- நம்மிடம் தவறு இல்லை எனும் பட்சத்தில் மற்றவர்களின் பேச்சுக்கும், நினைப்புக்கும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது என்பது, செய்யாத தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை....
- நினைவுத் தூண்டிலில் எவை சிக்கினாலும் இரை ஆவதென்னவோ நேரம் மட்டுமே....
- சிலரின் சூழ்ச்சிகளின் போதோ, சிலரால் பணமோ அல்லது நம்பிக்கையோ ஏமாற்றப்படும் போதோ "எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்ற நினைப்புதான் எளிதில் அதில் இருந்து மீண்டு வர உதவுகிறது....
- வாழ்நாளின் ஓட்டத்தில் எங்கு இருந்தாலும், சிலரின் நட்புறவை மட்டும் காலம் முழுக்க பேணிக்காக்க வேண்டும் என்று யாருடைய நட்பையெல்லாம் நினைக்கிறோமோ, அந்த நட்புறவுகளில்தான், இணைப்பில் இருக்கையிலேயே ஒரு விரிசலை ஏற்படுத்தி,அந்த நினைப்பிற்கு ஏற்கமுடியாத முற்றுப்புள்ளியை வைத்து விடுகிறது காலம்...
- திருமணத்திற்கு முன்பு இருந்த குணாதிசயங்கள் திருமணத்திற்கு பின்பு தொடர்வதும் மாறுவதும் அவரவர் வாழ்க்கைத் துணையை பொருத்தே இருக்கிறது....
- காரணமே இல்லாம சிலர் பிரிஞ்சுட்டாங்க அல்லது பைசா பெறாத(வெற்று) காரணத்துக்கு சிலர் பிரிஞ்சுட்டாங்கன்னு சொல்றதே தப்பு... பைசா பெறாத காரணத்துக்கு பின்னாடி கூட "பிடிக்கல"ன்ற ஆகச்சிறந்த காரணம் இருந்தே தீரும்...
- பொய்களையும் ரசித்து சிரிக்க முடியுமென்றால் அது , விபரமறியா பிள்ளைகள் முதல் முறையாக சொல்லும் கற்பனை கலந்த பொய்களாக மட்டுமே இருக்கும்..
- நிகழ்வுகள் மின்மினிகளாய் மிளிர
அதன் வெளிச்சத்தில்
உறங்க மறுக்கிறது மனம்... - நம்பிக்கையின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது என் வாழ்க்கை ...
- பெரும்பாலானோர் செய்யும் நல்லவைகளும் கெட்டவைகளும் தான் எவரிடமிருந்து , என்ன பெற்றோமோ அதன் பிரதிபலிப்பே .. ஆதலால் கொடுப்பவைகள் சிறப்பானதாக இருக்க வேண்டும்..
தலைப்புகள்
- அஞ்சலி (1)
- அனுபவம் (34)
- எண்ணக்கீற்றுகள் (14)
- என் பிள்ளைகளின் உலகம் (26)
- கட்டுரை (15)
- கவிதை (67)
- திரை விமர்சனம் (3)
- நன்றி அறிவித்தல் (1)
- நிகழ்வுகள் (1)
- நினைவுகள் (3)
ஞாயிறு, 10 ஜனவரி, 2016
எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (12)
திங்கள், 28 டிசம்பர், 2015
பசங்க 2 (ஹைக்கூ)
பசங்க 2 - படம் நல்லா இருக்கு, பாருங்க என் சில நண்பர்கள் கூறி இருந்தனர்.. குழந்தைகள் படம்தானே , டிவி-யில் போடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம், "வந்த இரு படங்களில், இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன, போய் பார்ப்போம்" என்ற கணவரின் சொல்லில் காணாமல் போயிருந்தது..
தமிழ் நாடனின்(சூர்யா) சிறு வயது அறிமுகத்திற்கு பின் , இரு குழந்தைகள் கருவாக உருவாவதிலிருந்து அக்குழந்தைகளை, அவர்களின் குடும்பம், சூழ்நிலையை சுற்றி படம் நகர்த்தப்படுகிறது.. ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் கடைசியில் வரும் காட்சிகளும் கர்ப்பிணிகளுக்கு நல்ல அறிவுறுத்தல்கள்...
