சமீப செய்திகளில் எங்கும் நிறைத்து வழிந்து கொண்டிருக்கிறார் திரு.உமா சங்கர் ஐஏஎஸ்.... எதனால் என்ற செய்தி அறிந்திருந்தும் ஈடுபாடு காட்ட ஏனோ மனம் வரவில்லை நேற்று தந்தி டிவி-யின் "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியை யூ டியூபில் பார்க்கும் வரை....
அரசு அதிகாரங்களில் இருப்போர் மதத்தை மற்றவர்களுக்கு பரப்பக் கூடாது என்ற கேள்விக்கு அவரால் நியாயமான பதில் சொல்ல முடியவில்லை... அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவை முன்னிறுத்தி மட்டுமே அதற்கான பதில் கூற முற்படுகிறார்... அந்த பிரிவும் சாதாரண மக்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசு பொறுப்புகளில் உள்ளோருக்கு பொருந்தாது என்ற தெளிவும் அவரை தெளிவு படுத்தவில்லை...இதை விடுத்து அவர் இப்படி மாறுவதற்கான காரணங்களை குறித்து ஆராயும்போது உண்மையில் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது...
நேர்மையான அதிகாரியாய் இருந்த காரணத்தால் பல இடமாற்றங்களுக்கும், தற்காலிக பணியிடை நீக்கத்திற்கும், தகுதி , திறமைக்கேற்ற பணி கொடுக்கப்படாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.. மன அழுத்தம் உச்சத்தில் இருந்த சமயத்தில்தான் ஆறுதலுக்காக ஏற்கனவே தன் தாயாரின் மூலம் சிறிது பழக்கப்படுத்தப்பட்டிருந்த கிறித்துவ வேதபுத்தகத்தை கையிலெடுக்கிறார்.. அதை வாசிக்கும்போது அவருக்கு தேவைப்பட்ட ஆறுதல் அங்கு கிடைக்கிறது.. வேத புத்தகத்தில் உள்ள வாழ்க்கைக்குள் சுழன்று கொண்டிருக்கிறார்.. வெளியுல பிரச்சனைகளை பார்க்க பிடிக்காமல் அதில் இன்னும் ஊன்றி போகும்போது அதை மற்றவர்களுக்கும் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார்.. இது அவர் அந்த விவாதத்தின்போது பைபிளை எடுத்து அதில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டி பேசும்போதே நன்கு புரிந்தது.. பெரும்பாலும் கிருத்துவத்தில் அதிக நாட்டமிருந்து அதை தீவிரமாக பிரசங்கிப்பவர்கள் அப்போதுதான் மற்ற மதங்களிலுருந்து அதனுள் நுழைந்தவராகவே இருப்பர்... இப்படி வேறு எதிலாவது போய் ஆறுதல் தேடுமளவுக்கு அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் அவர் பந்தாடப்பட்டிருக்கிறார்..
ஆனால் வேதாகமத்தால் அவர் ஆறுதல் படுத்தப்பட்டிருக்கிறாரே ஒழிய முழுதாக இன்னும் மீண்டு வரவில்லை.. 25 வருட ஐஏஎஸ் சர்வீசில் தனக்கு ஐந்தரை வருடம் மட்டுமே தகுந்த வேலை பார்க்க விட்டிருக்கிறார்கள், மற்ற வருடங்களில் எல்லாம் நேர்மைக்காக தகுந்த பணி கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கி றேன் என்ற அவரின் வேதனையான விரக்தியான பேச்சே இதற்கு சான்று... மேலும் தாம் தலித் என்பதால்தான் தனக்குரிய அங்கீகாரம், அதிகாரம் கிடைக்கப்படவில்லை என்பதும் அவருக்குள் இருக்கும் வருத்தம்.. ஜாதி குறித்து அவர் சொல்லும் இக்கருத்து எனக்கு ஏற்புடையதாகப் படவில்லை..
