அதிகாலை 4.45 மணி.. அலாரம் என்னை சரியாக எழுப்பியது... கதவு தள்ளப்படும் சத்தத்தை கேட்க படபடப்புடன் காத்திருந்தேன்....
அந்த நேரத்தில் கடிகார முட்கள் நகரும் ஓசை மட்டும் தொடர்ந்து என் பயத்துடன் பயணம் செய்து வந்தது.. அடிக்கடி அலை பேசியை எடுத்து மணி சரிபார்த்து கொண்டிருந்தேன்..மணி 5 ஆகி விட்டது.. கதவு தள்ளப்படும் சத்தம் கேட்கவில்லை.. 5.30, 6.00 அப்படியே மெல்ல கண்ணயர்ந்தும் விட்டேன்.. திடீரென என் நினைவு பழைய கதவு தள்ளப்படும் ஓசைக்காக காத்திருந்ததை நினைவு படுத்த எழுந்தேன்.. நன்கு விடிந்திருந்தது.. காலையில் முதலில் பின்புறம் உள்ள கதவின் வழியாக வெளியே வருவதுதான் என் தாயின் வழக்கம்..வெளியில் வீடு கூட்டிக் கொண்டிருந்த அவர்களிடம் சொல்ல போனேன்.. அப்போது முன் வாசல் கதவை எதேச்சையாக பார்த்தால் அதன் தாழ்ப்பாளில் அருவாள் தொங்க விடப்பட்டிருந்தது..எங்கள் ஊரில் இரவில் வெளியில் செல்பவர்கள் கையில் இரும்பு எடுத்து செல்வர்.. அதனால் இப்படி கதவு தட்டப்படும் சத்தமும் தொடர்ந்து கேட்டதால் என் தந்தை இப்படி செய்திருக்கிறார் என அறிந்தேன்.. ஆனால் அவரிடம் அடுத்த வாரம் வைத்திருக்கலாம், நான் கடந்த ஒரு வாரமாக அந்த சத்தத்தை கேட்க காத்திருந்தேன் என கூறி சிறிய சண்டையும் போட்டு ஏத்து வாங்கியது தனி கதை..
இந்த சம்பவத்து பின்னும் ஆவி இருக்கிறதா , இல்லையா என விளங்காத நிலையிதான் இருந்தேன்.. ஆவி , பேய் ஆகியவைகள் உள்ளன , இல்லை என்ற இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்த என்னை, ஒன்றை முழுவதுமாக நம்ப வைக்கும் (நான் ஏற்கனவே கூறிய அந்த நாள்) நாளும் வந்தது...
நான் என் கணவர் வீட்டில் இருந்த நேரம்..என் மகனுக்கு 7 மாதங்கள்.. அப்போது மின் வெட்டு அதிகமாக இருந்த நேரம்..(இடையில் மின்வெட்டு நேரம் குறைந்து இருந்தது.. அதை வைத்து இப்படி சொல்கிறேன்).. இரவு 11 மணிக்கு கரண்ட் போனது..அதுவரை அவரின் சகோதரர்கள், அவர், நான் எல்லோரும் டிவி பார்த்து கொண்டிருந்தோம்.. என் கணவர் அறையில் படுத்தால் புழுக்கம் தாங்காது என சிட்-அவுட்-ல் படுத்துக் கொள்ள கிளம்பினார்.... அவர் கிளம்பியவுடன் நான் ஜன்னலை நன்கு திறந்து வைத்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.. ஜன்னல் இருக்கும் பக்கம்தான் தலை வைப்போம்..அவர் இருக்கும்போது இரவு நேரங்கள் ஜன்னலை திறக்க விட மாட்டார். அந்த பக்கம் வாழை மரங்கள் நட்டு இருந்தோம்.. என் கணவர் வீட்டுக்கு எதிரே இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம் இருந்தது.. என் தாய் வழி பாட்டி, தாத்தா எல்லோரையும் மற்றும் அவர்கள் குடும்பத்தாரையும் அங்குதான் அடக்கம் செய்து இருக்கின்றனர்.. அவர் வீட்டின் பின்புறம் அவரின் மாமா, அத்தை (தூரத்து உறவு) இருவரும் சமீபமாக இறந்திருந்தனர்..அந்த அத்தை தற்கொலை செய்து கொண்டார் என கூறுவார்கள்..அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அந்த வீடு காலியாக இருக்கும்.. அந்த வீட்டுக்கு பின்புறம் பெரிய பாறைகள்தான்.. என் கணவர் வீட்டுக்கு அருகில் நெருங்க வீடுகள் இல்லை..
12 மணி வரை தூக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்தேன்.. 12 மணிக்கு கரண்ட் வந்தது..ஆனால் ஜன்னல் சாத்த விரும்பவில்லை.. ஏனெனில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் திரும்ப கரண்ட் போகும்.. அப்போது நன்றாக தூங்கி கொண்டிருந்தால் புழுக்கம் தாங்காது எழும்ப வேண்டுமே என்ற நினைப்புதான்.. ஆனால் தூக்கமும் வரவில்லை.. என் மகனும் சிணுங்கி கொண்டிருந்ததால் அவனை மடியில் போட்டுக் கொண்டு புத்தகம் படித்து கொண்டிருந்தேன்.. சில நிமிடங்கள் கடந்த பின் என் பின்னால் யாரோ போவது போல் (ஜன்னலை கடந்து) நான் உணரவே திடீரென திரும்பி பார்த்தேன்.. பார்த்ததும் திடீரென அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து இறங்கினேன்...
மர்மம் தொடரும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.