கவலைப்பட ஆரம்பிச்சுடுவாங்க....இந்தப் பையன் இவகிட்ட வந்து மாட்டிக்கிட்டானே என்றுதான்... (நம்ம சமையல் அப்புடீ.....................................)
- உப்புமா பெறாத விஷயத்துக்கெல்லாம் இந்த நேரத்தை அதுல பயன்படுத்தியிருக்கலாம்ல அப்படின்னு "டைம் மேனஜ்மென்ட்" பத்தி வகுப்பெடுக்க கணவர்கள் உபயோகிக்கும் வார்த்தை.....
1990-க்கு பின் - 24 மணி நேரமும் டிவி-க்கு முன்னாடியே உக்கார நேரம்
இருக்குல்ல..
2010-க்கு பின் - பேஸ்புக்கே கதின்னு இருக்க நேரம் இருக்குல்ல...
- குழந்தைகளின் தவறை சரி செய்ய நமக்கு சொல்லப்பட்ட கட்டுக்கதைகளையே கட்டவிழ்க்க வேண்டியிருக்கிறது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.