பழைய நண்பர்களை சந்தித்து, பழகிய அந்நாட்களை அசைபோடுவது என்பது சுகமான அனுபவம்... அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் ஒருவகையில் பாக்கியசாலிகள்.. ஏனெனில் அச்சந்திப்புகள் அவர்களுக்கு பழைய இனிமையான நினைவுகளுடன் சேர்ந்து இப்போது சந்திக்கும் தருணத்தையும் பின்னாளில் மலரும் அழகிய நினைவுகளாக அசை போட வைக்கும்... ஒவ்வொரு சந்திப்பும் அவர்களுக்கு வாழ்வின் சக்கரத்தை உற்சாகமாக ஓட்ட உதவும் ஊக்க பானமாக இருக்கும்...
அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி...நான்கு மாதங்களுக்கு முன் அவர் உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.. அப்பாவுக்கு எப்படியேனும் செல்ல வேண்டும் என ஆசை.. ஆனால் நலம் குன்றி இருந்த அவரின் உடல் நிலை அப்போதுதான் சீரடைய தொடங்கி இருந்தது.. ஆதலால் என்ன செய்வது என நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம்...
அவருக்கு பழைய நட்புகளை, உறவுகளை சந்திப்பது என்பது உற்சாகமூட்டும் விஷயம்.. அதற்கு தோதான திருமண நிகழ்ச்சிகள் அவர் பிறந்த ஊரில் நடப்பதாக இருந்தால் , குடும்பத்தில் எவ்வளவு முக்கிய வேலை இருந்தாலும் , அம்மா குடும்பத்தை பார்த்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் சென்று விடுவார்.. உடல்நிலை சிறிது முடியாமல் இருந்தாலும் அவரால் அந்த சந்தர்ப்பங்களின் போது வீட்டில் இருக்க முடியாது... இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கு செல்வதற்கு மிகவும் ஆவலாக இருந்தார்.. ஒருவர் அவருடன் செல்ல வேண்டும் என்ற நிலையில் அவரின் உடல் நிலை இருந்தது... எனக்கு வீட்டில் வேலை உள்ளது, பிள்ளைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன், நீ அப்பாகூட போயிட்டு வா என அம்மா கூறியதால் நான் அவரை அழைத்து சென்றிருந்தேன்...
அங்கு ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் குறித்தும், புதிய சங்க உறுப்பினர்கள் தேர்வு பற்றியும் மேடையில் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.. இந்த பக்கம் அமர்ந்து இருந்தவர்களில் சிலர் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து இருந்து தங்களின் குடும்பத்தை பற்றியும், வராத நண்பர்களின் நிலை குறித்தும் , இடையில் மரணம் அடைந்த நண்பர்களை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்...அப்பாவும் அவரின் பல நண்பர்களை சந்தித்து சந்தோசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.. சிலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தும் கொண்டிருந்தார்...அதில் ஒருவர் என்னிடம் , உன் அப்பாவை போல் நேர்மையான மனுஷனை என் சர்வீசில் பார்த்ததில்லை என சொன்னார்.... இதற்கு முன்னும் நான் என் அப்பாவுடன் வெளியிடங்களுக்கு செல்லும்போது வழியில் தென்படும் அப்பாவின் சில நண்பர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள். அப்போது அப்பாவை நினைத்து ஏற்படும் பெருமை இப்போதும் எட்டிப்பார்த்தது.... ஒரு முறை ஒரு பஞ்சாயத்து பள்ளிக்கூடத்துக்கு ஆய்வுக்கு சென்றபோது அப்பாவின் உயரதிகாரி அங்கு கூடுதலாக வாங்கி போடப்பட்டிருந்த டேபிள், சேர் மற்றும் பக்கெட் உள்ளிட்ட சாதனங்களை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டதாகவும், அவற்றை தன் எழுத்தின் மூலம் திரும்ப கொண்டு போய் வைக்க வைத்ததாகவும் இன்னொருவர் கூறினார்.... இப்போதும் சில விஷயங்களுக்காக பெட்டிசன் போடும் பழக்கம் அப்பாவிடம் உள்ளது என பெருமை பொங்க அவருக்கு திரும்ப கூறினேன்..
அங்கேயே வந்தவர்களுக்கு உணவும் தயாரிக்கப்பட்டு இருந்தது... உணவருந்தி கொண்டிருந்தபோது என் பக்கத்தில் அமர்ந்து இருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் என்னை பற்றியும் , நான் முன்பு வேலை பார்த்த இலாகாவில் உள்ள அவருக்கு தெரிந்த சில நபர்களை பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்.. தன் வீடு சேரன் மாநகரில் இருப்பதாக கூறினார்.. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என கேட்க எழுந்த வார்த்தையை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன்.. இந்த கேள்வியால் பிள்ளை இல்லாத சிலரது மனதை தெரியாமல் காயப்படுத்தியுள்ளேன்.. பின் வருத்தப்பட்டு அம்மாவிடம் புலம்பும்போது, முன் பின் அறியாத சிலரின் குடும்ப விவரங்களை நாம் கேட்க கூடாது .. அவர்களாக சொன்னால் கேட்டுக்கொள்ளலாம் , ஏனெனில் அதில் இழப்பு உள்ளவர்களுக்கு அவர்கள் மனதை அது காயப்படுத்தும் என அம்மா சொல்வார்..அதனால் இப்போது அந்த கேள்வியை முன் பின் அறியாதவர்களிடம் கேட்பது இல்லை... பின்னர் வீட்டுக்கு திரும்பும்போது அவரிடத்தில் புதிய உற்சாகம் குடி கொண்டிருந்தது....
