அன்றன்று நடந்த நிகழ்வுகளை அப்போது பெற்றோரிடமும்(பெரும்பாலும் அம்மாவிடம்தான்) இப்போது கணவரிடமும் கொட்டி விடும் பழக்கத்திற்கு அவர்களின் காது கொடுத்து கேட்காத உதாசீனத்தால் கூட முட்டுக்கட்டை போட முடிந்ததில்லை....
நான் அப்படி அம்மாவிடம் ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும்போதே ,திடீரென சம்பந்தமே இல்லாத ஏதோ ஒன்றைப்பற்றி என்னிடம் கேட்டோ அல்லது செய்திருக்க வேண்டிய மறந்து போன செயல்களை தனக்குத்தானே சொல்லியோ , அதுவரை என் பேச்சைத்தான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்திருந்த நினைப்பில் தீ வைப்பார்.. கணவரோ ஒரு படி மேலே போய் கவனிக்காததை வலுக்கட்டாயமாக உடல் மொழியால்(மொபைலை நோண்டுவது, டிவி சேனலை கர்ம சிரத்தையாக மாற்றுவது ,இடையிடையே பிள்ளைகளிடம் பேசுவது , பல நேரங்களில், என்ன தொண தொணன்னு என்று அதட்டுவது வரை ) வெளிப்படுத்தி விடுவார்..
ஆனாலும் எனக்கு தேவை அவர்கள் கேட்டாக வேண்டும் என்பதில் இல்லை, என் மனதிலிருந்ததை சொல்லி விட வேண்டுமென்பதில்தான்.. ஆதலால் அவர்கள் கவனிக்காமல் இருப்பது பெரிய விஷயமாக படுவதே இல்லை..
ரோஹித்-க்கும் என் போல் பழக்கம்.. பள்ளி பேருந்திலிருந்து இறங்கியதுமே பள்ளியில் நடந்ததை ஒப்பித்து விடுவான்.. விடுபட்ட மறந்தவைகளை நினைவு வரும்போது இடை இடையே சொல்லுவான்.. ஆனால் கட்டாயமாக, நான் கவனிக்கிறேனா என்பதில் கவனமாக இருப்பான்.. கவனிக்காதது போல் பட்டால் என்னை வார்த்தைகளால் உலுக்கி எடுத்தாவது கேட்க வைத்து விடுவான்..
அன்றும் பேருந்திலிருந்து இறங்கியதும் , "பெனிட் எனக்கும், ஜெகனுக்கும் சாக்லேட் கொடுத்தான்மா.. நானும் , பெனிட்டுக்கும், ஜெகனுக்கும், பிரணவ்க்கும் சாக்லேட் கொடுக்கணும், வாங்கி கொடுங்க" எனக் கூறினான்.. "சரி, பெனிட் பிரணவ்-க்கு சாக்லேட் கொடுக்கலையா "எனக்கேட்டேன்.. "இல்லை, ரெண்டு பேரும் கத்தி சொல்லிட்டாங்க" என சொன்னான்..
"கத்தின்னா " எனக் கேட்டதும், ஆமா, உனக்கு தெரியாதா , கத்தின்னா கட் பண்ணுவோம்ல , அது மாதிரி, கத்தி சொன்னா ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்க" என விளக்கினான்..
ஏற்கனவே ஒருமுறை இந்த "கத்தி"அவன் பேச்சில் வந்திருந்தது.. பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலகட்டத்தின் ஒரு வாரம் அது.. அந்த வாரத்தில் ரோஹித் பள்ளியிலிருந்து எந்த புகாரை கொண்டு வருவான் என்றே காத்திருக்க வைத்திருந்தான்.. ஒருமுறை பேருந்தின் இருக்கையை கிழித்து விட்டான் என புகார், அடுத்த இரு நாட்களில் ஒரு பையனை அடித்து விட்டான் என புகார்.. இதை எல்லாம் பள்ளி பேருந்திலிருந்து இறக்கி விடும் பெண்மணி என்னிடம் சொல்லும்போது தலை குனிந்து கேட்டுக் கொண்டிருப்பான்..
