கடந்த வாரம் ஒரு இடத்திற்கு செல்வதற்காக டாக்ஸி-யில் பயணித்தோம்.. டாக்ஸி ஓட்டுனர் ஒரு அரேபியர். சிறிது தூரம் சென்றவுடன் பக்கத்தில் ஒரு காரை ஒட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் காரை ஒட்டியபடியே இவரிடம் அரேபிய மொழியில் ஒரு இடத்திற்கு வழி கேட்டார்.. இவரும் டாக்ஸி-யை ஒட்டியபடியே அவருக்கு அவ்விடத்திற்கு போகும் வழியை இரு முறை கூறினார். அவரும் நன்றி கூறி விட்டு திரும்பிக் கொண்டார். அடுத்த சிக்னலில் நாங்கள் சென்ற டாக்ஸி-யும் , அதற்கு பின்னால் அவரது காரும் நின்றன. உடனே டாக்ஸி-யில் இருந்துஇறங்கிய ஓட்டுனர் பின்னால் இருந்த காருக்கு அருகில் சென்று அவருக்கு அவ்விடத்துக்கு போகும் வழியை தெளிவாக கூறினார். பின் சிக்னல் போடும் நேரம் வேகமாக வந்து டாக்ஸி-யில் அமர்ந்து ஓட்டத் தொடங்கினார்..இச்செயலுக்கு பின் அவர் மேல் எனக்கு மரியாதை கூடியது.. அதே நேரம் என் தந்தையின் நினைவும் எட்டிப் பார்த்தது.
என் அப்பாவும் இப்படித்தான்.. எங்கள் வீட்டில் நாங்கள் இருக்கும்போது யாராவது வழி கேட்டு வந்தால் அவருக்கு அவ்வீட்டிற்கு போகும் வழியை தெளிவாக கூறி அனுப்புவார்..அவ்வீட்டை அவர்களுக்கு கண்டுபிடிக்க முடியாது என தோன்றினால் உடனே வழி கேட்டு வந்தவரை நிற்க சொல்லி, சட்டையை போட்டுக் கொண்டு, வழி கேட்டு வந்தவர் , நானே போய்க் கொள்கிறேன் சார் எனக் கூறினாலும், இல்லை அதே எண்ணில் எக்ஸ்டென்சனிலும் வீடு உள்ளது, உங்களால் கண்டுபிடிக்க சிரமம், நான் வந்து காட்டுகிறேன் என அவரது வண்டியிலோ அல்லது அவர் நடந்து வந்திருந்தால் அவருடன் நடந்து சென்றோ வீட்டை காண்பித்து விட்டு திரும்பி வருவார்.. என் அப்பாவின் இது போன்ற பல செயல்கள் எங்களுக்கு பெருமையாக இருந்தாலும், வழி கேட்டு வந்தவர், நானே போய் கொள்கிறேன் சார் என இரு முறைக்கு மேல் கூறியும் என் அப்பா தானாக செல்லும்போது அப்பாவின் மேல் கொஞ்சம் கோபம் பிறக்கும்.. ஏனெனில் அப்பாவை, வழி கேட்டவர் தாழ்வாக எடை போட்டுவிடக் கூடாதே என்ற எண்ணம்தான் காரணம்.....அப்பா திரும்பி வந்தவுடன், அவர் மறுத்தும் நீங்கள் ஏன் கூட சென்றீர்கள் என்று அப்பாவிடம் கோபித்துக் கொள்வேன்.. ஆனால் இச்சம்பவத்துக்கு பின் அப்பாவின் மேல் எனக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு கூடிவிட்டது..சம்பத்தப்பட்டவருக்கு (வழி கேட்டு வந்தவர்களுக்கும், அப்பாவுக்கு சம்பந்தமுடைய எங்களுக்கும்) சில நேரம், இது போன்ற செயல்கள் அவசியமில்லாததாக தோன்றினாலும், மூன்றாம் மனிதர் இடத்தில் இருந்து பார்க்கும்போது மிக உயர்வானதாகவே தோன்றுகிறது...

Sorryppa, I love you Appa..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.