"அண்ணா குத் பாய்" என்ற மகனின் சத்தத்தை கேட்டு அருகில் படுத்திருந்த அவன் முகத்தை பார்த்தேன்.. அவன் ஆழ்ந்த உறக்கத்தில் உளறி விட்டு சலனமேதும் இல்லாமல் உறங்கிக் கொடிருந்தான்.. கனவில் தன்னை பற்றி குறை கூறும் யாரோ ஒருவருக்கு (நானோ, அவன் தந்தையோ அல்லது மற்றவரோ ) கூறும் பதிலாகவோ அல்லது தன்னை அடையாளப்படுத்தி பிறரிடம் அறிமுகம் செய்து வைக்கவோ அந்த வார்த்தையை அவன் கனவில் கூறிக் கொண்டிருந்திருக்கலாம்...
ஆனால் எனக்கு இது புதியதாக இருந்தது.. பேசத் தெரியாத குழந்தை பருவத்தில் அவன் இருந்த போதும், அவன் தங்கை இருந்தபோதும் உறக்கத்தின் போது அவர்கள் சிரித்தும் அழுது சிணுங்கியும் கண்டிருக்கிறேன்.. அப்போதெல்லாம் அதை மற்றவர்களிடமும், பெற்றவர்களிடமும் கூறும்போது, கடவுள் வந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பார், பூனை வந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும், முன் ஜென்மத்து மனிதர்களை சந்தித்த நினைவோ அல்லது அந்த சம்பவங்களின் நினைவோ எட்டி பார்த்திருக்கலாம் என கூறப்பட்ட காரணங்களால், அதற்கு மேல் அவற்றை தாண்டி நான் சிந்தித்ததில்லை..
பிள்ளைகளுக்கு நமக்கு வருவதை போல் உறக்கத்தில் கனவுகள் வரும் என எனக்கு தெரிந்திருந்தாலும் இந்த நிகழ்வின் போதுதான் அதை உணர்ந்தேன்... அவனுக்கும் ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது என இது உணர வைத்தது.. அவன் என் மூலம் வருகை தந்து வாழ வந்தவன் என்ற உண்மை விளங்கியது.. இதை உணர்ந்தபோது அவன் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளிக்கத் தோன்றியது... உறக்கத்தில் வருகிற கனவுகளுக்கு மட்டுமல்ல, அவன் வளர வளர அவனை உறங்க விடாமல் செய்கிற அவனின் லட்சிய கனவுகளுக்கும் மதிப்பளித்து, வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க மனம் முழுமையாக இசைந்து வருவதை உணர்ந்தேன்.....
கடந்து போன காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத என் ஆசைகளையும் வரும்காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என் லட்சியகளையும் என் பிள்ளைகளின் முதுகின் மேல் இறக்கி வைக்க நினைத்திருந்த என் எண்ணமும் மெல்ல மாறியது... என்னால் முடிந்தால் என் கனவுகளை லட்சியங்களை நிறைவேற்றி கொள்ள பார்க்கிறேன்.. இவற்றை என் பிள்ளைகளின் முதுகில் இறக்கி வைத்தால் அவர்களின் கனவுகளை லட்சியங்களை இறக்கி வைக்க அவர்கள் அவர்களின் பிள்ளைகளை தேடுவர்...
இப்படி ஒவ்வொருவரும் அவரவர் லட்சியங்களை பிள்ளைகளின் மேல் திணித்துக் கொள்ளும் எண்ணம் கொண்டிருந்தால் ஒவ்வொருவரின் லட்சியங்களும் ஒரு தலைமுறை தாண்டிதான் (சிலருக்கு மட்டுமே ) பலிதம் ஆகும் என்பது மட்டுமல்ல நாம் வாழ வந்த நம் வாழ்க்கையும் அர்த்தம் இல்லாமல் முடிந்து போகும் என தோன்றியது..
என் கண்முன் என்னால் உருவாக்கப்பட்டிருந்த அறியாமை என்னும் திரையை இச்சம்பவம் அகற்றியது....
" அண்ணா குத் பாய் " என உறக்கத்தில் உளறி முடித்திருந்த மகனின் கன்னத்தை "நீ குட் பாய்தான் செல்லம்" என மெல்ல வருடி விட்டேன்.. அந்த வருடலின் உணர்வு கூட அறியாதவனாக ஆழ்ந்த உறக்கத்தின் கனவுகளுக்குள் அவன் சிக்கிக் கொண்டிருந்தான்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.