நான்கு நாட்களுக்கு முன் மகனுக்கு கொதிக்கும் காய்ச்சல்.. அதன் எல்லாவித தாக்குதலாலும் துவண்டு போயிருந்தான்.. இரவு அவனுக்கு மருந்து கொடுத்து விட்டு , நெற்றியை தொட்டு பார்த்தேன்.. அவன் நெற்றியின் சூடு என் கையில் பிரதிபலித்தது.
எப்போதும் இல்லா விட்டாலும் அடிக்கடி இரவுகளில் பிள்ளைகளுடன் சேர்ந்து கடவுளை மானசீகமாக வேண்டுவது வழக்கம்.. அன்றும் கடவுளிடம் வேண்டும் போது , "சாமி,ரோஹித் காய்ச்சல் குணமாகனும்..,அவன் காய்ச்சலை வேணா எனக்கு கொடுத்துருங்க, அவனுக்கு குணமானா போதும்" என வேண்டினேன்..நான் வேண்டுவதை போர்த்தியிருந்த போர்வைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்..
இரு நாட்களுக்கு முன்பிருந்து எனக்கும் பெண்ணுக்கும் காய்ச்சல்.. அவனிடம் வெறும் இருமல் மட்டுமே தங்கியிருந்தது..
இன்று ஒரு விஷயத்தை அவன் கேட்டுக் கொண்டே இருக்கவே , "அம்மாவ தொந்திரவு பண்ணாத தங்கம், அம்மாவுக்கு காய்ச்சல் இல்ல , ரெஸ்ட் எடுக்க விடு" என்றேன்.. உடனே " போம்மா, நீ ஏன் சாமிகிட்ட உனக்கு காய்ச்சல் வரணும்னு வேண்டிக்கிட்ட, அதான உனக்கு காய்ச்சல் வந்துருச்சு" என சோகத்துடன் கூறினான்....
நீ சின்ன பையன் , உனக்கு காய்ச்சல் இருந்தப்போ எவ்வளவு கஷ்டப்பட்டே பார்த்தியா இப்ப நீ எழுந்து நடக்கற , வாமிடிங் எதுவும் இல்ல, அம்மா வளந்தாச்சு இல்ல , அம்மா சமாளிச்சுடுவேன்" என சொன்னேன்..
"போம்மா , உனக்கு தெரியல , சாமிட்ட உனக்கு காய்ச்சல் வரணும்னு வேண்டறதுக்கு பதிலா, காய்ச்சல் வீட்டுக்கு வெளில போகணும்னு வேண்டி இருந்தேன்னா , இப்ப காய்ச்சல் வெளில போயிருக்கும்ல " என சொல்லியவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..
அட ஆமால்ல, அப்படி வேண்டி இருந்தால் காய்ச்சல் வீட்ட விட்டு ஒரேயடியா ஓடி போயிருக்கும்ல =D =D =D ..
ஷார்ஜா
5-2-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.