பின் அந்த இரு குழந்தைகளின் சேட்டைகள் ஆரம்பிக்கும்பொழுது என் பிள்ளைகள் முன் இருக்கையை பிடித்து நின்றுகொண்டு ஆர்வமாக படம் பார்க்க துவங்கி விட்டனர்.. அதுவும் நயனா சொல்லும் கதையில் வரும் ஸ்பைடர் மேன், டோரா வந்த பிறகு , தன் ஆதர்ச கதாபாத்திரங்கள் பெரிய திரையிலும் வந்த மகிழ்ச்சியை பின்புறம் என்னை பார்த்து சிரித்து பகிர்ந்து கொண்டான் மகன்..
அதீத திறமையுள்ள இரு குழந்தைகள் இப்போதுள்ள கல்விமுறைக்கும், பள்ளி முறைக்கும் இணங்க முடியாமல் செய்யும் சேட்டைகளும் , அதனால் அவர்கள் பெறும் தண்டனைகளும், பெற்றோர்களின் திணறலும் என காட்சிகள் ரசிக்கவே வைக்கின்றன.. விருந்தினர்கள் முன் தம் பிள்ளைகளின் திறமையை வெளிச்சம் போட்டு காண்பிக்க துடிக்கும் இன்றைய பெற்றோர்களின் எண்ணத்தையும் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள்..ஒருகட்டத்தில் பிள்ளைகளின் சேட்டைகளை சகிக்க முடியாமல் , அவர்களை விடுதியில் சேர்க்கும் காட்சியின்போது என்னை அறியாமலேயே கண்கள் துளிர்த்தது..
சூர்யா-அமலாபால் குடும்பத்தில் நடப்பதாகக் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும், தித்திப்பையும், ஏதோ ஒரு ஏக்கத்தையும் கொடுத்து விட்டுப் போகிறது..
வசனங்களை கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.. படம் வருவதற்கு முன்னரே பரிச்சயமாகி விட்ட இப்படத்தின், "குழந்தைகள் எப்பவும் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க , கேட்ட வார்த்தையைத்தான் பேசுவாங்க" என்ற வசனமும் சரி, "மதிப் பெண்களை எடுக்கணும்னு நினைக்காம மதிப்பான எண்ணங்களை வளர்க்கணும்” என்பது போன்ற பல வசனங்களும் படத்துக்கு கூடுதல் பிளஸ்.. அதிலும் "ஒரு 70 கிலோ உருவம் ஒரு 17 கிலோ உருவத்த போட்டு அடிக்கிறது எவ்வளவு பெரிய வன்முறை இல்ல" என்ற வசனம் ஒரு குற்ற உணர்ச்சியை என்னிலிருந்து கிளப்பி விட்டது..
கடைசியில் பிள்ளைகள் மேடையில் தங்கள் திறமையை காட்டி விட்டு வந்ததும், அவர்களை வெளியில் அழைத்து வந்து , உங்களுக்குத்தான் பரிசு கிடைச்சு இருக்கு.. உங்கள் பரிசுகளை ஜட்ஜ்கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்துட்டேன் என சூர்யா சொல்வதும், மற்ற பிள்ளைகளும் நல்லா பண்ணினாங்க , உங்களுக்கு கிடைச்சு அவங்களுக்கு கிடைக்கலன்னா அவங்க மனசும், அவங்க பெற்றோர் மனசும் கஷ்டப்படும் இல்லையா அதுதான் என சமாதாம் கூறுவதும்தான் கொஞ்சம் என் மனதுக்கு ஏற்புடையதாக இல்லை..
பரிசு என்பதே அவர்களின் மற்றும் மற்றவர்களின் திறமையை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் என்றிருக்கும்போது, அதை மறைமுகமாக பெற்றுக்கொள்ளலாம் என்று காட்டி இருப்பதை விட, தோல்வியையும் சுலபமாக எடுத்து , வெற்றியை நோக்கி மீண்டும் முன்னேற உத்வேகம் காட்டுவது போலான காட்சிகளை இணைத்திருந்தால், இந்த நல்ல படத்தில் இதுவும் ஒரு கருத்தாக இருந்திருக்கும்..
எனினும் மொத்தமாக பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பு எடுத்துள்ளனர்... படம் முடிந்து வெளியில் வரும்போது , ஒரு படம் பார்த்த திருப்தியை விட , ஒரு பாடம் படித்த திருப்திதான் எழுந்தது..
