திங்கள், 13 ஜூலை, 2015

நிறம்

நான் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துகொண்டிருந்த சமயம்.. சுதந்திரதினம் அன்று பள்ளிகளுக்கு இடையேயான குழு நடனத்துக்காக எங்கள் பள்ளியும் கலந்து கொள்வதாக இருந்தது..
ஒரு நாள் காலை வழிபாடு முடிந்ததும், எங்கள் பள்ளி தமையாசிரியை பிளஸ் ஒன் மாணவிகளை மட்டும் உட்கார வைத்து விட்டு பிளஸ் டூ மாணவிகளை வகுப்பறைகளுக்கு போக சொல்லி உத்தரவிட்டார்..(பிளஸ் டூ மாணவிகளை அரசு தேர்வு என்பதால் இதில் வாய்ப்பளிக்கவில்லை..) எங்களை மைதானத்தில் உட்கார வைத்து விட்டு அதில் சிவப்பாக இருந்த மாணவிகளை மட்டும் நடனப் போட்டிக்காக தேர்ந்தெடுத்து கொண்டு இருந்தார்...அப்போது, நான் எல்லாம் கருப்புதான, என்னை எங்க கூப்பிட போறாங்க என்று என் அருகில் உட்கார்ந்திருந்த தோழி சொன்ன வார்த்தை இன்னும் என் நினைவில் உள்ளது.. சிவப்பான மாணவிகளை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றவர்களை வகுப்புகளுக்கு அனுப்பி விட்டார்.... எவ்விஷயத்திலும் பாகுபாடு பார்க்க கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்து கொண்டது இன்னும் என் மனதை நெருடிக் கொண்டே இருக்கிறது..( அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு நடனம் நன்கு தெரிந்த இரு மாணவிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.. அதில் நடனம் நன்கு வராதவர்கள் ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டார்கள்.. தினமும் குறிப்பிட்ட நேரம் மற்றவர்களுக்கு வெயிலில் பயிற்சி அளிக்கப்பட்டதால் சுதந்திர தினத்தன்று அந்த மாணவிகளும் நன்றாக நிறம் குறைந்தே காணப்பட்டார்கள் என்பது கொசுறு செய்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.