சிறு வயதில் பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், குளிப்பதற்கு அங்கு அருகிலுள்ள ஆற்றுக்கு என் பல கெஞ்சல் , அழுகையையும் மீறி என்னை உறவினர்கள் கூட்டி செல்வது வழக்கம்.. நகரத்தில் வாழும் பெண்களுக்கு , கிராமங்களில் உள்ள பெண்களை போல் லாவகமாக குளிப்பது முதல் உடை மாற்றுவது வரை அவ்வளவு எளிதில் வராது.. என் அழுகைக்கும் கெஞ்சலுக்கும் அதுதான் காரணம்..
ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களின் வற்புறுத்தல் நின்றே போனது.. பின்னர் உறவினர்கள் குளிக்க செல்லும்போது, ஆற்றை வேடிக்கை பார்க்க மட்டும் அவர்களுடன் சென்று வருவேன்..
என் பாட்டி வீட்டுக்கு சில வீடுகள் தள்ளிதான் என் கணவரின் வீடும் என்பதால், இப்போது என் கணவரும் பிள்ளைகளும் ஆற்றில் குளிக்க செல்லும்போது வேடிக்கை பார்க்க மட்டும் அவர்களுடன் (நேரம் கிடைக்கும் சமயங்களில்) செல்வேன்..
இந்த முறை ஒருநாள் சென்று அவர்கள் குளித்து முடித்ததும் , வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.. அப்போது என் மகனிடம் நடந்த உரையாடல்:
"தங்கம் , இந்த ஆத்துலதான் அம்மா , உன் வயசுல இருக்கும்போதெல்லாம் குளிக்க வருவேன், நான் மட்டும் இல்ல, அம்மம்மா கூட சின்ன வயசுல இந்த ஆத்துலதான் குளிப்பாங்க"..
"அப்போ, நான் எங்க இருந்தேன்"
"அப்போ நீ பிறக்கவே இல்ல தங்கம்"
உடனே கோபத்துடன் "ஏம்மா, அப்போ என்ன பிறக்க வச்சுருக்கலாம் இல்ல"
வந்த சிரிப்பை அடக்காமல் சிரித்து விட்டு, "டேய், அம்மாவே அப்போ பிறக்கலடா"
"அப்போ , அம்மம்மா இங்க வந்து குளிச்சது உனக்கு எப்படி தெரியும்"
அம்மம்மா , இதே ஊர்தான , இங்கதான குளிக்க வந்துருப்பாங்க, அதான் கெஸ்-ல சொன்னேன் என சொல்லப்போனால், அதற்கு மேல் கேள்விகளால் முடக்குவான் என்று , "அம்மம்மாதான் தங்கம் என்கிட்டே சொன்னாங்க" என கூறினேன்.
அந்த பதிலில் திருப்தியுற்றவன் அதற்கு மேல் அதை பற்றி பேசவில்லை..
அந்த தருணம் அவனின் பேச்சை ரசித்த தருணங்களில் ஒன்று :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.