எந்த படமாக இருந்தாலும் பார்த்து விட்டு வெளியில் வரும்போது , பிள்ளைகளிடம் "படம் பிடிச்சு இருந்துதா" என கேட்பது வழக்கம்.. இந்த முறை மகனாகவே முன்வந்து , "படம் நல்லா இருக்கும்மா" எனக் கூறினான்..
"உனக்கு அதுல யாரை பிடித்தது"எனக் கேட்டேன், "டாக்டர்" என கூறினான்....

புதன், 23 டிசம்பர், 2015
எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (11)
- முன்பிருந்ததை விட வாழ்க்கை(நிலை)யில் சரிந்தவர்களும், சரிந்ததாக நினைத்துக்
கொண்டிருப்பவர்களும் பழைய தொலைந்த நட்புகளை தேடுவதில்லை.. - அன்பை விதைத்தால் அன்பேதான் முளைக்கும் என்ற எண்ணமும், எதிர்பார்ப்பும் தவறு. பெரும்பாலும் துரோகமும், அலட்சியமும், அவமதிப்புமே முளை விடுகின்றன...
இதற்கு தீர்வு....
தகுந்த இடம் பார்த்து அன்பை விதைக்கும் தெளிவு வேண்டும்
அல்லது
முளைப்பது எதுவாக இருந்தாலும் அதை அன்பாக மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் வேண்டும். - வாய்ப்புகளை சூழ்நிலைகளுக்காக தவிர்த்து விடாதீர்கள். விட்டால், பின் வாய்ப்புக்கான சூழ்நிலைக்காக காக்க வேண்டி இருக்கும்.
- நிராகரிப்பு என்பது மிகுந்த வலி கொண்டது. அதுவும் காரணமறியா நிராகரிப்பு என்பது வலியோடு அவஸ்தையும் கூடியது....
- (பல)செயல்களை பொறுத்தவரை வாழ்க்கையும் ஒரு வட்டம்தான். வாழ்க்கை நம்மை எப்படி தள்ளிக்கொண்டு போனாலும் திரும்ப அதே செயல்களில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. என்ன, இப்போது அந்த செயல்கள் வேறு ஒருவரால் செய்யப்பட்டிருக்கும், அவ்வளவுதான்........
- நேர்மையானவர்கள் யாரிடமும் விலை போவதில்லை.. துரதிர்ஷ்டம், நேர்மையும் இங்கு எங்கும் விலை போவதில்லை...
- வலியை விட கொடியது அந்நேரம் உடனிருப்பவர்கள் அதை அலட்சியம் செய்வது
- ஒரு பாராட்டிலோ அல்லது வெற்றியிலோ திருப்தியடைந்து விட்டால், அதுதான் கடைசி பாராட்டாகவோ, வெற்றியாகவோ இருக்கும்...
- சுயம் மறைத்து பழகும் எந்த உறவும் நீடித்து செல்வதில்லை....
- சிலரிடம் ஆறுதலைத் தேடி நாம் சொல்லும் விஷயங்களே, நமக்கான சாட்டைகளாக மாறி விடுகின்றன.....
செவ்வாய், 15 டிசம்பர், 2015
கண்ணீர் எனும் மருந்து
"கண்ணீர் விடுவது ஆணுக்கு அழகல்ல" , "கண்ணீர் விட்டே பெண்கள் காரியத்தை சாதிச்சுடுவாங்க" அழுகையைப் பற்றி இப்போதும் கூட நம் காதுகளில் சில சந்தர்ப்பங்களில் கேட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள்தான் இது... ஆனால் என்னைப் பொருத்தவரை "அழுகை ஒரு மருந்து".. அது கூடினாலும் ஆபத்து, குறைந்தாலும் ஆபத்து....
இங்கு தன் கண்ணீரால் தலையணையை ஈரப்படுத்தாத ஒருவருமே இருக்க முடியாது....
நான் பிறந்ததிலிருந்து தேவைகளுக்காக அழுத அழுகை இப்போது ஆறுதலுக்காக தேவைப்படுகிறது...எனக்கு அழுகையை பரிசாகக் கொடுத்து ரசிக்க காத்திருந்தவர்களும் உண்டு , தங்களை அறியாமல் என்னை அழ வைத்தவர்களும் உண்டு....