இவரை பற்றி அறிந்துகொள்ளும்போது எனக்கு என் தந்தைதான் நினைவுக்கு வந்தார்.. அவரும் தம் பணிக்காலத்தில் நேர்மையாக இருந்ததால் பதவிக்குரிய வேலை கொடுக்கப்படாமல் அழைக்கழிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.. அப்போது ஆறுதலுக்கு திரு.உமா சங்கர் கிருத்துவத்தை கையிலெடுத்தது போல் இவர் மதுவை கையிலெடுத்து இருந்தார்.. என் எதிர்காலம் குறித்தோ , என் தம்பிகளின் எதிர்காலம் குறித்தோ அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கவலை இல்லை.. ஏனெனில் தாம் எந்த பாவமும் செய்யவில்லை, அதனால் தம் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என்ற எண்ணமே அதற்கு காரணம்.. அதைப் பல இடங்களில் தன் வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆதலால் குடும்ப கஷ்டங்களால் அவர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கவில்லை.. சில இடங்களுக்கு என் தந்தையுடன் செல்லும்போது அவருடன் பணிபுரிந்த சிலர் அவரின் நேர்மையை பற்றி பெருமிதமாக சொல்வர்.. அதே எண்ணிக்கைக்கு குறையால் சிலர், என்ன பதவி.. எப்படி இப்போது இருந்திருக்கலாம்.. பிழைக்கத் தெரியாத மனுஷனா இருந்துட்டார்மா என சொல்வர்... அப்போதெல்லாம் என் தந்தையின் பதில் "பாவப்பட்ட காசு என் பிள்ளைகளின் ரத்தத்தில் இல்லை" என்பதாகத்தான் இருக்கும்..... பின் தன் பதவிக்காலம் முடிந்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்துதான் அவர் மதுப்பழக்கத்திலிருந்து மீள முடிந்தது.. ஆனால் தனக்கு உரிய வேலை கொடுக்கப்பட்டிருந்தால் தன் அறிவுக்கு தமிழகம் முழுதும் அறியும் அளவுக்கான பெரிய பதவியில் வந்திருப்பேன் என்ற ஆதங்கம் இன்றும் அவருள் உள்ளது...
நேர்மையாக இருக்கும் ஒரு சிலர் கூட, அவர்களின் நேர்மை வேறு சில அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ பாதிக்கும் வண்ணம் இருந்தால், அவர்களால் தகுதிக்கு ஏற்ற பணி கொடுக்கப்படாமலும், தேவையற்ற இடமாற்றங்களாலும் அவதிக்குள்ளாகின்றனர்... நேர்மையின் பரிசான மன உளைச்சலை பெற்றுக்கொண்டு அதனால் ஓரிருவர் வேலையை விட்டே கூட செல்கின்றனர்.. வேலையை விடமுடியாத சூழ்நிலையில் உள்ள அவர்களில் ஒரு சிலர்,வேறு பல ஆறுதல் வழிகளைத் தேடுகின்றனர் அல்லது அதற்குள்ளேயே அடைபட்டு, இதை சகித்துக் கொண்டு நேர்மையை மட்டும் கைக்கொண்டு அந்த மன அழுத்தத்துடனேயே மனதளவில் நடை பிணமாகவே வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்..
நேர்மையான திறமையான அதிகாரியாய் இருந்ததால் பல அவதிகளுக்கு உள்ளாகி இன்று இந்த நிலையில் இருக்கிறார் திரு.உமா சங்கர் ஐஏஎஸ்.. இப்போது கூட தன் தகுதி, திறமைக்கேற்ற பணி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் உள்ளது.. தான் அதிக வேலை இல்லாமல் இருப்பதால்தான் பிரசங்கத்திற்கு செல்கிறேன், 14, 15 மணி நேரங்கள் உழைத்துக் கொண்டிருந்த தாம் வேலை இன்றி முடங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்..
