நாகர்கோவில் செல்வதற்காக பேருந்து ஏற கோவை ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கு சென்றிருந்தேன் .. பேருந்து பயணத்தின் போது அருந்துவதற்கு மாசா (Maaza )வாங்க குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு அருகே இருந்த ஒரு சிறிய கடைக்கு சென்று 50 ரூபாய் கொடுத்து அக்குளிர்பானத்தையும், அவர் மீதி கொடுத்த 10 ரூபாவையும் பெறுக் கொண்டு பேருந்து ஏறினேன் ... இருக்கையில் அமர்ந்தவுடன் ஏதோ நியாபகம் வந்தவளாக அக்குளிர்பானத்தின் விலையை பார்த்தபோது 35 ரூபாய் என்றிருந்தது .. ஏனெனில் எப்போது வெளியூர் செல்வதாக இருந்தாலும் இதை வாங்கி செல்லும் பழக்கமிருந்தது.. 5 ரூபாய்தானே என்று விட மனமில்லை... 100 ரூபாயை எங்கேனும் தவறவிட்டால் கூட சில நொடி பதட்டம்தானிருக்கும் .. ஆனால் ஒரு ரூபாய் கூட ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்தால் அந்த சம்பவம் நம் நினைவுள்ளவரை நம்முடன் தொடர்ந்து வந்து இம்சிக்கும் ....
எனவே உடனே பேருந்திலிருந்து இறங்கி சென்று அக்கடைகாரரிடம் விலைக்கு அதிகமாக காசு எடுத்துக்கொண்டதாக கேட்டதும் , மறுபேச்சில்லாமல் 5 ரூபாயை சிரித்தவாறு திரும்ப தந்தார் .. உருவத்தை கொண்டு ஒருவரது குணத்தை மதிப்பிடக் கூடாது என நான் திரும்பவும் இவ்விஷயத்தில் கற்றுக்கொண்டேன்... ஏனெனில் அந்த அளவுக்கு ஒரு குழந்தை முகம் கொண்டவராக இருந்தார்...
எனவே உடனே பேருந்திலிருந்து இறங்கி சென்று அக்கடைகாரரிடம் விலைக்கு அதிகமாக காசு எடுத்துக்கொண்டதாக கேட்டதும் , மறுபேச்சில்லாமல் 5 ரூபாயை சிரித்தவாறு திரும்ப தந்தார் .. உருவத்தை கொண்டு ஒருவரது குணத்தை மதிப்பிடக் கூடாது என நான் திரும்பவும் இவ்விஷயத்தில் கற்றுக்கொண்டேன்... ஏனெனில் அந்த அளவுக்கு ஒரு குழந்தை முகம் கொண்டவராக இருந்தார்...
பின் அடுத்த ஒரு மாதத்தில் திரும்ப நாகர்கோவில் செல்ல நேர்ந்தபோது அதே கடையில் 100 ரூபாயை கொடுத்து அக்குளிர்பானம் கேட்டபோது அதையும் , மீதம் 60 ரூபாயும் கொடுத்தார். ஒருவேளை சுரிதாரில் சென்றதால் என்னை அடையாளம் தெரியவில்லையோ என்னவோ ... நான் இது 35 ரூபாய்தானே என்றதும் 5 ரூபாயை கொடுத்தார்.
இம்முறை ஆரம்பத்திலேயே என் பணத்தை பெற்றுக் கொண்ட திருப்தியில் பேருந்து ஏறினேன்... ஆனால் அத்திருப்தி மறுநாள் மதியம் வரைதான் இருந்தது...
இம்முறை ஆரம்பத்திலேயே என் பணத்தை பெற்றுக் கொண்ட திருப்தியில் பேருந்து ஏறினேன்... ஆனால் அத்திருப்தி மறுநாள் மதியம் வரைதான் இருந்தது...
மறுநாள் வேலை விஷயமாக கருங்கல் வரை செல்ல வேண்டி இருந்ததால் , அண்ணன் மகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினேன்... பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க தேவையான பணத்தை பர்சிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தேன்.. உடனே என் அண்ணன் மகள் உள்ளே இருந்த ஒரு 10 ரூபாய் தாளை சுட்டிக்காட்டி, இது செல்லுமா? காந்தி இருந்த நோட்டு மட்டும்தானே செல்லும் என கூற நான் குழப்பமடைந்தேன் .. அந்த நோட்டு முந்தின நாள் அந்த கடையில் இருந்து பெற்றது.. வீட்டுக்கு வந்தவுடன் என் அண்ணனிடம் கேட்டபோது இது பழைய நோட்டு, இப்போது செல்லாது, வேண்டுமானால் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என கூறினார் .. இதற்காக மெனக்கெட்டு வங்கிக்கு செல்ல வேண்டுமா என விட்டு விட்டேன்... ஆக இரு முறைக்கு 5 ரூபாயாக 10 ரூபாயை ஏமாறாமல் விட்டு விட்டேன் என்ற என் எண்ணம் தவிடு பொடியானது.
இதேபோல் வெட்டுவென்னியில் உள்ள சர்ச்சுக்கு செல்லும்போது தெருமுனையில் 45 ரூபாய்க்கு 3 மெழுகுவர்த்தி பாக்கெட்கள் வாங்கினோம். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அட்டைக்கும் மெழுகுவர்த்திக்கும் சம்மந்தம் இல்லாதது போல் சிறியதாகவும், 5 மெழுகுவர்த்திகள் மட்டுமே ஒரு பாக்கெட்டில் இருந்தன.. அட்டையில் 6 எண்ணிக்கை என போட்டிருந்தது. அட்டையை பிரித்து சிறிய மெழுகுவர்த்திகளை வைத்திருப்பது அப்பட்டமாக தெரிந்தது.திரும்பும்போது கேட்கவேண்டும் என பேசிக்கொண்டோம். ஆனால் அக்கடையில் வேறு ஒரு பெண்மணிதான் இருந்தார். அதனால் பேசாமல் வந்துவிட்டோம்.
ஒருமுறை பட்டணத்தில் ஒரு கடையில் ஆப்பிள் வாங்கி சென்றோம். வீட்டுக்கு சென்று பொட்டலத்தை பிரித்தபோது, நாங்கள் எடுத்துகொடுத்த பழங்கள் இல்லாமல் முக்கால்வாசி அழுகிய பழங்கள் இருந்தன. உடனே திரும்ப சென்று கேட்டபோது பொட்டலம் மாறிவிட்டது எனக்கூறி திரும்ப நல்ல ஆப்பிள்களை எடுத்து பொட்டலம் கட்டித் தந்தார்.
இப்படி நான் இம்முறை அங்கு பார்த்த சில சிறுவியாபாரிகள் ஏமாற்றி பணம் ஈட்டும் எண்ணம் கொண்டே இருந்தனர். ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை பற்றிய குற்றவுணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை.... எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய அளவுக்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் மாறி இருக்கிறார்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.