பொது இடங்களில் வரம்பு மீறி காயப்படும்போது பீறிட்டு வரும் அழுகையை அடக்கி வைத்து, கட்டுப்படுத்தப்பட்ட அழுகையை வெளிக்கொணர யாருமில்லாத இடம் தேடி இருக்கிறேன்.. இருந்தும் பொதுவான இடங்களில் நாம் மறைந்திருந்து அழுதாலும் பின்னர் நம் முகம் காட்டிக் கொடுத்து விடுமே என அதை என் வீடு வரை கொண்டு செல்வேன்... சில நேரம் என் தாய் மடியில் படுத்து ஆறுதல் தேடுவேன்.. அவர் கூறும் ஆறுதல் வார்த்தைகள் அச்சமயம் தேற்றினாலும் இரவில் படுக்கும்போது யாருமறியாமல் கண்ணீர் விட்டு அழுவது மட்டுமே மனசை லேசாக்கும்... சில சந்தர்ப்பங்களில் என் அழுகை எனக்கு தரும் ஆறுதலை நான் உணர்வதற்குள்ளேயே, சில நிமிடங்களிலேயே ஆழ்ந்த அமைதியான உறக்கத்தைக் அழுகை கொடுத்து விடும்... இந்த உலகில் உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்களில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கும் வளர்ந்த மனிதர்கள் யார்? சந்தோஷமாக இருக்கும் நிமிடங்களிலும் கவலை என்னும் பாரம் எடை குறைந்தாவது முதுகில் தொற்றிக்கொண்டுதானே உள்ளது...
சில நேரங்களில் சில சம்பவங்களால் கட்டுப்படுத்தி வீட்டுக்கு கொண்டு வரப்படும் அழுகை வீட்டில் உள்ள குதூகல சூழலால் என்னை அறியாமல் என்னை விட்டு போயிருக்கும்.. போயிருக்கும் என்றவுடனே நிரந்தரமாக அச்சம்பவங்களை பற்றிய வலி தரும் அழுகை போயிருக்கும் என்று அர்த்தமல்ல.... மற்றொரு நாள் மனம் பாரமாக இருக்கும்போது இந்த சம்பவமும் அதே போல் முன்பு காயப்பட்ட சம்பவங்களும் வரிசையாக வந்து கண்ணீரைக் கொடுத்து என் தலையணையை ஈரமாக்கிக் கொண்டிருக்கும்....
வீட்டினுள் நான் நினைத்து நினைத்து அழும் அளவுக்கான சம்பவங்கள் இதுவரையில் நடந்ததில்லை . ஏதோ அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான்... இப்படி ஆழ வைத்த சிறு சிறு சம்பவங்கள் கூட காலப்போக்கில் மறக்கக்கூடியவையாகவே இருந்தன... இப்போது இந்த சிறு சிறு சம்பவங்களுக்கு அழுததை நினைத்தால் சிரிப்பாக இருக்கும்... ஆகையால் இவை அதிக காலத்துக்கு கண்ணீரை இழுத்துக்கொண்டு வந்ததில்லை...
ஆரம்பத்தில் கண்ணீர் துயரப்படும்போது வரும் வேதனை ஊற்றாக தெரிய ஆரம்பித்தது மாறி நாளடைவில் மன அழுத்தம் போக்கும் மருந்தாகத் தெரிய ஆரம்பித்தது.. என் பெற்றோரோ, கணவரோ தரும் தேற்றுதலை விட ஆழ்ந்த ஆறுதலை அது தருகிறது... ஆனால் அதுவே தினசரி அழுவதற்காக காரணம் தேடும் வகையில் முற்றிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன்.....
நான் யாருக்கும் தொந்திரவு தராத மௌனமான அழுகையை நேசிக்கிறேன், எனக்கு அழுகையை தரும் மனிதர்களை அதை விட நேசிக்கிறேன்....

ஆடு பகை , குட்டி உறவா?
"ஆடு பகை , குட்டி உறவா?"இது வெறும் வாக்கியமாக மட்டும் இல்லாமல் நம்மில் பலரின் செயலாகவும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது..
சின்ன குழாயடி சண்டை முதல் பெரிய சொத்து பிரச்சனை வரை என பெரியவர்களுக்குள் வரும் பிரச்சனைகளால் அந்த இல்லங்களில் உள்ள விவரம் புரிந்து கொள்ள முடியாத சிறுவர்களும் முன்பிருந்த உறவுகளிலிருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர்...
