எண்ணக்கீற்றுகள் தொகுப்பு (9)
- வாழ்விலோ, தொழிலிலோ இடறி விழுந்தவரை பார்த்து கைக்கொட்டி சிரித்தோ அல்லது கை நீட்டி ஏசியோ காயப்படுத்தும் போது, நாம் இடறி விழுந்தபோது ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட காயங்களின் வடு கண்ணுக்கு தெரிவதில்லேலை நமக்கு.....
- அலட்சியங்களை அலட்சியப் படுத்துபவர்களுக்கு வாழ்வில் லட்சியங்களே இருக்காது.
- பெரும்பாலும் நாம் அன்பு என்ற நீரை ஊற்றி வளர்க்கும் நட்பு என்ற மரம் நமக்கு இளைப்பாறுதல் தேவைப்படும்போது நிழல் தருவதில்லை.. நாம் கவனிக்காமல் விட்ட அல்லது அலட்சியப்படுத்திய மரங்களே (நட்புகளே) நமக்கு ஆசுவாசம் தேவைப்படும்போது நிழல் கொடுக்கின்றன...... .
- வென்றவர் அனைவரும் தோற்றதுண்டு..
தோற்றவர் அனைவரும் வென்றதில்லை..
- நன்றி மறந்தவர்கள், நாம் அறிந்தவர்களுக்கு செய்யும் உதவியையும் நிறுத்தி விடுகிறார்கள்...
- நாம் ஒரு காரணத்தைக் குறித்து குறை கூறுபவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது
நம்மை குறித்துக் குறை கூற......!!!!
- ஒரு பாராட்டு பல பாராட்டுகளை பெற்றுத் தரவல்லது
- ஒரு புது பிரச்சனையோ, நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சனையோ திரும்ப கிளர்ந்தெழும்போது, அவை மற்ற எதிலும் மனதை செலுத்தவிடாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டேதான் இருக்கிறது.
- ஒரு விஷயத்தில் நம் மீது குற்றம் இல்லை என நம் மனதுக்கு தெரிந்தாலும், பிறரால் குற்றம் சாட்டப்படும் போது, எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணமே ஓரளவு நிம்மதியை மீட்டு தருகிறது.
- தற்கொலை என்பது கடக்க முடியாத பிரச்சனைகளால் எடுக்கும் முடிவல்ல, பிரச்சனைகளை கடக்க முடியாது என எண்ணும் எண்ணத்தால் எடுக்கும் முடிவே.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.