ஸ்ரீதேவி
ஸ்ரீதேவியை பற்றி நினைவு அடுக்குகளில் தேடி சிறப்பான தகவல்கள் எடுக்க என் டீன் ஏஜ் பருவத்தில் அவர் கனவுக்கன்னியாக இருக்கவில்லை.. ஏனெனில் டீன் ஏஜிலும் அதன் பின்னான சில வருடங்களும் ரசிக்கும் சிலரின் நினைவுகளே பொக்கிஷங்களாக நம்முள் புதைந்திருக்கும் என்பது என் எண்ணம்.. அவர்களே நம் கனவு நாயக நாயகிகளாக இருந்திருப்பர்.. 80 -களில் பிறந்த எனக்கு சிம்ரனும், ரம்பாவுமே கனவுக்கன்னிகளாக வாய்த்திருந்தனர்..
ஆனால் நினைவு தெரிந்து பார்த்த மூன்றாம் பிறை படத்தில் அவரின் நடிப்பு என்னுள் ஆச்சரியப்படுத்தியது.. ஆனால் முடிவு சோகமாக முடிந்திருக்கும் படங்களை பார்ப்பது எனக்கு ஆகாதென்பதால் அப்படத்தை திரும்ப முழுதாக பார்த்ததில்லை.. அப்போது அவரின் அழகு எனக்கு பெரிதாக தெரிந்ததில்லை.. பின் அழகை ரசிக்கும் வயது வந்தபிறகு மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம் , ஜானி, சிகப்பு ரோஜாக்கள் ,வறுமையின் நிறம் சிகப்பு, மூன்றாம் பிறை (பாடல்களில் மூலம் ) மற்றும் இன்னும் சில படங்களில் அவரின் அழகை நடிப்போடு சேர்த்து கண்டு வியந்திருக்கிறேன்..
இப்போது நான் யோசித்து பார்க்கையில் , நான் பார்த்து ரசித்த/ரசிக்கிற பெண்கள் எல்லோருக்குமே ஸ்ரீதேவியின் சாயல் இருக்கிறது.. ஸ்ரீதேவியின் சாயல் இருப்பதால்தான் அவர்களை ரசித்தேனா என எண்ணிப்பார்த்தால் அதில் உண்மை இருப்பதாக தோன்றவில்லை.. ஏனெனில் அப்படிப்பட்ட லக்ஷணங்கள் உடையவர்களே என் கண்களுக்கு அழகாக தெரிகின்றனர்.. நான் விரும்பி ரசிக்கிற அவரின் அழகு அவரது மூக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னதான சினிமாக்களில் கண்டவைகளைத்தான்.. பின்னும் அவரின் அழகு போய் விடவில்லை என்றாலும் முன்பிருந்த அழகு (சுருள் கேசம் உட்பட ) இல்லை...
அவரின் அழகை ரசிக்கிறேன், திறமையை மதிக்கிறேன் என்பதற்காக மட்டும் இல்லை இந்த பதிவு.
யூ டியூபில் ஒரு நிகழ்ச்சியின் வீடியோ பார்த்திருந்தேன்.. அவரும் அவரின் மூத்த பெண்ணும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது.. அதில் அவரின் பெண் அணிந்திருந்த ஆடை பலரது கவனம் ஈர்க்கும் வண்ணம் கொஞ்சம் ஆபாசமாக இருந்தது.. அப்பெண்ணை மேய்ந்த சிலரின் பார்வையை அவர்களின் கண்களின் மூலம் கண்டு பரிதவித்த ஸ்ரீதேவியின் முகத்தை பார்த்தேன்.. பொது இடம் என்பதாலும் சுற்றிலும் மீடியாக்கள் உள்ளனர் என்பதாலும் உணர்ச்சியை மறைக்க அவர் முகத்தில் சிரிப்பை பூசினாலும் , அதையும் மீறி அந்த பரிதவிப்பை அவர் முகம் வெளிக்காட்டியது..