ஆதலால் இப்போது எழும்பியிருக்கும் சர்ச்சையில் அவரை குறை கூறாமல் அதற்கு பின்னணியில் உண்டான காரணத்தை சரிசெய்ய முற்பட வேண்டும்.. ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை இந்த நாட்டில்...
ஊழலும் லஞ்சமும் இருக்கும் காலம் வரையிலும் இந்த உமா சங்கர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்..
அரசு அதிகாரங்களில் இருப்போர் மதத்தை மற்றவர்களுக்கு பரப்பக் கூடாது என்ற கேள்விக்கு அவரால் நியாயமான பதில் சொல்ல முடியவில்லை... அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவை முன்னிறுத்தி மட்டுமே அதற்கான பதில் கூற முற்படுகிறார்... அந்த பிரிவும் சாதாரண மக்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசு பொறுப்புகளில் உள்ளோருக்கு பொருந்தாது என்ற தெளிவும் அவரை தெளிவு படுத்தவில்லை...இதை விடுத்து அவர் இப்படி மாறுவதற்கான காரணங்களை குறித்து ஆராயும்போது உண்மையில் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது...
நேர்மையான அதிகாரியாய் இருந்த காரணத்தால் பல இடமாற்றங்களுக்கும், தற்காலிக பணியிடை நீக்கத்திற்கும், தகுதி , திறமைக்கேற்ற பணி கொடுக்கப்படாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.. மன அழுத்தம் உச்சத்தில் இருந்த சமயத்தில்தான் ஆறுதலுக்காக ஏற்கனவே தன் தாயாரின் மூலம் சிறிது பழக்கப்படுத்தப்பட்டிருந்த கிறித்துவ வேதபுத்தகத்தை கையிலெடுக்கிறார்.. அதை வாசிக்கும்போது அவருக்கு தேவைப்பட்ட ஆறுதல் அங்கு கிடைக்கிறது.. வேத புத்தகத்தில் உள்ள வாழ்க்கைக்குள் சுழன்று கொண்டிருக்கிறார்.. வெளியுல பிரச்சனைகளை பார்க்க பிடிக்காமல் அதில் இன்னும் ஊன்றி போகும்போது அதை மற்றவர்களுக்கும் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார்.. இது அவர் அந்த விவாதத்தின்போது பைபிளை எடுத்து அதில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டி பேசும்போதே நன்கு புரிந்தது.. பெரும்பாலும் கிருத்துவத்தில் அதிக நாட்டமிருந்து அதை தீவிரமாக பிரசங்கிப்பவர்கள் அப்போதுதான் மற்ற மதங்களிலுருந்து அதனுள் நுழைந்தவராகவே இருப்பர்... இப்படி வேறு எதிலாவது போய் ஆறுதல் தேடுமளவுக்கு அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் அவர் பந்தாடப்பட்டிருக்கிறார்..
