திங்கள், 13 ஜூலை, 2015

அமானுஷ்யம்- 5

படித்து கொண்டிருக்கும்போது திடீரென என் பின்னால் யாரோ ஜன்னலை கடந்து போவதை போல் இருந்ததால் திடீரென திரும்பி பார்த்தேன்..அதை எப்படி விவரிப்பது என தெரியவில்லை.. சினிமாவில் பேய் படங்களில் பின் பக்கம் பேய் நின்று கொண்டிருக்கும், ஆனால் திரும்பி பார்த்தால் எதுவும் இருக்காதல்லவா, அதே போல்தான்..யாரோ ஒரு உருவம் அழுத்தமாக என்னை கடந்து போவதை போல் உணர்ந்து திரும்பி பார்த்தேன்.. வெறும் இருட்டு மை போல இருந்ததைதான் பார்த்தேன்.. என் கணவரோ அல்லது அவரது சகோதரரோ அந்த பக்கம் வந்திருப்பாரோ என எண்ணி , கட்டிலுக்கு பின் புறம் உள்ள சிறிய இடத்தில் (ஜன்னல் பக்கத்தில் இருந்து யார் பார்த்தாலும் தெரியாத வண்ணம் ) அமர்ந்து புத்தகத்தை வாசிப்பதை தொடர்ந்தேன்..ஏனெனில் அப்போது இரவில் தூங்காமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் என் கணவருக்கு பிடிக்காது,அதனால்தான்.. கீழே உட்கார்ந்து கொண்டு படித்து கொண்டிருந்தேன்..அபோது ஒரு புதிய கர கரவென்ற சத்தம் கேட்டது.. முதலில் நான் அதை சரியாக கவனிக்கவில்லை.. சிறுது நேரம் கழித்து அந்த சத்தத்தை உணர்ந்தேன்.. திரும்ப அந்த ஒலி வந்தவுடன், என் கணவர் என்னை பயப்படுத்த விளையாடுகிறார் என நினைத்து அதை அலட்சியம் செய்தேன். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அந்த சத்தம் கேட்டதால் மின் விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் அது எழுப்பும் ஒலி என நினைத்து திரும்ப வாசிப்பை தொடர்ந்தேன்.. ஆனால் அந்த ஒலி சிறிது நேர இடைவெளி விட்டு விட்டு தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தது.. அது மின்விசிறியின் சத்தம் இல்லை என தெளிவு படுத்திக் கொண்ட பின் மெல்ல பயம் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.. அந்த சத்தம் கேட்கும் நேரங்களுக்கு உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.. முழுவதுமாக பயம் என்னை பற்றிக் கொள்ள உடனே ஜன்னலை பார்க்கவும் பயந்து கதவை திறந்து சிட்-அவுட்-ல் படுத்துக் கொண்டிருந்த என் கணவரை தேடி ஓடி, அவரை எழுப்பினேன்.. உடனே அவர் வந்து ஜன்னல் பக்கம் பார்த்து கொஞ்சம் சத்தமாக திட்டி விட்டு ஜன்னல் கதவை படாரென சாத்திக் கொண்டார்.. அதன் பிறகு சத்தம் கேட்கவில்லை..பிறகு எல்லாவற்றையும் கேட்ட பின் இப்படி சத்தம் கேட்டு பயந்த நிறைய பேருக்கு காய்ச்சலே வந்திருக்கிறது என சொன்னார் என் கணவர்.. அதன் பின் வந்த இரவுகளில் என் குறுகுறுப்பு புத்தி காரணமாக ஜன்னலை லேசாக திறந்து வைத்து திரும்ப பரீட்சித்து பார்க்க ஆரம்பித்து சிறிது நொடிகளிலேயே , பழைய அனுபவத்தால் பயந்து போய் மூடி இருக்கிறேன்.. 

இச்சம்பவத்தின் ஆரம்பத்தில் யாரோ பின்னால் கடந்து போனதை போல் உணரும்போதும், அந்த சத்தம் கேட்க தொடங்கும்போதும் ஆவி, பேய் என்ற எண்ணமெல்லாம் என் மனதில் துளியும் இல்லை.. 

இதில் இருந்து கண்டிப்பாக மறைந்த சில ஆன்மாக்கள் இவ்வுலகத்தில் உலவுகின்றன என்பதை தெளிவு படுத்திக் கொண்டேன்.. (ஆவியா வந்து பழி வாங்குமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது..ஏனெனில் பழி எல்லாம் வாங்காது என சொல்லமாட்டேன்..எதுவும் அனுபவத்தில் தெரியாத போது தெரியாது என சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்....

இதில் உங்களில் பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்.. ஆனால் எதுவும் அனுபவத்தில் வரும்போது குழப்பம், எதிர்வாதம் எல்லாம் நீங்கி போகும்..

(ரொம்ப த்ரில்லிங் ஆன சம்பவங்கள் எல்லாம் இருக்கும் என இந்த பதிவை எழுத சொன்ன நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.. ஆனால் உண்மையில் நடந்ததை எழுதியதால் த்ரில்லிங் உங்களுக்கு கம்மிதான்.. சரி, போட்டோ மூலமாவது சின்னதா பயப்படுத்தலாம்னு பார்த்தா, பயப்படுத்தறதை போல,ஆனால் இந்த பதிவுக்கு பொருத்தமான ஒரு போட்டோவும் அமையல, என்னத்த செய்ய......!!!!!)


இத்துடன் இப்பதிவு முற்றும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.