தலைப்புகள்
- அஞ்சலி (1)
- அனுபவம் (34)
- எண்ணக்கீற்றுகள் (14)
- என் பிள்ளைகளின் உலகம் (26)
- கட்டுரை (15)
- கவிதை (67)
- திரை விமர்சனம் (3)
- நன்றி அறிவித்தல் (1)
- நிகழ்வுகள் (1)
- நினைவுகள் (3)
ஞாயிறு, 29 மார்ச், 2020
கோபம்
சிலரது வார்த்தைகளில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன்...
வார்த்தைகள் நழுவும்போதோ
கோபம் தன் பிடியைத்
தருகிறது..
மட்டுமன்றி முன் நிகழ்ந்த
அத்தனை கசப்பின்
சாயங்களையும்
தன் பிடியின் வழியே
என்னுள் இறக்குகிறது..
தருவிக்கப்பட்ட சாயங்களுடன்
கோரமாக காட்சியளித்து
ராட்சசி எனும் பட்டத்துக்குள்ளும்
பொருத்தப்படுகிறேன்..
வார்த்தை தந்தவர்களோ
தன் வார்த்தைகளைப் போலவே
நழுவியிருக்கின்றனர்..
கனம்
நம் நினைவுகளின்
கனம் தாங்காமல்
திணறுகிறேன்..
கனம் தாங்காமல்
திணறுகிறேன்..
நானும்தான்
சுமந்து கொண்டிருக்கிறேன்
என்று மட்டும் சொல்..
சுமந்து கொண்டிருக்கிறேன்
என்று மட்டும் சொல்..
கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்
ஆசுவாசப்படுத்திக் கொள்வேன்
கவிதைக்கீற்றுகள்
பதிவேற்றம் செய்த புகைப்படங்களை
திரும்பத்திரும்ப பார்க்கிறேன்
மற்றவர்களின் பார்வையில்...
---xxx---
அவள் சிரிப்பு பிடித்திருக்கிறது
என அவன் சொன்னதிலிருந்து
கண்ணாடியும்
அடிக்கொருமுறை
பார்த்துக் கொண்டிருக்கிறது
அவள் சிரிப்பை.. ❤️❤️❤️
---xxx---
பிறருக்கு கொடுக்கும்போது
சலிப்பதில்லை..
நமக்காக
உபயோகிக்க
முற்படும்போதுதான்
திணறுகிறது...
சலிப்பதில்லை..
நமக்காக
உபயோகிக்க
முற்படும்போதுதான்
திணறுகிறது...
---xxx---
உன் நினைவில்
தேய்கிறேன்
நான்...
தேய்கிறேன்
நான்...
என்னுள்
வளர்கிறாய்
நீ...
வளர்கிறாய்
நீ...
---xxx---
கண்ணுறங்கும் நேரத்தில்
தாயைத் தேடி ஓடும்
கன்றைப் போல
உன் நினைவைத் தேடி
ஓடுகிறது மனம்...
---xxx---
உன் மீதான என் ஈர்ப்பு
தீர்ந்து போவதற்காவது
உன் அருகாமை
வேண்டும் எனக்கு....
---xxx---
ஒரு கடுஞ்சொல்
சுலபமாக நெஞ்சில் இறங்கி
உடல் முழுவதும் பரவி
காயத்தின் அடையாளத்திற்கு
குருதியாக கண்ணீர்....
---xxx---
நான் உன்னால்
காதலிக்கப்படுகிறேன்
என நண்பன் சொன்னபோது
நம்பவில்லை
நான் உன்னை
காதலிக்கவில்லை
என நீ சொன்னபோதும்
நம்பவில்லை
நான் இப்போது
இடம் மாறி இருக்கிறேன்
என காதல் சொன்னதை
மட்டும் நம்பிக்கொண்டேன்...
---xxx---
நினைவுத் தூண்டிலில்
எவை சிக்கினாலும்
இரை ஆவதென்னவோ
நேரம் மட்டுமே....
நினைவுத் தூண்டிலில்
எவை சிக்கினாலும்
இரை ஆவதென்னவோ
நேரம் மட்டுமே....
நினைவுப்புத்தகம்
இருவருக்கும்
பொதுவான நினைவுகளை
அடிக்கடி புரட்டிப் பார்க்கிறேன்...
நெகிழ்ச்சி
கண்ணீர்
இளநகை
பிரமிப்பு
மாறி மாறி
அணிவகுக்கின்றன...
புரட்ட புரட்ட
நினைவுகளோ
பொலிவையே
பெறுகின்றன...
ஒரே ஒரு வருத்தம்...
அதில்
உன் விரல் தடத்தை
கண்டறியும் வழி
மட்டும் தெரியவில்லை..
