புதன், 23 நவம்பர், 2016

அறிவுரை

"பில்டிங் செட்" வைத்து இரண்டு பேரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.. இடையில் ஏதோ கோபத்தில், நிகிதா அடுக்கி வைத்து இருந்த செட்-ஐ ரோஹித் தட்டி விட்டான்.. உடனே அழ ஆரம்பித்தவளை, "அழாத, அண்ணா "பேட் பாய்" அதான் இப்படி தட்டி விடறான்" என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன்..
உடனே ரோஹித், "நோ. அவதான் பேட் கேர்ள், யூ ஆர் எ பேட் கேர்ள், யூ ஆர் எ பேட் கேர்ள்" -னு அவளைப்பார்த்து சொல்லிக்கொண்டே இருந்தான்.. அதைக்கேட்டதும் "நான் பேட் கேர்ள்-னு அண்ணா சொல்றான்" என அழ ஆரம்பித்தாள்..
நீதான் ப...ேட் கேர்ள் இல்லையில்ல , பின்ன ஏன் அழற , நீ பேட் கேர்ளா இருந்தாதான் அவன் சொல்றதுக்கு feel பண்ணி வருத்தப்படணும், இல்லாம feel பண்ணி அழுதா, நான் பேட் கேர்ள்தான் -னு நீயே ஒத்துக்கறதா அர்த்தம்"-னு சமாதானம் பண்ணியதும் அழுவதை நிறுத்தி விட்டு, அவன் சொல்லிக்கொண்டு இருந்ததை கவனிக்காதது போல விளையாட ஆரம்பித்தது விட்டாள்..
ஆனால் இது புரிந்தும், இது போலான நான் கடந்து வந்த சந்தர்ப்பங்களில் சமாதானமாகாமல் மன உளைச்சலில் இருந்ததுதான் திடீரென நினைவுக்கு வந்தது..
"அறிவுரை சொல்வது ரொம்பவே சுலபம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.