இது போல பெரியவர்களுக்குள் எழுந்த மனப் பிரச்சனைகளால் ஒரு குடும்பம் போல உறவாடிய, நாங்கள் தூக்கி வளர்த்த சிறுவர்கள் (5 வயது முதல் ) நாம் ஆசையாக கூப்பிட்டு நலம் விசாரிக்கும்போது எடுத்தெறிந்து பேசி சென்றதை கேட்டு, இவனுக்கு நடந்தது என்னன்னு தெரியுமா, நாம என்ன தப்பு செஞ்சோம்னு இந்த பையன் இப்படி பேசிட்டு போரான்மா என என் அம்மாவிடம் வருத்தப்பட்ட காலங்கள் உண்டு.. அந்த குழந்தைகள் எங்கள் வீடு தாண்டி அடுத்த வீட்டுக்கு செல்லும்போது மனம் வலிக்கும்... அவங்க வீட்ல பேச கூடாது, போக கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க, பிள்ளைக என்ன செய்யும் என சமாதானப் படுத்துவார்......
இப்போது என் பெற்றோர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டதை நினைத்துப் பார்க்கும்போது அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. (என் பெற்றோர்
என்பதற்காக நான் இதை கூறவில்லை) அவர்கள் மனவருத்தம் அடைந்து பேசாமல் இருந்த சிலரிடமும் , இவர்களை சில காரணங்களினாலும் , காரணமே இல்லாமலும் ஒதுக்கி வைத்திருக்கும் சிலரிடமும் நாங்கள் பழகக் கூடாது என தடை போட்டதில்லை.. இதன் பலன் என்னவெனில் , இப்படி பேசாமல் இருந்த உறவுகள், நண்பர்கள் எல்லாம் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பழையது மறந்து அழைத்துக் கொள்வர். அதே போல் துக்க காரியங்களுக்கு முன்னால் வந்து நிற்பர்...
புகைப்படங்களை பிள்ளைகளுக்கு காட்டிக் கொண்டிருக்கும்போது எனக்கு மனவருத்தம் உண்டாக்கியவர்களோ , உதாசீனப்படுத்தியவர்களோ அதில் ஏதேனும் இடத்தில் தென்படும்போது (அவர்களை முடிந்தவரை நேரில் பார்ப்பதை தவிர்ப்பேன்..நேரில் பார்க்க நேரும்போது குறைந்தது சிரித்து விட்டாவது செல்வேன், சிலரை பார்க்காதது போல் சென்றிருந்தால் அவர்கள் அதற்கு முன் என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டவர்களாக இருப்பர், இம்முறை நாம் பார்த்து திரும்பவும் அவர் அவ்வாறு செய்தால் மன சஞ்சலம் உண்டாகுமே என தவிர்த்திருப்பேன்.. ) உடனே என் பிள்ளை (அவன் அறிந்தவர்களை)சந்தோஷமாக அவர்களை சுட்டிக்காட்டி குதூகலப்படுவான்.. அப்போது நம்மை வெறுத்தவர்கள் மேல் நம் மகன் இவ்வளவு பாசமாக இருக்கிறானே என்று மனம் சஞ்சலப்படும்தான்... ஆனால் நம்மை பிடிக்காதவர்களுக்கு நம் பிள்ளைகளையும் பிடிக்காது என எவ்வாறு நினைக்க முடியும் என்று சஞ்சலத்தை மாற்றிக் கொள்வேன்... என் பிள்ளைகள், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்த கெட்டவர்களிடம் மட்டும் அவர்கள் பேசாமல் இருக்கட்டும் என்ற மனப்பக்குவத்தை வரவழைத்துக்கொண்டேன்... (இதுவே தீய நடத்தை உள்ளவர்கள் என்றால் அவர்களிடம் இருந்து விலக்கியே வைப்பேன்)
பிள்ளைகளுக்கும் நல்லவர் யார், கெட்டவர் யார் என அறிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது அவர்களாகவே அறிந்து கொள்வர்... அந்த அனுபவம்தான் அவர்களுக்கு நல்லது எது தீயது எது என கற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கொடுக்கும்.. அதை விடுத்து, நமக்கு ஆகாதவர்கள் தீயவர்கள் என சொல்லிக் கொடுத்து வளர்ப்பது, பிறரை வெறுத்தல் எனும் நஞ்சை ஊற்றி வளர்ப்பதற்கு சமம்...