நினைவுகளில் வாழ்கிறாய் நீ
உன் நினைவில் நனைகையில்
என்னை மறக்கிறேன்
உடலில் உற்சாகம் வழிகிறது
நேரம் மறக்கிறேன்
நேரமோ காலத்தை
இழுத்து செல்கிறது
சூழல் மறக்கிறேன்
நடக்கும் நிகழ்வோ
பின்னாளில் அசை போட
நினைவாகாமல் கரைகிறது...
ஊண் மறக்கிறேன்
உன் நினைவுகளே
பசியாற்றும் உணவாகிறது..
உன் புராணம் பாடுகிறேன்
அகப்படுபவர்களை உன் நினைவு
ஒரு முறை தட்டி செல்கிறது..
இப்படி உன் நினைவில்
நான் வாழ வாழ
என்னுள் வளர்கிறாய் நீ………….
புறக்கணிப்புகள்
புறக்கணிப்புகள்
மிகுவலி தருபவை..
புறக்கணிப்புகள்
நம் நிலையை
தாழ்த்தி எண்ண வைப்பவை...
ஒரு சுடுசொல்லை
வாங்கும் கணத்தை விட
ஒரு புறக்கணிப்பை
எதிர்கொள்ளும் கணத்தின்
கனம் அதிகம்...
புறக்கணிப்புகளுக்கு
ஆதியிலிருந்தே
அவளை பிடிக்கும்...
அவளால்தான் தான் ஏனோ
அதனுடன் இன்னும்
பழக்கப்பட இயலவில்லை..
புறக்கணிப்பு நிகழ்த்தும்
மனிதர்களை
அவள் அன்றாடங்களிலிருந்து
நீக்க முயல்கிறாள்...
முயற்சியில் வெற்றி கண்டாலும்
புறக்கணிப்புகள்
அவளையே தொடர்கின்றன
வெவ்வேறு ரூபங்களில்..
திங்கள், 22 ஜூலை, 2019
என் பிள்ளைகளின் உலகம் (26)
ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் நிகிதாவுக்கு "living things , non living things பற்றிய வீட்டுப்பாடம்.. ஒருமுறை விளக்கியவுடன், "நம்ம வீட்ல உள்ள லிவிங் தாங்ஸ் எல்லாம் காமி" எனக் கேட்க , என்னை, மாமாவை, தாத்தாவை, பாட்டியை, அண்ணனை எனக் கை காட்டியவள் , பின் கட்டிலுக்கு அடியில் , மேஜைக்கு அடியில் , சுவற்றில் என நோட்டம் வீட்டுக்கு கொண்டிருந்தாள்..
அந்த அறையில் ஏதும் அவள் பார்வைக்கு தட்டுப்படாததால் அடுத்த அறைக்கு ஓடினாள்.. உடனே நான் " இன்செக்ட்ஸ் கிடைக்காட்டி , பரவால்ல, இங்க வா " என கூற , அங்கிருந்து சிரித்தபடி ஓடி வந்தவள் "சாமி போட்டோ" என்றாள்.. "சாமி போட்டோவா" என நான் புரிந்து சிரிக்க தொடங்கவும் "ஆமாம், சாமி, நாம கேட்டதெல்லாம் கொடுக்குதுல்ல " என கூறினாள்..
"அம்மா, சாமிதான் லிவிங் திங் , சாமி போட்டோ நான் லிவிங் திங் தான" என ரோஹித் கேட்க , சில நொடிகள் சிந்தனைக்கு பின் "ஆமாம்" என குழப்பத்துடன் கூறி முடித்தேன்..
நேற்று ரோஹித்தின் பாடநூலின் படி, "அம்மா, அப்பா, சிஸ்டர், பிரதர், க்ராண்ட்ப்பா, க்ராண்ட்மா அண்ட் டீச்சர் இவங்கதான் நம்மை பாதுகாக்கும் வளையத்தில் இருக்காங்க என கேள்விக்கான பதிலை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.. உடனே நிகிதா, "நீ, ஒருத்தங்களை மறந்துட்ட" என சொல்ல , "மாமாவையா, சித்தப்பாவையா" என ரோஹித் கேட்டான். நானும் , அம்மாவும், " நீ சாமியதான சொல்ற " எனக் கேட்டோம்.
"அவங்க பேர் மறந்துடுச்சு" என தடுமாறியவள் ,பின் "அவங்க பெரிய கன் வச்சுருப்பாங்க" எனக் கூறினாள்..
சில தினங்களுக்கு முன்தான் பிள்ளைகளுக்கு ராணுவ வீரர்கள் பற்றி கூறியிருந்தேன்.. நேற்றைய சூழ்நிலையில் ,உடனே அது அவள் மனதுக்குள் வந்தது , ஆச்சரியத்தோடு பிரமிப்பை கொடுத்தது..
இம்முறை "ஆமாம்" என குழப்பமில்லாமல் கூறினேன்..
22 -7 -2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)