எல்லோரும் வாழ்நாள்-ல ஒரு தடவையாவது ஆவிகள், பேய்கள் பற்றி சொல்லப்பட்டதை கேட்டு இருப்பீங்க..நானும் ஸ்கூல்-ல படிக்கிற காலங்கள்ல பேய் கதைகளை பத்தி நிறைய கேட்டு இருக்கேன்.. இன்னென்ன காரணங்களினால் பேய் பிடிக்கும் அப்படீன்னு சொல்லப்பட்ட காரணங்களும் பல..மஞ்சள் பூசி, மல்லிகைப்பூ வச்சுட்டு போனா பேய் புடுச்சுடும்.. அதுவும் மதியம் 1 மணி வாக்குல தனியா வெளிய போனா ஆவிகளும் நம்மை பின் தொடர்ந்து வரும் இப்படீன்னு அந்த காரணங்களை அடுக்கிட்டே போகலாம்.. அதனால தேர்வுகளினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மதியம் பள்ளி விடும் சமயங்களில் நானும் , என்னுடன் வரும் சில தோழிகளும் மிக வேகமாக ஒரு குறிப்பிட்ட காலியிடத்தை (இன்று நிறைய கட்டிடங்கள் அதை ஆக்கிரமித்து உள்ளன..) கடக்க ஓடும் ஓட்டம் குடியிருப்புகள் நிறைந்த இடத்திற்கு வந்தவுடன்தான் நிற்கும்.. சில சமயங்களில் தனியே அவ்விடத்தை கடக்கும் நிலை வரும்போது யாரோ பின்னால் வருவது போன்ற பிரம்மையும் என்னுடனே சேர்ந்து வரும்.. அந்த இடத்தை கடந்து வரும்வரை மனதுக்குள் அடிக்கும் படபடப்புக்கும் குறைவிருக்காது.. அந்த பேய் பிடிக்காமல் இருக்க கையில் கருப்பு வளையலோ அல்லது கருப்பு கயிறோ கட்டிக்கிட்டா அது நெருங்க பயப்படும் என்ற தகவலும் எங்களின் மேல் திணிக்கப்பட்டு இருந்தது..
அப்புறம் யாராவது இறந்தவர் உடலை கொண்டு செல்லும் காட்சியை பார்த்தாலோ, அல்லது யாராவது இறந்ததை பற்றி கேள்வி பட்டாலோ அந்த நினைவுகளின் அலைக்கழிப்பு அந்த நாள் முழுவதும் இருக்கும்.. எங்கள் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டதாக பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அறிவித்து , அந்த மாணவிக்காக மௌன அஞ்சலியும் செலுத்த வைத்து , பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள்... உடனே வீட்டுக்கு சென்ற நான், தனியாக வீட்டில் இருக்க பயப்பட்டு, மாலை என் சகோதரர் வரும் வரை வீட்டு வாசலிலேயே கதவை கூட திறக்காமல் உட்கார்ந்திருந்தேன்.. என் சகோதரர் வந்ததும் அவனை முன் விட்டு கதவை திறந்த பின்தான் உள்ளே சென்றேன்.. ஆனால் டிவி-களில் பேய் சம்பத்தப்பட்ட காட்சிகளையோ, சினிமாவையோ பார்க்க பயம் வருவதே இல்லை (ஒருவரை துணைக்கு இருக்க வைத்துதான்)....
கொஞ்சம் வளர வளர இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று மற்றவர்களின் சொல் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக நான் மாறிக்கொண்டு வரும்பொழுது, எங்கள் ஊரில் (நாகர்கோவில்) ஆவி அடித்து சிலர் இறந்ததாகவும், ஒருவருக்கு பேச்சு நின்று போனதாகவும் உள்ள செய்திகளும் என்னை வந்தடைய தவறவில்லை.. என் தந்தையும் அவர் பார்த்த ஆவிகளின் கதையையும், என் தாய் மாமன் மகன், என் கணவரின் வீட்டில் மாடியில் இருக்கும்போது பார்த்த ஆவியின் காட்சியையும் சொல்லும் போது அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மெல்ல துளிர் விடவும் ஆரம்பித்தது. அப்படி அவர்கள் கூறும் கதையை கேட்கும் ஆர்வம் ஆவலாகவும் மாறியது... இப்படி ஆவி , பேய் ஆகியவைகள் உள்ளன , இல்லை என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த என்னை, ஒன்றை முழுவதுமாக நம்ப வைக்கும் நாளும் வந்தது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.