என் அனுபவத்திற்கு முன் இந்த பகுதியில் என் தந்தையின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...
என் தந்தையின் சிறுவயதில், அவரும் , அவர் நண்பரும் அக்கானி (பதனி) வாங்க சென்று நீண்ட நேரமாக திரும்பி வராத அவர் அண்ணனை (என் பெரியப்பா) தேடி மாலை 6.45 மணி அளவில் சென்றுள்ளனர்.. அது குறுக்கு வழி.. மழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது...கொஞ்சம் தள்ளி தள்ளி மரங்கள் உள்ள பகுதி.. அப்போது ஒரு பனை மரத்தின் கீழ் ஒருவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை , வெள்ளை தலை பாகை அணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்திருக்கிறார்.. கொஞ்சம் இருட்டிய நேரமாதலால் முகம் சரியாக தெரியவில்லை.. என் அப்பாவுடன் வந்த நண்பர் யார் என்று டார்ச் அடித்து பார்க்கலாமா என்று கேட்க, என் அப்பாவோ, வயதில் பெரியவரை போல் தெரிகிறார், அதனால் நாம் டார்ச் அடித்து பார்ப்பது அநாகரீகம் என்று மறுத்திருக்கிறார்.. அவர்கள் அந்த ஆள் நின்ற பனை மரத்தை கடந்து இரு அடி வைப்பதற்கு உள்ளாக, என் அப்பாவின் அண்ணன் வருவது தெரிய அங்கேயே நின்று பின்னால் திரும்பியிருக்கிரார்கள்.. அந்த ஆள் அங்கு இல்லை..அவர் உண்மையில் மனிதராக இருந்திருந்தால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தால் கூட கண்ணுக்கு தென் பட்டிருப்பார்..
பின் என் அப்பா, அவரின் நண்பர் , அவரின் அண்ணன் மூவரும் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினர்..வீட்டின் பின் வாசல் வழியாக வீட்டிற்குள் வந்து, வீட்டின் முன் முற்றத்தில் பேசி கொண்டு இருக்கும்போது , பின் வாசல் முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு மூன்று முறை மரண குரல் எழுப்பியிருக்கிறது.. பாட்டியும் , இவர்களும் சென்று பார்த்த பொழுது, குட்டி ஈன நிறைய நாட்கள் இருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த அந்த ஆடு நான்கைந்து ஆட்டு குட்டிகளை ஈன்று விட்டு இறந்திருந்தது.. அந்த ஆட்டு குட்டிகளும் இறந்தே பிறந்திருந்தன..
மர்மம் என்று நினைப்பவர்களுக்கு மர்மம் தொடரும்..
கதை என்று நினைப்பவர்களுக்கு கதை தொடரும்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.