நேற்று மதியம் பிள்ளைகளுக்கு சுண்டல் குழம்பு ஊற்றி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தேன்.. சுண்டல் இருவருக்கும் பிடிக்காது.. பெண்ணோ என் மிரட்டலுக்கு பயந்து சாதத்துடன் நான் கொடுக்கும் சுண்டலையும் விழுங்கிக்கொண்டிருந்தாள்..
ஆரம்பத்தில் எனக்கு வேண்டாம்மா என கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்த மகனுக்கு சுண்டல் வெளியில் தெரியாதவாறு வைத்து 2,3 வாய் ஊட்டி விட்டேன்.. "இதுல சுண்டல் இருக்கு , இருக்கு" என்றே முகத்தை சுருக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் , "சரி, இனி சுண்ட...ல் போடாம வெறும் குழம்பு சாதம் மட்டும் தர்றேன்" என கூறினேன்..

ஆனால் திரும்பவும் சுண்டலை சாதத்தில் மறைத்து சேர்த்து கொடுத்ததை பார்த்து விட்டான்.. "இதுல சுண்டல் இருக்கு" என்று வாயை திறக்க மறுத்தான்.. "இல்ல தங்கம், இதுல இல்ல , நீ சாப்பிடு" என ஊட்ட போனவளிடம் , "பொய் சொல்றியா . என்கிட்டயே பொய் சொல்றியா, எனக்கு பொய் பேசினா பிடிக்காது , உனக்கு மட்டும்தான் பொய் பேசினா பிடிக்காதா, எனக்கும்தான் பிடிக்காது" என காட்டுத்தனமான கத்தியவனைப் பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போய் விட்டேன்..
சிறு விஷயத்துக்கு கூட பிள்ளைகள் ஆரம்பத்தில் பொய் பேசியபோது "எனக்கு பொய் பேசினா பிடிக்காதுல்ல, உண்மையை சொன்னா அம்மா மிரட்டி மட்டும் விட்டுருவேன், பொய் பேசினா அடிப்பேன், எங்கேயும் பொய் பேசக்கூடாது, நடந்ததை சொல்லிட்டு இனி அப்படி நடந்துக்க மாட்டேன்னு போயிரணும், life full -ஆ இதை நீ நியாபகம் வச்சுருக்கணும்"னு மிரட்டி அவர்களின் மனதில் பதிய வைத்ததுதான் அவனின் இந்த கோபத்துக்கு காரணம்..
அவனின் கத்தலில் மிரண்டு போய், என்ன சொல்லி சமாளிப்பது, நல்லதுக்குன்னா பொய் சொல்றது தப்பில்லை-னு ஒரு திருக்குறளை மேற்கோள்காட்டி சொல்லி விடலாமா....அப்படி சொன்னா , நாளைக்கு ஒரு பொய் சொல்லிட்டு அதுக்கு இதுதான் காரணம்னு ஒரு காரணத்தை தேடி சொல்லி ,நீதானே நல்லதுக்கு பொய் சொல்லலாம்னு சொன்னன்னு,இப்போ நான் சொன்னதை எடுத்துக் காண்பிப்பானோ(உண்மை, நாம் சொல்வதை நாமே மறந்தாலும் போட இப்போது உள்ள பிள்ளைகள் மறப்பதில்லை ) என நான் திக்கு முக்காடி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவன் கத்திக் கொண்டிருந்தான்..
"சரி இனி தரல, சாப்பிடு "எனக் கூறவும் , "அப்போ முதல்ல சுண்டல் அதுல இல்லேன்னு பொய்தான சொன்ன, ஓத்துக்கோ, பொய் சொன்னேன்னா ஓத்துக்கோ" எனக் கத்தினான்.. நான் உண்மையிலேயே அந்த சூழ்நிலைக்கு பயந்துதான் போயிருந்தேன்.. சின்ன பையன் இப்படி மிரட்டறானேன்னு கோபப்பட்டு "ஆமா, அப்படிதான்னு" அடக்கினா பொய் பேசறது தப்பில்லைனு நானே சொல்ற மாதிரி ஆகிடும்..
பின் அவனிடம் , "நீ நல்லது சாப்பிடணும்னு பொய் சொன்னேன்.. தப்புதான் இனி பொய் சொல்ல மாட்டேன்.. இனி சாப்பிடு "எனக்கூறவும் "அப்போ , ஒரு டைம் பொய் சொல்லிட்ட இல்ல , சோ நானும் ஒரு டைம் எப்பவாது பொய் சொல்லுவேன்" என அவன் கணக்கை ஆரம்பித்து விட்டான்..
பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்கள் சொல்லிக்கொடுக்கும் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த சம்பவம் திரும்ப நினைவில் நிறுத்தியது..
நேற்று இரவும் அவனின் பொய் கணக்கை நியாபகப்படுத்தினான்.. இனி எந்த சூழ்நிலையில் அவனின் ஒரு பொய் கணக்கு தீரப்போகிறதோ...
- ஷார்ஜா
3-11-2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.