திங்கள், 13 ஜூலை, 2015

அமானுஷ்யம்- 3

ஒன்றரை வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் (கோவையில்) நடந்த சம்பவம்...
அது ஒரு வெள்ளிக்கிழமை... என் அப்பா ஊருக்கு சென்று இருந்தார்.. என் தம்பி உள்அறையில் படுத்திருந்தான்.. நானும், என் அம்மாவும் என் மகனுடன் ஹாலில் படுத்திருந்தோம்.. அதிகாலை 5 மணி இருக்கும்...
விழிப்பு வந்ததும் சும்மா கண்ணயர்ந்து படுத்திருந்தேன்... அப்போது கதவின் தாழ்ப்பாளை பிடித்து யாரோ கதவை வேகமாக தள்ளுவது போன்ற சத்தம்.. உடனே என் அம்மாவும் திடுக்கிட்டு எழுந்தார்.. நான் என் அம்மாவிடம் மெதுவாக, அம்மா இப்ப சத்தம் கேட்டீங்களா என்றேன்.. அவரும் ஆம் என்று கதவை திறக்க செல்ல, உடனே நான் மறுத்து , படுத்திருந்த என் தம்பியை எழுப்பினேன்.... யாரோ கதவை இப்போ தள்ளினாங்கடா என்று.. உடனே அவன் கதவை திறக்க செல்ல, நான் மறுத்து திருடர்கள் வந்திருக்கலாம், ஒருவேளை அவர்கள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கலாம், நீ இப்போ வெளியில் செல்லாதே என்று தடுத்து நிறுத்தினேன்.. .அவனோ உடனே ஒரு அரிவாளை கையில் எடுத்துக் கொண்டு என் பேச்சையும் மீறி கதவை திறந்தான்.. அங்கு யாரும் இல்லை.. சிட்-அவுட் கேட்-உம் தாழ்ப்பாள் போட்டே இருந்தது..அவன் எல்லா இடமும் பார்த்து விட்டு, மாடிக்கும் சென்று பார்த்து விட்டு வந்தான்.. யாரும் இல்லை.. வேலைக்கு சென்றிருந்த என் இன்னொரு சகோதரன் வரவும் இரு மணி நேரம் இருந்தது.. ஊருக்கு சென்றிருந்த என் அப்பாவும் முந்தின நாள் இரவு 9 மணிக்குதான் அங்கிருந்து கிளம்பினார்.. இந்த நேரத்துக்குள் இங்கு வர முடியாது..கதவை தள்ளியது யார் என்ற யோசனையுடன் வீட்டில் வந்து படுத்து கொண்டோம்..
பின் இரு மணி நேரம் கழித்து வேலை விட்டு வந்த என் இன்னொரு சகோதரனிடம் சொன்னோம்.. அவனும் தான் இப்போதுதான் வருவதாக கூறினான்..
பின் என் தந்தை ஊரிலிருந்து 10 மணியளவில் வீட்டுக்கு வந்தார்..... யாரோ வந்து இன்று காலை கதவை தட்டினார்கள் என்று அவரிடம் கூறினேன்.. உடனே அவர் கதவின் பின் பக்கம் போய் கதவை சாத்தி கதவை தள்ளுவது போல் செய்து காட்டினார், இப்படிதானே என்று.. எனக்கு ஆச்சரியம்.. நான் என் அப்பாவிடம் கதவை தட்டினார்கள் என்றுதான் கூறினேன்.. ஆனால் அவரோ கதவை தள்ளியதை சரியாக சொல்கிறாரே என்று.. உடனே அவர் சொன்னார், நான்கைந்து வாரங்களாக வெள்ளி கிழமைகளில் இப்படி 5, 5.30 மணியளவில் யாரோ கதவை தள்ளுவதும், வெளியில் போய் பார்த்தால் யாரும் இருப்பதில்லை என்றும் கூறினார்.. உடனே வேலைக்கு சென்றிருந்த என் சகோதரனும், தன்னிடம் அப்பா இது பற்றி ஏற்கனவே சொல்லியிருப்பதாக ஆமோதித்தான்.. எனக்கு திரும்ப இதை பரீட்சித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பெருகியது.. அடுத்த வெள்ளி கிழமைக்காக காத்திருந்தேன்..
வெள்ளிக் கிழமை இரவே 4..45-க்கு அலாரம் வைத்துக் கொண்டு ஹாலிலேயே உறங்கினேன்..
அதிகாலை 4.45 மணி.. அலாரம் என்னை சரியாக எழுப்பியது... கதவு தள்ளப்படும் சத்தத்தை கேட்க படபடப்புடன் காத்திருந்தேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.