அன்று, "ஏன் அந்த பையனை அடிச்சே" எனக்கேட்டேன்.. அவன் கத்தி சொன்னான், அதுதான் அடிச்சேன்"
"என்ன கத்தி சொன்னான் "
"அவன் கத்தி சொன்னான், அடிச்சேன்"
எனக்கு புரியாமல் "அவன் எதை வேணா கத்தி சொல்லட்டும், அதுக்காக அவனை அடிப்பியா, என எச்சரித்து விட்டிருந்தேன்..
அப்போது விளங்காத "கத்தி" இம்முறை எனக்கு விளக்கப்பட்டிருந்தது..
"சரி, யூனுஸ்(?) -க்கு சாக்லேட் கொடுக்க மாட்டியா" என சக மாணவனை குறித்து கேட்டேன்.. "நோ , அவன் அதினா(?)கிட்ட ரோஹித்கிட்ட கத்தி போடுன்னு சொன்னான்.. சோ அவன்கிட்ட நான் கத்தி போட்டுட்டேன்" எனக்கூறினான்..
(?) -இதற்கு அர்த்தம் , அவர்களின் பெயர் எனக்கு அடிக்கடி மறந்து விடும்..இப்போதும் சந்தேகமாகத்தான் போட்டிருக்கிறேன்.. அந்த பெண்ணின் பெயரை மாற்றி நான் அஜீனா என சொன்னால் , "அஜீனாவா , அஜீனாவா" என ஒரு ஆசிரியரை போல கண்டிப்புடன் கேள்வி எழுப்பி கண்டிப்புடனேயே பெயரை திருத்தமாக சொல்லிக்கொடுப்பான்..
உடனே சரி, பேசுவீங்கன்னா அதுக்கு என்ன சொல்லுவீங்க எனக் கேட்டேன்.. "ஜோட்டி" எனக் கூறி கட்டை விரலை உயர்த்தினான்..(இவை இரண்டுக்கும் அர்த்தம் தேடியும் அவன் சொல்லும் அர்த்தத்தோடு பொருந்தவில்லை, உடன் படிக்கும் மாணவர்களின் வட்டார மொழி போல)..
நான் படிக்கும்போது உன் பேச்சு காய், உன் பேச்சு பழம் என்று சொல்லிக்கொண்டதுண்டு.. காய் என்றால் ஆள்காட்டி விரல் நுனியை நடு விரலால் பின்னுக்கு இழுத்து காட்டியும் , பழம் என்றால் ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் தவிர்த்து மற்ற விரல்களை மடக்கி காண்பிப்பது என இருக்கும்..
இவனின் தற்போதைய வகுப்பு வழக்கப்படி "ஜோட்டி" என்றால் கட்டை விரலை மட்டும் உயர்த்தியும், "கத்தி"என்றால் சுண்டு விரலை மட்டும் உயர்த்தியும் காட்டுவதாம்...
சாக்லேட் வாங்கிக்கொடுத்ததும், "இது ரோஹித்-க்கு (அவனையும் சேர்த்து), இது பெனிட்-க்கு, இது ஜெகனுக்கு , இது பிரணவ்-க்கு" என நான்கு சாக்லேட்களை பேக்-ல் போட்டுக்கொண்டான்..
பள்ளியிலிருந்து திரும்பியதும் , "சாக்லேட்ட ஃப்ரெண்ட்ஸ்-க்கு கொடுத்தியா" எனக்கேட்டேன்.. பிரணவ் மட்டும் வேண்டாம்னு சொல்லி வாங்கல , சோ அதை யூனுஸ்-கு கொடுத்துட்டேன்..
"யூனுஸ்(?)தான் உன்கூட கத்தி போட்டான்னு சொன்னே இல்லையா"எனக் கேட்க, சிரித்தவாறே சொன்னான், "சாக்லேட் கொடுத்ததும் ஜோட்டி சொல்லிட்டான்"...
:)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.