பிள்ளைகளின் கனவு
"அண்ணா குத் பாய்" என்ற மகனின் சத்தத்தை கேட்டு அருகில் படுத்திருந்த அவன் முகத்தை பார்த்தேன்.. அவன் ஆழ்ந்த உறக்கத்தில் உளறி விட்டு சலனமேதும் இல்லாமல் உறங்கிக் கொடிருந்தான்.. கனவில் தன்னை பற்றி குறை கூறும் யாரோ ஒருவருக்கு (நானோ, அவன் தந்தையோ அல்லது மற்றவரோ ) கூறும் பதிலாகவோ அல்லது தன்னை அடையாளப்படுத்தி பிறரிடம் அறிமுகம் செய்து வைக்கவோ அந்த வார்த்தையை அவன் கனவில் கூறிக் கொண்டிருந்திருக்கலாம்...
ஆனால் எனக்கு இது புதியதாக இருந்தது.. பேசத் தெரியாத குழந்தை பருவத்தில் அவன் இருந்த போதும், அவன் தங்கை இருந்தபோதும் உறக்கத்தின் போது அவர்கள் சிரித்தும் அழுது சிணுங்கியும் கண்டிருக்கிறேன்.. அப்போதெல்லாம் அதை மற்றவர்களிடமும், பெற்றவர்களிடமும் கூறும்போது, கடவுள் வந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பார், பூனை வந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும், முன் ஜென்மத்து மனிதர்களை சந்தித்த நினைவோ அல்லது அந்த சம்பவங்களின் நினைவோ எட்டி பார்த்திருக்கலாம் என கூறப்பட்ட காரணங்களால், அதற்கு மேல் அவற்றை தாண்டி நான் சிந்தித்ததில்லை..
பிள்ளைகளுக்கு நமக்கு வருவதை போல் உறக்கத்தில் கனவுகள் வரும் என எனக்கு தெரிந்திருந்தாலும் இந்த நிகழ்வின் போதுதான் அதை உணர்ந்தேன்... அவனுக்கும் ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது என இது உணர வைத்தது.. அவன் என் மூலம் வருகை தந்து வாழ வந்தவன் என்ற உண்மை விளங்கியது.. இதை உணர்ந்தபோது அவன் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளிக்கத் தோன்றியது... உறக்கத்தில் வருகிற கனவுகளுக்கு மட்டுமல்ல, அவன் வளர வளர அவனை உறங்க விடாமல் செய்கிற அவனின் லட்சிய கனவுகளுக்கும் மதிப்பளித்து, வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க மனம் முழுமையாக இசைந்து வருவதை உணர்ந்தேன்.....
கடந்து போன காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத என் ஆசைகளையும் வரும்காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என் லட்சியகளையும் என் பிள்ளைகளின் முதுகின் மேல் இறக்கி வைக்க நினைத்திருந்த என் எண்ணமும் மெல்ல மாறியது... என்னால் முடிந்தால் என் கனவுகளை லட்சியங்களை நிறைவேற்றி கொள்ள பார்க்கிறேன்.. இவற்றை என் பிள்ளைகளின் முதுகில் இறக்கி வைத்தால் அவர்களின் கனவுகளை லட்சியங்களை இறக்கி வைக்க அவர்கள் அவர்களின் பிள்ளைகளை தேடுவர்...
இப்படி ஒவ்வொருவரும் அவரவர் லட்சியங்களை பிள்ளைகளின் மேல் திணித்துக் கொள்ளும் எண்ணம் கொண்டிருந்தால் ஒவ்வொருவரின் லட்சியங்களும் ஒரு தலைமுறை தாண்டிதான் (சிலருக்கு மட்டுமே ) பலிதம் ஆகும் என்பது மட்டுமல்ல நாம் வாழ வந்த நம் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாமல் முடிந்து போகும் என தோன்றியது..
என் கண்முன் என்னால் உருவாக்கப்பட்டிருந்த அறியாமை என்னும் திரையை இச்சம்பவம் அகற்றியது....
" அண்ணா குத் பாய் " என உறக்கத்தில் உளறி முடித்திருந்த மகனின் கன்னத்தை "நீ குட் பாய்தான் செல்லம்" என மெல்ல வருடி விட்டேன்.. அந்த வருடலின் உணர்வு கூட அறியாதவனாக ஆழ்ந்த உறக்கத்தின் கனவுகளுக்குள் அவன் சிக்கிக் கொண்டிருந்தான்.....

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)