இருவரும் சேர்ந்து புகைப்படத்துக்கு போஸ் தருகின்றனர்.. பின் அவர் தனியாக புகைப்படத்துக்கு நின்றுவிட்டு போன பிறகு அவரின் மகள் தனியாக நின்று படம் எடுத்துக்கொள்ள மீடியாக்காரர்கள் முன் வர தயாராகும்போது, பின்னால் திரும்பி நின்றவாறு இருந்த ஸ்ரீதேவியின் கண்டிப்பு அவரை நிறுத்துகிறது..பின் அப்பெண்ணும் அவளின் தாய் கூடவே செல்கிறாள்.. ஆனால் அந்த கண்டிப்பை மீடியாக்கள் அறியாதவாறு இருக்க வேண்டுமென , அடுத்த நொடியில் மீடியாக்கள் முன்பு சிரித்த முகத்தை காண்பிக்கிறார்.. ஆனால் கேமரா அவரின் உணர்ச்சிகளை படம் எடுக்க தவறவில்லை..
அப்போதிருந்த ஸ்ரீதேவியின் பரிதவிப்பை மகள்களை பெற்ற அம்மாக்களால் மட்டுமே உணர முடியும்..
ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு என்பது முக்கியம்... இரண்டும்கெட்டான் வயதில் கண்டிப்போடான சிறந்த பாதுகாப்பை ஒரு தாயை தவிர வேறு யாராலும் ஒரு பெண்ணுக்கு தர முடியாது.. அதை கேட்க மறுத்தவர்கள் கூட தாயின் மறைவின் பின் அதை உணர்ந்து வருந்துவர்..
பல வருடங்களுக்கு முன் ஒரு சிறுகதை படித்தேன்.. எழுதியவரின் பெயரை இப்போது கவனிப்பது போல அப்போது கவனித்ததில்லை.. அதில் தாயின் சொல்படி உடை உடுப்பது ,தலை வாருவது , பொட்டு வைப்பது என அந்த பெண் கதாபாத்திரம் செய்வது போல் வரும்.. பின் பணிக்கு கிளம்பும்போது மறைந்த தாயின் புகைப்படத்துக்கு முன் நின்று அவள் கும்பிடும்போது , அந்த தாய் உயிரோடு இருந்தபோது சொன்னவைகளை அப்போது செய்ததில்லை, இப்போது அவர் கூறிய சொற்களின் படி செயல் படுகிறாள் என்பதாக முடியும்.. இன்னும் என்னால் மறக்க முடியாதவாறு பாதிப்பை ஏற்படுத்திய கதை அது..
இப்போதுதான் ஸ்ரீதேவியின் பெண் நடிக்கத் தொடங்கி இருக்கிறாள்.. புதிதான சூழ்நிலை, புதுவிதமான மனிதர்கள் என சந்திக்க வேண்டி வரும்போது , அத்துறையில் ஏற்கனவே இருந்த அவளின் தாய் உடன் இருந்திருந்தால் தக்க அறிவுரைகளையும், பாதுகாப்பையும் அவள் பெற்றிருக்க முடியும்.. ஆனால் இப்போது அவரில்லை என்பதால் அப்பெண்களுக்கான மிகப் பெரிய பேரிழப்பு இது.. தாயின் அரவணைப்பு தேவைப்படுகிற வயதில் இருக்கும்போது தாயை இழப்பது பெரும் கொடுமை..
நமக்கென்ன , இன்னும் சில நாட்களுக்கு அவர் நடித்த காட்சிகள் ஒளிபரப்படும்போதெல்லாம் நாம் எல்லோரும் ஒரு வித வருத்தத்துடன் முன்பை விட அவரை உற்று நோக்குவோம்.. பின் மறந்து போவோம்..ஆனால் அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்குத்தான் இது உண்மையான இழப்பு.. அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இறைவன் ஆறுதலை தரட்டும்..
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவிக்கு மனப்பூர்வமான அஞ்சலி.. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்...
- 26.2.2018

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.