புதன், 2 நவம்பர், 2016

கதை சொல்லி

என்றோ ஒருநாள் சொன்ன
கதையையே திரும்பத்திரும்ப
சொல்ல சொல்லிக் கேட்கிறாள்....

சொல்லுவதின் சலிப்போ ...
கேட்பதின் ஆர்வத்தை
தொட மறுக்கிறது.....


அசுவாரசியத்தோடு இறக்கப்பட்ட
கதாபாத்திரங்களோ அவள் நினைவில்
அமர்த்தப்பட்ட காட்சிகளின்படி
தத்ரூபமாக வாழ்கின்றன.....

சலிப்பு விழுங்கத் துடித்த
காட்சிகளையும்
கண்டிப்பு பூசிய
வார்த்தைகளைக் கொண்டு
பாந்தமாக உட்புகுத்துகிறாள்.....

இடையிடையே கதை சொல்லியும்
அவளானதால்தான் என்னவோ
முன்பை விடவும் ஜொலிக்கின்றன
கதாபாத்திரங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.