இங்கு வந்திருக்க வேண்டிய சிலர் சில காரணங்களால் வர முடியாமலும் , போக விடப்படாமலும் இருந்திருக்கலாம்.ஆனால் அவர்களில் பலரின் எண்ணம் இச்சந்திப்பின் மீது மட்டுமே கூட இருந்திருக்கும்.. இதில் கலந்து கொள்ளாமல் விட்டத்தின் மூலம் ஒரு ஆரோக்கியமான, சந்தோசமான பொழுதை நிச்சயமாக தவற விட்டிருக்கிறார்கள்.. நல்லவேளை உடல்நிலையை காரணம் காட்டி அப்பாவை நாங்கள் நிறுத்தவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது...
வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பயணத்தின்போது தன்னிடம் வந்து பேசியவர்களை பற்றியும், மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்களைப்பற்றியு ம் அப்பா சொல்லிக் கொண்டு வந்தார் .. அப்போது என் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு குழந்தை இல்லை எனவும் , வேலை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் யாராவது குழந்தையை பற்றி கேட்டாலே மிகவும் மனமுடைந்து போவார் என்றும் கூறினார்.. நல்லவேளை நான் கேட்கவில்லையென நிம்மதியடைந்தேன்...
அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி...நான்கு மாதங்களுக்கு முன் அவர் உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.. அப்பாவுக்கு எப்படியேனும் செல்ல வேண்டும் என ஆசை.. ஆனால் நலம் குன்றி இருந்த அவரின் உடல் நிலை அப்போதுதான் சீரடைய தொடங்கி இருந்தது.. ஆதலால் என்ன செய்வது என நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம்...
அவருக்கு பழைய நட்புகளை, உறவுகளை சந்திப்பது என்பது உற்சாகமூட்டும் விஷயம்.. அதற்கு தோதான திருமண நிகழ்ச்சிகள் அவர் பிறந்த ஊரில் நடப்பதாக இருந்தால் , குடும்பத்தில் எவ்வளவு முக்கிய வேலை இருந்தாலும் , அம்மா குடும்பத்தை பார்த்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் சென்று விடுவார்.. உடல்நிலை சிறிது முடியாமல் இருந்தாலும் அவரால் அந்த சந்தர்ப்பங்களின் போது வீட்டில் இருக்க முடியாது... இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கு செல்வதற்கு மிகவும் ஆவலாக இருந்தார்.. ஒருவர் அவருடன் செல்ல வேண்டும் என்ற நிலையில் அவரின் உடல் நிலை இருந்தது... எனக்கு வீட்டில் வேலை உள்ளது, பிள்ளைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன், நீ அப்பாகூட போயிட்டு வா என அம்மா கூறியதால் நான் அவரை அழைத்து சென்றிருந்தேன்...
அங்கு ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் குறித்தும், புதிய சங்க உறுப்பினர்கள் தேர்வு பற்றியும் மேடையில் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.. இந்த பக்கம் அமர்ந்து இருந்தவர்களில் சிலர் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து இருந்து தங்களின் குடும்பத்தை பற்றியும், வராத நண்பர்களின் நிலை குறித்தும் , இடையில் மரணம் அடைந்த நண்பர்களை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்...அப்பாவும்
அங்கேயே வந்தவர்களுக்கு உணவும் தயாரிக்கப்பட்டு இருந்தது... உணவருந்தி கொண்டிருந்தபோது என் பக்கத்தில் அமர்ந்து இருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் என்னை பற்றியும் , நான் முன்பு வேலை பார்த்த இலாகாவில் உள்ள அவருக்கு தெரிந்த சில நபர்களை பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்.. தன் வீடு சேரன் மாநகரில் இருப்பதாக கூறினார்.. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள் என கேட்க எழுந்த வார்த்தையை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன்.. இந்த கேள்வியால் பிள்ளை இல்லாத சிலரது மனதை தெரியாமல் காயப்படுத்தியுள்ளேன்.. பின் வருத்தப்பட்டு அம்மாவிடம் புலம்பும்போது, முன் பின் அறியாத சிலரின் குடும்ப விவரங்களை நாம் கேட்க கூடாது .. அவர்களாக சொன்னால் கேட்டுக்கொள்ளலாம் , ஏனெனில் அதில் இழப்பு உள்ளவர்களுக்கு அவர்கள் மனதை அது காயப்படுத்தும் என அம்மா சொல்வார்..அதனால் இப்போது அந்த கேள்வியை முன் பின் அறியாதவர்களிடம் கேட்பது இல்லை... பின்னர் வீட்டுக்கு திரும்பும்போது அவரிடத்தில் புதிய உற்சாகம் குடி கொண்டிருந்தது....
இங்கு வந்திருக்க வேண்டிய சிலர் சில காரணங்களால் வர முடியாமலும் , போக விடப்படாமலும் இருந்திருக்கலாம்.ஆனால் அவர்களில் பலரின் எண்ணம் இச்சந்திப்பின் மீது மட்டுமே கூட இருந்திருக்கும்.. இதில் கலந்து கொள்ளாமல் விட்டத்தின் மூலம் ஒரு ஆரோக்கியமான, சந்தோசமான பொழுதை நிச்சயமாக தவற விட்டிருக்கிறார்கள்.. நல்லவேளை உடல்நிலையை காரணம் காட்டி அப்பாவை நாங்கள் நிறுத்தவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது...
வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பயணத்தின்போது தன்னிடம் வந்து பேசியவர்களை பற்றியும், மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்களைப்பற்றியு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.