ஆனால் வேதாகமத்தால் அவர் ஆறுதல் படுத்தப்பட்டிருக்கிறாரே ஒழிய முழுதாக இன்னும் மீண்டு வரவில்லை.. 25 வருட ஐஏஎஸ் சர்வீசில் தனக்கு ஐந்தரை வருடம் மட்டுமே தகுந்த வேலை பார்க்க விட்டிருக்கிறார்கள், மற்ற வருடங்களில் எல்லாம் நேர்மைக்காக தகுந்த பணி கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கி
இவரை பற்றி அறிந்துகொள்ளும்போது எனக்கு என் தந்தைதான் நினைவுக்கு வந்தார்.. அவரும் தம் பணிக்காலத்தில் நேர்மையாக இருந்ததால் பதவிக்குரிய வேலை கொடுக்கப்படாமல் அழைக்கழிக்கப்பட்டு இருந்திருக்கிறார்.. அப்போது ஆறுதலுக்கு திரு.உமா சங்கர் கிருத்துவத்தை கையிலெடுத்தது போல் இவர் மதுவை கையிலெடுத்து இருந்தார்.. என் எதிர்காலம் குறித்தோ , என் தம்பிகளின் எதிர்காலம் குறித்தோ அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கவலை இல்லை.. ஏனெனில் தாம் எந்த பாவமும் செய்யவில்லை, அதனால் தம் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என்ற எண்ணமே அதற்கு காரணம்.. அதைப் பல இடங்களில் தன் வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆதலால் குடும்ப கஷ்டங்களால் அவர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கவில்லை.. சில இடங்களுக்கு என் தந்தையுடன் செல்லும்போது அவருடன் பணிபுரிந்த சிலர் அவரின் நேர்மையை பற்றி பெருமிதமாக சொல்வர்.. அதே எண்ணிக்கைக்கு குறையால் சிலர், என்ன பதவி.. எப்படி இப்போது இருந்திருக்கலாம்.. பிழைக்கத் தெரியாத மனுஷனா இருந்துட்டார்மா என சொல்வர்... அப்போதெல்லாம் என் தந்தையின் பதில் "பாவப்பட்ட காசு என் பிள்ளைகளின் ரத்தத்தில் இல்லை" என்பதாகத்தான் இருக்கும்..... பின் தன் பதவிக்காலம் முடிந்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்துதான் அவர் மதுப்பழக்கத்திலிருந்து மீள முடிந்தது.. ஆனால் தனக்கு உரிய வேலை கொடுக்கப்பட்டிருந்தால் தன் அறிவுக்கு தமிழகம் முழுதும் அறியும் அளவுக்கான பெரிய பதவியில் வந்திருப்பேன் என்ற ஆதங்கம் இன்றும் அவருள் உள்ளது...
நேர்மையாக இருக்கும் ஒரு சிலர் கூட, அவர்களின் நேர்மை வேறு சில அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ பாதிக்கும் வண்ணம் இருந்தால், அவர்களால் தகுதிக்கு ஏற்ற பணி கொடுக்கப்படாமலும், தேவையற்ற இடமாற்றங்களாலும் அவதிக்குள்ளாகின்றனர்... நேர்மையின் பரிசான மன உளைச்சலை பெற்றுக்கொண்டு அதனால் ஓரிருவர் வேலையை விட்டே கூட செல்கின்றனர்.. வேலையை விடமுடியாத சூழ்நிலையில் உள்ள அவர்களில் ஒரு சிலர்,வேறு பல ஆறுதல் வழிகளைத் தேடுகின்றனர் அல்லது அதற்குள்ளேயே அடைபட்டு, இதை சகித்துக் கொண்டு நேர்மையை மட்டும் கைக்கொண்டு அந்த மன அழுத்தத்துடனேயே மனதளவில் நடை பிணமாகவே வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்..
நேர்மையான திறமையான அதிகாரியாய் இருந்ததால் பல அவதிகளுக்கு உள்ளாகி இன்று இந்த நிலையில் இருக்கிறார் திரு.உமா சங்கர் ஐஏஎஸ்.. இப்போது கூட தன் தகுதி, திறமைக்கேற்ற பணி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் உள்ளது.. தான் அதிக வேலை இல்லாமல் இருப்பதால்தான் பிரசங்கத்திற்கு செல்கிறேன், 14, 15 மணி நேரங்கள் உழைத்துக் கொண்டிருந்த தாம் வேலை இன்றி முடங்க வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்..
ஆதலால் இப்போது எழும்பியிருக்கும் சர்ச்சையில் அவரை குறை கூறாமல் அதற்கு பின்னணியில் உண்டான காரணத்தை சரிசெய்ய முற்பட வேண்டும்.. ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை இந்த நாட்டில்...
ஊழலும் லஞ்சமும் இருக்கும் காலம் வரையிலும் இந்த உமா சங்கர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.