ஒவ்வொரு வருட ஆரம்பத்தின்போதும் கிடைக்கும் டைரிகளில் அந்த வருட நிகழ்வுகளையெல்லாம் எழுதி விட வேண்டும் என எழுத தொடங்குவேன்.. மிஞ்சி போனால் ஒரு வார நிகழ்வுகள் மட்டுமே அதில் குடி கொண்டிருக்கும்.. மற்ற நாள் தாள்கள் எல்லாம் வெறுமையாகதானிருக்கும்.. ஒரு சில டைரிகளில் மட்டும் அதன் பிறகு ஓரிரு பக்கங்களில் ஏதுனும் வரவு செலவு கணக்கோ அல்லது முக்கிய விழாக்கள் குறிப்போடோ டைரி முடிக்கப்பட்டிருக்கும்..
டைரி எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவோடு கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் முக்கிய சம்பவங்கள், நினைவு கொள்ள வேண்டிய தருணங்கள் நிகழும்போதெல்லாம் அவற்றை என் டைரியில் எழுத்துக்களாக நிரப்பிக் கொண்டிருக்கிறேன்...
ஒவ்வொரு நாளிலும் நடந்த சம்பவங்களை எழுதியே ஆக வேண்டும் என்ற இந்த கட்டாயத்திற்கு காரணம் என் நியாபக மறதிதான்.. பல மனிதர்கள் தந்த ஏமாற்றங்களை , துரோகங்களை, அவமானங்களை எல்லாம் மறந்து விடுவேன், எப்போது தெரியுமா, அவர்கள் திரும்ப என்னிடம் பேச வரும்பொழுது.. அவர்கள் என்னிடம் சிரித்து பேசி விட்டால் அவேர்கள் முன் செய்த எல்லா கெட்டவைகளையும் மறந்து விடுவதில் எனக்கு நன்மையுமுண்டு, தீமையுமுண்டு..
நன்மை, அவர்கள் ஏற்படுத்திய மனக்காயங்கள் தரும் வலி அதன் பிறகு தெரிவதில்லை, அவை மனதிலிருந்து மறைந்து விடுவதால் நிம்மதியான மனசிலை சாத்தியமாகிறது..
தீமை, திரும்ப அவர்களிடம் இருந்தே அவற்றையே பெற நேரும்போது "எவ்வளவு பட்டும் புத்தி வரவில்லையே" , என என்னை நானே நொந்து கொள்ள வேண்டியும் உள்ளது..
மனக்காயங்களை தந்தவர்களை மன்னித்து மறந்து ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் ஏற்படுத்திய காயங்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த டைரி எழுதும் பழக்கம்..
இன்னொன்று கடந்த காலங்களில் நடந்த சில நல்ல சம்பவங்கள், சந்தோஷ நிகழ்வுகள் கூட யோசித்தால் மட்டுமே நினைவில் வருவதே..
நான் இதுவரை எழுதிய டைரிகளில் பாதியளவாவது சம்பவங்களை குறிப்பெடுத்து வைத்தது 2001-ம் வருட டைரியில்தான்.. எனவே அவற்றை திரும்ப படித்து பார்ப்பதால் அந்த வருடத்திய பல சம்பவங்கள் எல்லாம் மனதிற்கு அத்துப்படி.. கவலை, சந்தோஷம், நெகிழ்ச்சி என பல உணர்ச்சிகளை அந்தந்த நிகழ்வுகள் அந்த காலகட்டத்திற்க்கே நம்மை அழைத்து சென்று ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் அப்படியே அந்த உணர்ச்சிகளோடு நம் மனதை சேர்த்திருக்கும்.. அப்படி திரும்ப படிக்க நேரும்போது அந்த காலகட்டத்தில் இருந்த மன ஓட்டதிற்க்கே மனம் செல்வது ஒருவித சுகம்.. படித்து முடித்து வைக்கும்போது அந்த காலத்திலிருந்து இன்றைய காலகட்டத்திற்கு திடீரென அடி எடுத்து வைத்தது போல் ஒரு உணர்வு ஏற்படும்..
பல முந்தைய நாட்கள், இந்நாட்களை ஒப்பிடும்போது ஏக்கத்தை கொடுப்பவையாகவே இருக்கக் கூடும்...
கடந்த கால நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க ஒரு ஞாபகமூட்டி தேவை..
சில சினிமா பாடல்களும், சில இடங்களும், சில மனிதர்களும், சில நிகழ்வுகளும் ஞாபகமூட்டியாக இருந்து பல சம்பவங்களை நினைவூட்டினாலும், நம் வாழ்வை அலசி பார்க்க வைக்குமளவுக்கு ஒரு ஞாபகமூட்டி அவசியம் தேவைதான்....
"டைரி" அப்படி ஒரு சிறந்த ஞாபகமூட்டியாகவே எனக்கு படுகிறது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.